Wednesday, December 19, 2018

தயை =இரக்கம் =ரஹம் =மெர்ஸி

 ஞானக் கதிர்கள்  ஜைன ஆராய்ச்சிக்   கழகம்  வெளியிட்ட நூலில்  தமிழாக்கம் .ஹிந்தி மூலத்தில் இருந்து. 

   மனதில் இரக்கமில்லை என்றால் உனக்கு இதயமே இல்லை.
என அறிந்துகொள்.

   அமேரிக்கா  ஜனாதிபதி  ஆப்ரஹாம் லிங்கன்  தன்  நண்பருடன்  ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு பன்றி குட்டி ஒரு பள்ளத்தில் சகதியில் சிக்கியிருப்பதைப்  பார்த்தார். அவர் உடனே தன் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த பன்றிக் குட்டியை சகதியில் இருந்து வெளியில் எடுத்தார். கூட்டம் ஆரம்பிக்கும்
நேரம் குறைந்தது. அவருடைய ஆடை அழுக்காகிவிட்டது.
அவர் ஆடைகள் மாற்றாமல் கைகால்களைக் கழுவிக்கொண்டு கூட்டத்திற்கு நேரத்தில் சென்றார்.ஒவ்வொருவரும் அவர் ஆடை ஆளுக்கு சேறு பற்றியே விசாரித்தனர்.  நடந்த நிகழ்வறிந்து அனைவரும்
லிங்கனின் இரக்க  குணத்தைப் பாராட்டினர் .
அப்பொழுது லிங்கன் சொன்னார்--
அங்கு பன்றிக்குட்டி துடித்தது.அதனால் நான் செயல் படவில்லை. அந்த பன்றிக்குட்டியின் நிலை அறிந்து என் மனம் துடித்தது. நான் அதற்கா பள்ளத்தில் இறங்கவில்லை
எனது வேதனைத் துடிப்பைப்  போக்க பள்ளத்தில் இருந்து
எடுத்தேன். இப்படி மற்றவர் வேதனை கண்டு நாம் துடித்தல் தான்  இரக்க   இயக்கமாகும்.
  துளசிதாசர் :-
உங்கள் மனம்  துடித்தால் ,மற்றவர்கள் மேல் இரக்கம் வரும்.
உன்னை  யாராவது அடித்தால் தான் ,நீ மற்றவரை அடிப்பாய்.



No comments: