Wednesday, February 15, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது


      ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது 

 அரசர் பரதனை அழைத்து , குதிரை ,யானை ,தேர் முதலியவைகளை அலங்கரிக்கும்படி கூறினார்.
 பரதன் மகிழ்ச்சியுடன் சென்று  குதிரை  லாயத்தின் தலைவரைக் கூப்பிட்டு  குதிரைகளை அலங்கரித்து
அழைத்துவர ஆணையிட்டான்.
பலவண்ணங்களில் உத்தமமான
 குதிரைகள் அழகாக காட்சி அளித்தன.
அனைத்துகுதிரைகளும்  மிகவும் அழகாகவும் ,
கம்பீரமாகவும் காட்சியளித்தன.
அவைகள் கால்கள் எரியும் இரும்பில்  மிதித்து
எழுவதுபோல் சஞ்சலமாக இருந்தன.
அவைகள் காற்றைவிட வேகமாக ஓடக்கூடியன.

அந்த குதிரைகளில் பரதனுக்கு ஒத்த வயதுடைய மிக அழகான அரசகுமாரர்கள் சவாரி செய்தனர்.
அவர்கள் கைகளில் பாணமும்வில்லும் இருந்தன.
இடுப்பில் மிகப்பெரிய
அம்பராத்தூண் கட்டப்பட்டிருந்தது.
எல்லோருமே தேர்ந்தெடுக்கப்பட்ட ,
மிக அழகான திறமைவாய்ந்த இளைஞர்கள் .
வீரனின் ஆடைகள் அணிந்து கொண்டு
போர்வீரர்கள்  காலாட்படைகள் ,
அனைவரும் அணிவகுத்து
நின்றனர்.
அனைவருமே வாட்போரில் நிபுணர்கள்.
அனைவரின் அணிவகுப்பும்
முரசுகளும் போர்முரசுகளும் ஒலித்தன.
தேரோட்டிக்கள் தேர்களை கோடி, தோரணம் ,பதாகைகள்
கொண்டு மிகவும்  லக்ஷணமாக அலங்கரித்திருந்தனர்.
அதில் அழகான சாமரங்களும் இருந்தன.
அதில் கட்டப்பட்டிருந்த மணிகள்
மிக இனிமையாக ஒலித்தன.
 
அந்த ரதங்களின் அழகு  சூரியதேவனின் ரத அழகை
பறித்துக்கொண்டதுபோல் இருந்தன.
அந்த தேர்களின் மிக அழகான
 கருப்பு நிறக் குதிரைகள்   பூட்டப்பட்டிருந்தன.
அந்த அலங்கரிக்கப்பட்ட தேர்கள்
முனிவர்களின் மனத்திலும்
ஆசைகளை உண்டாக்கின.




No comments: