Monday, February 4, 2019

பக வா ன் பக் தி

காலை வணக்கம் .

பகவான் பாதம் பணிந்து வணக்கம்.
பாரினில் பல ஞானங்கள்
பகவானின் ஞானம் அறிவதரிது ,
உடனடி  பயனறியா
 பயன் தரும் ஞானமல்ல .
பரிந்துரை ,கையூட்டு ,ஊழல் ,
உடனடி பயனறிந்து வாழும் இத்
தொல்லுலகில் பக்கவிளைவில்லா ,
தீர்வு பகவானின் அருளே.
பதவிகள் இருந்தும்
பல கோடி சேர்த்தும் ,
பகவானருள் இன்றி
படும்பாடு பெரும்பாடாகும் .
பாடு  பகவான்  புகழ் பாடு
பாரினில் பெறுவாய்
பக்க விளைவில்லா 
நிலைத்த மன-நிறைவு.

மருந்தில்லா வாழ்வு ,
பிணியில்லா வாழ்வு
மன நோயில்லா வாழ்வு ,
மன  சஞ்சலமற்ற வாழ்வு.
மடியும் வாழ்வின் மரண ஓலம்
மாற்ற மனித அறிவின் அறிவியல்.
பதவிநலம், பண நலம் ,உயர் நலம் ,
பகவானருளால் பெரும் ஞானம்
அறிவியில் உலகம் அதிர்ச்சி  அடையும்.
மருத்துவர் உலகம்   மறுத்து அனுப்பிய
தீரா  நோய்கள் ,மரண முடிவுகள்
 ஜபம் மாற்றும், தியானம்  வெற்றி பெறச்
செய்யும் ஜகத்தின் விந்தை தான்
சூக்ஷ்ம அறிவு.

Saturday, January 12, 2019

அறவழி

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்

அறவழி

வணக்கம் .
நண்பர்களே!
இறைவன் இருக்கிறான்
என்றே நம்புங்கள் .
இல்லை என்போர் 
கடவுளுக்கு பாலாபிஷேகத்திற்கு
எதிர்ப்பு.
திரைப்பட நடிகர் அட்டைப் பட வெட்டி வெளியே
(க ட் -அவுட் ) எதிர்ப்பு இல்லை.
சரிந்துவிரிந்து அடிபட்ட பாலாபிஷேக ரசிகன்
ஒவ்வொரு முறையும் அசம்பாவிதம் .
ஆனால் இதை மூட நம்பிக்கை என்று
வீராவேசமாக வீரமணி பேசமாட்டார்.
அறிவற்ற செயல் என்று எந்த அரசியல்
தலைவனும் கூறமாட்டான்.
ஊடகங்கள் செய்திவெளியிடும்
இப்படி கட் அவுட் பாலுக்கு ,
அசம்பாவிதத்திற்கு அறிவற்ற செயல் என்றே சொல்லாது.
தலைவிக்கு தற்கொலை
செத்ததற்கு நஷ்டஈடு.
அதையும் எதிர்க்க சட்டம் இல்லை.
தற்கொலை முயற்சி சட்ட விரோதம்.
பைத்தியக்கார உலகம் இது.
கடவுள் நம்மை ஆட்டிப்படைக்கிறார்.
மதிக்கிறோம் .நாம் வாழ்கிறோம் .மடிகிறோம் .
எதிர்கால சந்ததியினருக்கு
நல்லதை நயம்பட சொல்லுவோம்.
நல்வழிப்படுத்தும் பிரார்த்தனை ,தியானம் .
திரைப்படம் செல்ல காசு கொடுக்காத
தந்தையை எரிக்கும் மூட அறிவுகெட்ட
உணர்வைத் தடுக்கும்.
காமத் தை வெல்லும்.
புலன் அடக்கத்தை தரும் .
புண்ணியத்தை சேர்க்கும்.
அறவழி சிந்தனை வளர்க்கும்.
அன்பு வழி காட்டும் .

Wednesday, December 19, 2018

தயை =இரக்கம் =ரஹம் =மெர்ஸி

 ஞானக் கதிர்கள்  ஜைன ஆராய்ச்சிக்   கழகம்  வெளியிட்ட நூலில்  தமிழாக்கம் .ஹிந்தி மூலத்தில் இருந்து. 

   மனதில் இரக்கமில்லை என்றால் உனக்கு இதயமே இல்லை.
என அறிந்துகொள்.

   அமேரிக்கா  ஜனாதிபதி  ஆப்ரஹாம் லிங்கன்  தன்  நண்பருடன்  ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு பன்றி குட்டி ஒரு பள்ளத்தில் சகதியில் சிக்கியிருப்பதைப்  பார்த்தார். அவர் உடனே தன் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த பன்றிக் குட்டியை சகதியில் இருந்து வெளியில் எடுத்தார். கூட்டம் ஆரம்பிக்கும்
நேரம் குறைந்தது. அவருடைய ஆடை அழுக்காகிவிட்டது.
அவர் ஆடைகள் மாற்றாமல் கைகால்களைக் கழுவிக்கொண்டு கூட்டத்திற்கு நேரத்தில் சென்றார்.ஒவ்வொருவரும் அவர் ஆடை ஆளுக்கு சேறு பற்றியே விசாரித்தனர்.  நடந்த நிகழ்வறிந்து அனைவரும்
லிங்கனின் இரக்க  குணத்தைப் பாராட்டினர் .
அப்பொழுது லிங்கன் சொன்னார்--
அங்கு பன்றிக்குட்டி துடித்தது.அதனால் நான் செயல் படவில்லை. அந்த பன்றிக்குட்டியின் நிலை அறிந்து என் மனம் துடித்தது. நான் அதற்கா பள்ளத்தில் இறங்கவில்லை
எனது வேதனைத் துடிப்பைப்  போக்க பள்ளத்தில் இருந்து
எடுத்தேன். இப்படி மற்றவர் வேதனை கண்டு நாம் துடித்தல் தான்  இரக்க   இயக்கமாகும்.
  துளசிதாசர் :-
உங்கள் மனம்  துடித்தால் ,மற்றவர்கள் மேல் இரக்கம் வரும்.
உன்னை  யாராவது அடித்தால் தான் ,நீ மற்றவரை அடிப்பாய்.



இளைஞர்கள் சிந்திக்க

வணக்கம் நண்பர்கள் அனைவருக்கும் .
மனிதர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி
மனித வெறியர்கள் சுயநல மதத்தத்தலைவர்கள் ,
துணை ஜாதிகள் , அரசியல் வாதிகள் இன -மத -ஜாதி -பேதங்களை மட்டுமல்ல கடவுளையும் வீர சைவம் , சைவம் ,லிங்கக்கட்டி சைவம் ,வடகலை ,
தென்கலை , புரொட்டஸ்டண்ட் ,கத்தோலிக் ,சுன்னி சியா , லெப்பை , மதம் மாறியவர்கள் ,என அப்பாவி
மக்களை கூறுகளாக்கி வசதியாக வாழ்கிறார்கள்.
இதை அறிவுள்ள தொண்டர்கள் மூடத்தனமாக ஏற்று அடிவாங்குதல் ,கொலை செய்தல் ,மத இன
காக்க தற்கொலை ,போராட்டம் என அமைதியற்ற நிலை.தலைவர்கள் குளிர்சாதன அறை , குளிர் கால
வே.சாதனை மகிழுந்து இதை மக்கள் சிந்திக்க வேண்டும். பெரியார் அனைத்து மத மூடநம்பிக்கைகள் பற்றி சாடி இருந்தால் அவர் பூஜிக்கப்படவேண்டிய ஈ. வே .ரா.
கபீர்தாசர் உண்மையான சிந்தனை யாளர்.
ஹிந்து ,இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு பாடு பட்டவர்.பிறப்பால் அந்தணர்.
வளர்ப்பால் முகமதி யர் .
இரண்டு மதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
-அவர் சொல்கிறார் :- வேதம் ,குரான் படிக்கிறார்கள்.பூஜை,தொழுகை யில் ஈடுபடுகிறார்கள் . ஆனால் கடவுளை அறியவில்லை. மனித நேயமற்ற நிலையில்
ஏழைகள் மீது இரக்கமற்ற நிலையில்
ஊழல் ,லஞ்சம் 40%வாக்கில் ஆளும் கட்சியினர்
இதை சிந்திக்கா நாட்டுமக்கள் .இதை வறிய கவிஞர்கள் ,ஞானிகள் , சித்தர்கள் சொல்லி வருகின்றனர். சிந்திக்க வேண்டிய இளைஞர்கள்
சிந்திக்க வேண்டும்.
மத ,இன ,ஜாதி கலவரங்களில் ஈடுபடாமல்
மனித ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.
வையகம் வாழ்க .
வையகம் ஒருகுடும்பம் .
இதில் பங்காளிப் பகை , மதவெறி , மாற்றான் மனைவி மகனை கடத்தல், மாற்றாள் கணவனைக் கொன்று மனைவியாக ஏற்று காதல் மஹால் கட்டுதல், மாற்று மத ஆலயங்கள் நாச மாக்குதல் ,
துப்பாக்கி கலாச்சாரம் , குழந்தைகளை குண்டு துளைத்து இரக்கமின்றி கொலை .
இதன் விபரீதங்களை சிந்தித்து
வையகத்தை அன்பு ,அஹிம்சை ,அறச்செயல்களில்
ஈடுபடுத்துதல் தான் இளங்கலை ,முதுகலை ,
முனைவர் பட்டம் பெற்றோர் செய்யும் உயர் பணி .
நாடு தான் முக்கியம் .

Saturday, December 1, 2018

பணம்

காசேதான் கடவுளடா ,
அரசமரத்தடி பிள்ளயார்   ஏழைகள் இடம்.
வைரக்கிரீடம் வைத்தாலே அங்கே கூட்டம் .
ஆயிரம் கொடுத்தால் அண்மை  தரிசனம்
பொது தரிசனம் விரட்டல் தரிசனம் .
மூலஸ்தானத்துக்கு இரண்டடி முன்னாள் ரூபாய் நீட்டினால்
விரட்டா தரிசனம்.
அகவை 70 ,பணமே ஆண்டவன் அருள் என்றால்
அந்த அருளே வேண்டாம் .
விழுந்தாலும் பல கோடி உண்டியில் 

அவசரமாக செல்ல தூய கழிப்பிடமில்லை.
ஆலய மதில் சுவர் சுற்றி மூத்திர நாத்தம்
பழனி யில் பேருந்து நிலையம் இறங்கினால்
பழம் -பால்-பன்னீர்  மணக்கவில்லை ,
சிறுநீரே  மணக்கிறது.

Friday, November 30, 2018

விவசாய போராட்டம் விநாயகா


மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை
ஏரிகள் நிரப்பி அடுக்கம்
பொறியியல் கல்லூரி
கோயில் நில ஆக்கிரமிப்பு
என்று மாநிலத்தில் நடக்க
தில்லி சென்று போராட்டமாம்
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள்
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த சுய னல அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க
மக்களுக்கு இளைஞர்களுக்கு
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு
முடிவுகட்டு .

பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோடிக்கணக்கில் சிலை செய்து
உன்னை அவமானப்படுத்தி
ஆலயநிலங்கள் சிலைகள்
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை
அழிக்க வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு! மணல் கொள்ளை
நாட்டை மலடாக்குவோரும்
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.