ராமசரித மானஸ்--பாலகாண்டம் --எழுபத்தெட்டு.
அந்தப்புரத்துப் பெண்கள் ஜனகரின்
கடிதத்தைக் கையில் எடுத்து மார்புடன் அணைத்து
தங்கள் மகிழ்ச்சியே வெளிப்படுத்தினர்.
அரசர்களில் மென்மையான தசரதர் ராம-லக்ஷ்மனர்களின்
புகழையும் செயல்களையும் அடிக்கடி வர்ணித்துக்கொண்டிருந்தார்.
இதெல்லாம் விஷ்வாமித்திர முனிவரின் செயலே என்றனர்.
ராணிகள் அந்தணர்களை அழைத்து தானங்கள் கொடுத்தனர்.
அனைத்து அந்தணர்களும் ஆசிகள் வழங்கினர்.
பிறகு பிக்ஷுக்களை அழைத்து தானங்கள் வழங்கப்பட்டன.
"சக்கரவர்த்தித் திருமகன்கள் நால்வரும் சிரஞ்சீவியாக இருக்கட்டும்" என வாழ்த்தி அழகான ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர்.
ஆனந்தமாக பெரிய பெரிய முரசுகளை வாசித்தனர்.
எல்லோரும் இந்த செய்தியைக்கேட்டு தங்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
ராமரின் ஜன்மபூமி அயோத்யா அழகான நகரம்.
அன்பான நகரத்தில் அன்பு கூடியதால் மேலும் மெருகு கூடியது.
கொடிகள்,பதாகைகள்,திரைகள்,அழகான சாமரங்கள்
கடைத்தெருவில் அதிகமாகக் காணப்பட்டன.
தங்க கலசம், தோரணங்கள், மணிகள் கட்டிய அலங்காரத் திரைசீலைகள் ,மஞ்சள், துபங்கள் ,தயிர் ,அக்ஷதைகள் ,
மாலைகள் முதலியவைகளால் வீடுகள் அலங்கரிக்கப்பட்டு
மங்களமயமாக்கப்பட்டன.
சந்தனம் , கஸ்தூரி,கேசர், கற்பூரம் கலந்த நான்கு ரசப்பொருளால் தெருக்கள் மணந்தன.
மின்னல் போன்று ஒளிமிக்க ,
நிலவுமுகம் கொண்ட ,
மான்குட்டிகளின் விழிகள் கொண்ட ,
தன் அதிக அழகால்
மன்மதனின் மனைவியே நாணம்
அடையும்படியான அழகு மிக்க
சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து மங்களப் பாடல்கள் பாடினர்.
அரண்மனை அழகு உலகமே மோகிக்கும் அளவுக்கு இருந்தது.
அனேகவித அழகான மங்கலப் பொருட்கள் அழகை
அதிகப்படுத்திக்கொண்டிருந்தன.
அநேக முரசுகள் முழங்கப்பட்டன.
பாட் பாடகர்கள் குலப்பெருமைக்கான பாடல்கள் பாடினர்.
அந்தணர்கள் வேதங்களை முழங்கினர்.
அழகான பெண்கள் ரமாருடைய சீதையினுடைய அழகையும்
குணத்தையும் புகழ்ந்து பாடினர்.
அங்கு நாலாபக்கங்களிலும் ஆனந்தம் பெருக்கெடுத்தது.
தேவர்களின் சிரோமணியான
ராமர் அவதாரமெடுத்த
அந்த தசரதரின் அரண்மனை அழகை
வர்ணிக்க முடியுமா ?

No comments:
Post a Comment