ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தைந்து
ராமர் பணிவாக பேசினாலும் ,
பரசுராமரின் கோபம் தணியவில்லை.
ராமா!என் கோபம் எப்படி போகும் ?
இப்பொழுதும் உன் தம்பி என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. என்னுடைய கோடரியால் அவன் தலையை வெட்டாமல்
என் மனம் அமைதி அடையாது.
என்னுடைய கோடரியின் பயங்கர செயல்களைக் கேட்டு ,
ராணிகளின் கர்ப்பங்கள் கலைந்துவிடும் .
அந்த கோடரியைக் கையில் எடுத்து ,
கோபத்தை காட்டி என்ன பயன் ?
சிரம் வெட்ட கரத்தின் வேகம் தணிந்துவிட்டது.
ஆனால் கோபத்தால் நெஞ்சு எரிகிறது.
என்னுடைய குணம் மாறிவிட்டது.
என் மனத்தில் இந்த தயை எப்படி வந்தது?
இப்பொழுது இரக்கம் சகிக்க முடியா துன்பத்தை
சஹித்துக்கொண்டிருக்கிறது.
ராமா உங்களுடைய உருவத்திற்கு ஏற்ற
கிருபை , உங்கள் பேச்சின் மேன்மை பூக்கள் உதிர்வது போல் .
கிருபை காட்டுவதால் உங்கள் உடல் எரிகிறதென்றால்
கோபம் வந்தால் தான் நம்முடலைக் கடவுளே காப்பாற்றுவார்
என்று லக்ஷ்மன் கூற மீண்டும் பரசுராமருக்கு கோபம் வந்து
இவனின் தலையை வெட்டிவிடுவேன்.இவன் பணிவில்லாதவன்.பண்பில்லாதவன்.
ராமா! நீ சிவதுரோகி, சிவனின் வில்லை உடைத்து விட்டு
எனக்கே உபதேசம் செய்கிறாய் .
உன் தம்பி உன்னுடைய ஆதரவாலும் சம்மதத்தாலும் தான் இப்படி பேசுகிறான்.
என்னுடன் நீ போருக்குவந்து வெற்றிகொள்.
இல்லையென்றால் உன்பெயரை விட்டுவிடு.
ராமர் சிரித்துக்கொண்டார்.
தம்பி செய்த தவறு,
முனிவர் தன் கோபத்தை என் மீது
காட்டுகிறார்.
கோபமுள்ளவனை யாராவது வணங்குவார்களா ?
நிலவை ராஹு கூட தீண்டுவதில்லை. இவ்வாறு எண்ணிக்கொண்டே ,
முனிவரிடம் வெளிப்படையாக ---
"தாங்கள் தங்கள் கோபத்தை விட்டுவிடுங்கள்.
தங்கள் கையில் கோடரி உள்ளது.
என்தலை உங்களுக்குமுன்னால் .
உங்கள் கோபம் தணிய
உங்கள் செயலைச் செய்யுங்கள்.
நீங்கள் சுவாமி ,நான் தொண்டன். சுவாமிக்கும் தொண்டனுக்கும் போர் நடக்குமா ?
மேன்மைமிக்க அந்தணரே!
கோபத்தை விட்டுவிடுங்கள்.
உங்களுடைய தோற்றம் கையில் வில் அம்பு ,கோடரி போன்றவைகள் ஆகியவற்றைப்
பார்த்துதான் பாலகன் எதோ பேசிவிட்டான்.
அவனுடைய தவறு எதுவும் இல்லை.
அவனுக்கு தங்கள் பெயர் தெரியும் , ஆனால்
உங்களை அவன் அறியவில்லை.
தன் ரகுகுல பழக்கவழக்கப்படி
அவன் தங்களுடன் பேசியிருக்கிறான்.
நீங்கள் முனிவரின் தோற்றத்திலேயே வந்திருந்தால்
உங்களுடைய பாதங்களில் தலைவைத்து வணங்கி இருப்பான்.
தெரியாததால் தவறு செய்துவிட்டான்.
மன்னிக்க வேண்டும்.
அந்தணர் மனதில் அதிகமாக தயை இருக்கவேண்டும்.
நாங்களும் தாங்களும் சமமாக முடியுமா ?
கால் எங்கே? தலை எங்கே?
என்னுடைய ராமா என்ற பெயர் சிறியது.
உங்கள் பெயர் கோடரியுடன் சேர்ந்து பெரியது.
தேவரீர்! எங்களுடைய ஒரே குணம் வில் மட்டுமே.
தங்களிடம் நவநிதியான குணங்கள் உள்ளன.
அமைதி, தண்டனை,தவம், தூய்மை, மன்னிப்பு, எளிமை,
ஞானம் , அறிவியல் ஞானம், ஆஸ்தீகத்தன்மை ஆகிய நவ குணங்களால் உயர்ந்தவர் தாங்களே!
ஆனால் ராமர் அடிக்கடி பிரயோகித்த முனிவரே!அந்தணரே!
என்ற சொற்களால் மீண்டும்
முனிவருக்கு கோபம் அதிகமாகியது.
முனிவர் கோபமாக ,
"நீயும் உன் தம்பி போன்றே தான் இருக்கிறாய்" என்றார்.
நீ என்னை வெறும் அந்தணனாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறாய் .
நான் எப்படிப்பட்ட அந்தணன் என்பதைச் சொல்கிறேன்.
வில் ஆரம்பம், பாணம் யாகப்பொருள் ,என் கோபம் மிக பயங்கர நெருப்பு. நான்குவகைப்படைகள் யாகத்தில் போடப்படும் சமித்துக்கள், பெரிய பெரிய அரசர்கள்
பலிகொடுக்கப்படும் மிருகங்கள்.பலி மிருகங்களைப் போல்
இவர்களை என் கோடரியால் வெட்டிப்போடுகிறேன்.
இப்படிப்பட்ட கோடிக்கணக்கான ஜபத்துடன் கூடிய யாகங்கள் செய்துள்ளேன்.
ஸ்வாஹா!சொல்லுடன் அரசர்களின் பெயர்களை சேர்ப்பேன்.
என்னுடைய மகிமை அறியாமல் , என்னை அந்தணன் என்று
அவமதிக்கிறாய். வில்லை முறித்த தால் உனக்கு
தலைக்கனம் அதிகமாகிவிட்டது. உலகத்தையே வெற்றிகொண்ட அகங்காரம் வந்துவிட்டது.
ராமர் ,--"முனிவரே! உங்களது கோபம் மிகப்பெரியது,
எங்களுடைய தவறு மிகச் சிறியது. பழைய வில்.
தொட்டதும் உடைந்துவிட்டது.இதில்
என்னுடைய வீரம் ,ஆணவம் எதுவும் இல்லை". என்றார்.
பிருகுகுல திலகரே! உண்மையிலேயே அந்தணர் என்று அவமதித்தால் , உலகத்தில் நாங்கள் தலை வணங்கும் வீரர்கள் வேறு யார் இருக்கிறார்கள்.
எங்களுடன் போர் புரிய தேவர்கள், அரக்கர்கள், அரசர்கள்,
போர்வீரர்கள், பலத்தில் எங்களுக்கு சமமானவர்கள்
போருக்கு அழைத்தால் போரிடுவோம்.
காலனே வந்தாலும் போரிடுவோம்.
க்ஷத்திரியனாகப் பிறந்து , போரிட பயந்தால் ,
அந்த நீசனால் க்ஷத்திரிய குலம் களங்கப்பட்டு விடும்.
நான் எங்கள் குளத்தின் புகழுக்காக அல்ல , குலத்தின்இயற்கை குணத்தைச் சொல்கிறேன் ,
ரகு வம்சத்தைச் சேர்ந்தவன் எமனுடன் போர்புரியவும்
அஞ்சமாட்டான்.
உங்களிடம் அஞ்சுபவன் எல்லோரைக்காட்டிலும்
அச்சமின்றி வாழ்பவன் அதுதான் அந்தணர் குல மகிமை.
ராமரின் மென்மையான , ரகசிய பொருள் நிறைந்த
பேச்சால் பரசுராமரின் அறிவுத் திரை விலகியது .
பரசுராமர் ராமரிடம் சொன்னார்,--
ராமா!லக்ஷ்மிபதியே!பரசுராமர் வில்லை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். என் ஐயங்கள் போகட்டும்.
பரசுராமர் வில் கொடுக்க எடுத்தபோதே
வில் தானாகவே ராமரிடம் சென்றது.
பரசுராமர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அப்பொழுது அவருக்கு ராமரின் மஹிமை தெரிந்தது.
அவருடைய உடல் சிலிர்த்தது, ஆனந்தமடைந்தது.
அவர் இருகரம் கூப்பி , அன்பு ததும்ப ராமரிடம் சொன்னார்."ரகுகுலம் என்ற தாமரைவனத்தின் சூரியனே!
அரக்கர்கின் குலம் என்ற அடர்ந்த காடுகளை
அளிக்க வந்த அக்னியே!
நீங்கள் வாழ்க!
தேவர்கள், அந்தணர்கள், பசுமாடுகள் ஆகியவற்றை
காப்பவரே!நன்மை செய்பவரே! நீங்கள் வாழ்க!
ஆணவம்,மோகம்,கோபம் ,பிரமை
ஆகியவற்றை போக்குகின்றவரே !
நீங்கள் வாழ்க!
பணிவு, ஒழுக்கம்,கிருபை முதலிய குணக்கடலே!
சொல்லின் செல்வரே!நீங்கள் வாழ்க!
தொண்டர்களுக்கு சுகமளிப்பவரே!
எல்லா அங்கங்களும் அழகும் காமதேவனின்
அழகை ஏற்றவரே! நீங்கள் வாழ்க!
நான் என் வாயால் எப்படிப் புகழ முடியும் ?
மகாதேவரின் மனம் என்ற மானசரோவரில் நீந்தும்
அன்னமே! தாங்கள் வாழ்க!
நான் அறியாமையால் தங்களிடம் தகாதவார்த்தைகளை
கூறியுள்ளேன்.
நீங்கள் இரண்டு சகோதரர்களும் மன்னிப்பின்
ஆலயமான இரண்டு சகோதரர்கள்.
என்னை மன்னித்துவிடுங்கள்.
ரகுகுலத்தின் பதாகை போன்ற ராமரே!
தாங்கள் வாழ்க !
இவ்வாறு பரசுராமர் ராமரை வாழ்த்திவிட்டு ,
காட்டிற்கு தவம் செய்ய சென்றுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியைக்கண்ட துஷ்ட அரசர்கள் அஞ்சி .
கோழைகள் போல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பரசுராமரே தோல்வி அடைந்துவிட்டார். நான் அவமத்திதுவிட்டோமே என்ற பயத்தால் ஓடிவிட்டனர்.
தேவர்கள் முரசொலி எழுப்பினர். பூமாரி பொழிந்தனர்.
ஜனகபுரியின் ஆண்களும் பெண்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடைய அறியாமையால் ஏற்பட்ட பயம் நீங்கியது.
மிகவும் அதிகமான இசைக்கருவிகள் முழங்கின.
எல்லோரும் அழகான மங்கள அலங்காரம் செய்தனர்.
அழகான முகங்களும் இனிய குரல்வளமும் கொண்ட பெண்கள் ஒன்றுசேர்ந்து குழுக்கள் அமைத்து பாடத் தொடங்கினர்.
ஜனகரின் மகிழ்ச்சி வர்ணனைக்குள்
அடங்காததாக இருந்தது.
பிறப்பிலேயே ஏழையாக இருந்தவனுக்கு புதையல் பொக்கிஷம் கிடைத்தது போல் ஆனந்தமடைந்தார்.
சீதையின் பயம் போய்கொண்டே இருந்தது.
நிலவைக்கண்ட சக்ரவாகப் பறவைபோல் மகிழ்ச்சி அடைந்தார்.
ஜனகர் விஷ்வாமித்திரரை வணங்கினார் .
உங்கள் கிருபையால் தான் ஜனகர் வில்லை ஒடித்தார் .
இரண்டு ச்கொதரகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.
நீங்கள் எது நல்லதோ அதைச் சொல்லுங்கள் என்றார்.
முனிவர் சொன்னார் --வில்லை முரித்ததுமே விவாஹம் ஆகிவிட்டது. தேவர்கள், மனிதர்கள், நாகர்கள் எல்லோருக்குமே இது தெரியும் .
இருந்தபோதிலும் நீ உங்கள் குல வழக்கப்படி ,
அந்தணர்கள், வீட்டின் முதியோர், குரு ஆகியோரிடம் கேட்டு அவர்கள் சொற்படி நடந்துகொள் என்றார்.
ராஜா தசரதருக்கு அழைப்பு விடுக்க தூதர்களை அனுப்பு.
சரி என்று ஜனகர் உடனே அயோத்தியாவிற்கு தூதர்களை அனுப்பினார் .
எல்லா பெரியவர்களையும் அழைத்தார்.
அனைவரும் வந்தி அரசரை வணங்கினர்.
கடைத்தெரு, சாலைகள், வீடுகள், தேவாலயங்கள்,
நகரங்களின் நான்கு புறங்களும் நன்கு அலங்கரிக்க ஆணையிட்டார்.
எல்லோரும் மகிழ்வுடன் சென்றனர்.
பிறகு அரசர் வேலைக்காரர்களை அழைத்து
விசித்திரமான மண்டபம் அமைக்க ஆணையிட்டார்.
மிகவும் திறமைமிக்க அணைந்து மண்டபம் அமைக்கும் தொழிலார்களை அழைத்தார்.
அந்தணர்களை வணங்கி
காரியங்கள் செய்யத்தொடங்கினர் .
தங்கத்தாலான வாழைமரத் தூண்கள் அமைக்கப்பட்டன.
பச்சை மணிகளால் நேரான முடிச்சுகளுடன் தொடுத்த
அழகான மணிகள் உண்மையான மாநிக்கம்போன்றே இருந்தன. தங்கத்தாலான வெற்றிலைக்கொடி ,இலைகளுடன் அசலா ,நகலா என்று தேயாதபடி மிளிர்ந்தன.
கலைநயம் மிகுந்த தோரணங்கள் அமைக்கப்பட்டன.
மாணிக்கம், நவரத்தினங்களுக்கும் வர்ணம் தீட்டி தாமரை மலர்கள் செய்யப்பட்டன. வண்டுகள். பலவித வண்ணங்களின் பறவைகள், செய்யப்பட்டன. அவைகள் காற்றின் வேகத்தால் அந்த அந்த
பறவைகளுக்கு ஏற்றபடி ஒலிகளை எழுப்பின.
தொங்கலில் தேவதைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எல்லா தேவதை மூர்த்திகளும் மங்கள திரைவங்கள் பொடிகள் ஏந்தி நின்றன.
யானை முத்துக்கள் மிகவும் அழகாக இருந்தன.

No comments:
Post a Comment