Tuesday, February 21, 2017

ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று

   ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று


         ஜானவாசம் (மாப்பிள்ளை விட்டார் தங்குமிடம் )

இடத்தில் தேவலோகத்தில் கிடைக்கும் அனைத்தும் எளிதாகக் கிடைத்தன. இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்கள் எப்படி
வந்தன என்ற ரகசியத்தை யாரும் அறியமுடியவில்லை.
எல்லோரும் ஜனகரின் பெருமையையே பேசினார்கள்.
  ஸ்ரீ ராமச்சந்திரர் எல்லாமே சீதையின் செயல் என அறிந்து
சீதை  தன்மேல்  வைத்துள்ள  அன்பால்  மிகவும் மகிழ்ந்தார்.
தந்தை தசரதரின் வருகை அறிந்து இரண்டு சகோதரர்களின்
இதயத்தில் ஆனந்தம் பொங்கியது.
ஆனால்  தயக்கத்தின் காரணமாக ரிஷி விஸ்வாமித்திரரிடம்
எதுவும் கூறவில்லை. ஆனால் தந்தையைப் பார்க்கவேண்டும்
என்ற ஆசை மனதில் இருந்தது.
விஷ்வாமித்திரர் இருவரின் பணிவையும் அடக்கத்தையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். மகிழ்ந்து இரண்டு சகோதரர்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டார்.
அவருடைய உடல் ஆனந்தமடைந்தது . கண்களில் அன்புடன் கூடிய ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவர் தசரதர் தங்கியிருந்த ஜானவாசத்திற்குச் சென்றார்.
அவர் சென்றது ஏறியே தாகம் எடுத்தவனிடம் சென்றதுபோல்
இருந்தது.
மகன்களுடன் ரிஷி விஷ்வாமித்திரர் வருவதைப் பார்த்து
தசரதர் மகிழ்ச்சியுடன் எழுந்தார். சுகம் என்ற சமுத்திரத்தின் ஆழத்தை அறியச் சென்றார்.


No comments: