Monday, December 11, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

  பகவானை  அறிய வழி என்பதை
 ஸ்ரீ கிருஷ்ணன்  கூறுவது;-

பக்தனுக்கு  வினை யாற்றுவதில் 
 வினைப்பலனில்  
கடுகளவிலும்  ஆசை
   இருக்கக் கூடாது.
  கர்மங்களில் ஈடுபடுவதால் 
கர்மபலனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
கர்ம பலனானால்
 ஆசைகள் அதிகரிக்கின்றன.
 பகவான் கர்மங்களுக்கும் 
ஆசைகளுக்கும் அப்பாற்பட்டவர்.
அவ்வாறே  பகவானின் வடிவை
அருளைப் பெற விரும்புபவர்கள்
ஆணவமற்று,ஆசையற்று  இருக்கவேண்டும்.
எந்த கர்மங்களும் கட்டுப்படுத்தக்  கூடாது.

     முமுக்ஷு என்று முடிக்கிறவனுக்குக்
கொடுத்திருக்கும் லக்ஷணங்கள் ,
அவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு
ஸாதனையில் உச்சிக்குப் போனவன் என்று
 
   தன்  தெய்வத்தின்  குரலில்  மஹா பெரியவா கூறுகிறார்.
அந்த முன்னாளைய முமுக்ஷுக்கள்  இதை அறிந்தே
கர்மங்களைச் செய்தனர்.
இப்படி தொன்று தொட்டு வரும் முறையையே
ஸ்ரீகிருஷ்ணர்    அர்ஜுனனுக்கு சொல்கிறார்.
 மனம் என்ற ஒன்று இல்லை
என்ற   நிலைக்கு  வரவேண்டும்.
 கர்மங்களில்  ஆசைகள் இருக்கக் கூடாது.

  மனிதர்களுக்கு  கர்மம் எது
?அகர்மம் எது ? என்று தெரிவதில்லை.
 ஞானிகளே   இவ்விஷயத்தில்   தெளிவடைவதில்லை.
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மங்களைப் பற்றியும் ,
கேடுகளில் இருந்து விடுபடுவது பற்றியும்   விளக்குகிறார்.

  நாம் செய்யும் கர்மத்தின் போக்கைத் 
தெரிந்து  கொண்டால் ,
விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரிந்துவிடும்.
இதில்  கர்மம்  என்பது 
 உடலால் நடைபெறும் செயல்களாகும் .

அகர்மம் என்பது ஞானத்தால் செய்யபடுவது.
  சரீர கர்மங்கள் சில இயற்கையாக ஏற்படுவது,
அதில் சில காலைக்கடன் போன்றவை
  கட்டாயம் கழிக்கக் கூடியது.
இதைத் தடுக்க முடியாது.
ஆனால்  பாலின  கவர்ச்சி என்பதைக்
 கட்டுப்படுத்தலாம்.
வீணாக ஒழிந்து ஒட்டு கேட்கக் கூடாது.
தீயவைகளைப்பேசி  பரப்பக்கூடாது.
என்று புலன்களைக் கட்டுப்படுத்தும் போக்கில் 
நாம்  நம் கர்ம வினைகளின் நல்ல
தீய போக்கை அறிந்துகொள்ளலாம்.

 மாற்றான் மனைவியை நோக்குதல் சரீர பாவம்.
  அவதூறு பொய்யாக பரப்புதல் நாக்கின் தவறு .
 இதை எல்லாம்  நாம்  தவிர்த்து  ஆசையில்லாமல்
இருப்பதையே  முமுக்ஷுக்கள் செய்து முக்திபெற்றனர்.
 ஞானம் பெற்றனர்.

 கண்ககள் நல்லவைகளைப் பார்க்கும் போது
 நம்  செயல் போக்கு நமக்கு உணர்த்தும் .
 தவறான பார்வை  கெட்டபார்வை என்பது
 எதைப்    பார்க்கக் கூடாதோ அதைப்பார்ப்பது.
 ஞானத்தால் செய்யப்படும்    செயல்  அறிந்தே   செய்யப்படுவது.

அறிந்தே செய்யப்படும் காரியங்களின்
போக்கில்   நமது தீய வினை  புரிந்து விடும்.

ஊழல் புரிந்து பணம் சேர்ப்பது , அறிந்து பொய் பேசுவது ,

கையூட்டு பெறுவது, கடமையில்  கவன மின்மை,

 அலட்சியப்போக்கு , நேர்மையற்ற செயல் இவை
 தெரிந்தே   செய்வது. இதில்  வெற்றி  கிட்டினாலும் 
ஆண்டவனின்  தண்டனையில் இருந்து தப்ப    முடியாது.


ஆகையால் நமது வினைகள் உடலாக இருந்தாலும் சரி ,
அறிவால்  செய்யப்படும்  கர்மமானாலும் சரி 
அதன் தன்மையை ஸ்ரீ கிருஷ்ண பகவான்   அறிந்து
அதற்கேற்றபடி    அருள் புரிவார்  என்பதே
இந்த கர்ம   வினைப்  பயனாகும்.

கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில்  கர்மத்தையும் காண்போன்  மக்களுள்  மேதாவி.
அவனே  யோகி.
அவனே   எல்லாம்  செய்து  முடித்தவன் .
என்று ஸ்ரீ பகவானே அர்ஜுனனுக்குத் 
 தெளிவு படுத்துகிறார்.

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை 

  வழிபடுவது என்பது  எளிதல்ல.
ஒவ்வொருவரும்  ஆண்டவனிடம்
ஒவ்வொருவித  வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு  பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை  அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின்  கருணை    என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான்  அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின்  கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி  சரணம் . நானே உன்    குழந்தை .
எனக்கு  நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே   மாயை.
கர்மவினைப்படி  இறைவா!
என்னைப்படைத்த  நோக்கம் அறிந்தவன்  நீ.
உன் விருப்பப்படி   என்னை    வழி நடத்திச்  செல்.
 என்று முற்றிலும் அவனை நம்பி 
   எவ்வித  ஆசையும் இன்றி  ஆத்மஞான  பிரார்த்தனை. முடியுமா ?
இதையெல்லாம் கண்காணித்தே 
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
 கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை  அளிக்கிறார்.

   தங்கள் கர்ம   பலனை  உடனடியாக  பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
 உலகில்  பணியாற்றியதும்  ஊதியம்
கிடைக்கிறது. 
  வழிபடாமல்  எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில்     இருக்கிறார்கள் .
 
 இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம்  .பலவிதத்தில் இறைவன்
 ஆராய்ந்து  உயர் ,  தாழ்     நிலைகளில் 
வைப்பதாக
 ஸ்ரீ கிருஷ்ண    பகவான்   தான் தான்
  அனைத்தும்   என்கிறார்.


  அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
 ஆகியவற்றின்  அடிப்படையில்     நான்கு 
வர்ணங்களைப்  படித்ததாகக்
கூறுகிறார்.  ஆனால் நிறம் கொண்டு  பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே  பிரிக்கிறார்.

ஞான கர்ம சந்யாச யோகம் --கீதா-௧.


ஞான கர்ம  சந்நியாச யோகம்.௧.


ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யோகத்தை 
 விவஸ்வானுக்கு  கூறியிருந்தார்.


இதை  விவஸ்வான் மனுவுக்கு கூற ,
மனு இக்ஷவாகுக்குக்  கூறினான்.
விவஸ்வான்  சூரியன்.
மனு ஸ்ம்ரிதியை  இயற்றியவர்.
மனு தன்  புத்திரன்  இக்ஷவாக்குக்குக் கூறினான்.
இக்ஷவாகு சூரியகுலத்தின்   முதல் அரசன்.
 இந்த ஞான கர்ம சந்நியாச யோகம்
இகபரஸௌபாக்கியத்தை  அளிப்பது.
வையகம் காக்கும்  பூபாலகர்களுக்கு  வலிமை தருவது.
இது பரம்பரையாக  வந்துள்ள ராஜரிஷிகளுக்கு
தெரிந்திருந்தது. காலப்போக்கில் வழக்கழிந்த  இந்த
யோகத்தை  பக்தனும் தோழனுமாகிய
அர்ஜுனனுக்கு  ஸ்ரீ க்ரிஷ்ணபரமாத்மர்
மீண்டும் உபதேசித்தார்.
இந்த யோகம் தகுதியில்லாதவர்களுக்கு 
என்றைக்கும்
மறை பொருளாகவே  இருக்கும்.

அர்ஜுனனுக்கு சந்தேகம்.
ஸ்ரீ கிரிஷ்ணருக்கு முன்பே
விவஸ்வான்  பிறந்துள்ளான்.
அவருக்குப்பின்பே பிறந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு எப்படிக் கூறியிருக்க முடியும்.?

அர்ஜுனனின் ஐயம் போக்க  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறினார் :-

நானும் பல பிறவிகள் எடுத்துள்ளேன்.
நீயும் பல பிறவிகள் எடுத்துள் ளாய்.
அனைத்தும் அறிந்தவன்  நான்.
அவதார புருஷனாகிய கிருஷ்ணருக்கு
அனைத்தும் தெரியும்.
ஸ்ரீ கிருஷ்ணர்  இறைவன்.
இறைவனுக்கு பிறப்பும் இல்லை.
இறப்பும் இல்லை. ஆனால்
அவர் அவதரிப்பதன் அதிசயம் ஏன்?
என்று நாம் நினைப்போம் .
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே பதில் அளிக்கிறார்.
நாட்டில் ,உலகில்  தர்மம் அழிந்து அதர்மம்
தன்  எல்லை கடக்கும்போது
பாரதத்தைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர்

 ஆத்மமாயையால்   அவதரிக்கிறார்.
நல்லவர்களைக் காப்பதற்கும்
தீயவர்களை ஒழிப்பதற்கும்
தர்மத்தை நிலைநாட்டவும்
ஒவ்வொரு யுகத்திலும்
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரின்  தெய்வீகப்
பிறப்பை அறிந்தவர்களுக்கு
இவ்வுலகை விட்டு நீங்கிய பின் 
மறு பிறவி என்பதே இல்லை.
ஆசை ,பயம்,கோபம்  ஆகியவை
அவர்களிடமிருந்து
தானாக வெளியேறிவிடுகிறது.
அவர்கள் ஞானம் பெற்று ,
பவித்திர ஆத்மாக்களாக
இறைவனின் இயல்பையே அடைந்து விடுகின்றனர் .

என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
அர்ஜுனனிடம் கூறினார்.









Sunday, December 10, 2017

கர்மயோகம் ..பகவத்கீதா.௧௨

  அர்ஜுனன்  ஸ்ரீ  கிருஷ்ணனிடம்  மனிதன்
 விரும்பா விட்டாலும்
  ஈன  பாபச் செயலில் ஈடுபடுவது ஏன்?
 என்று  வினவ, பகவான் பகர்கிறார்..


      ரஜோ குணத்தில்  காமம் என்பது
   மிகவும் அபாயகரமானது.
  குரோதம்  அதனுடன்   இணைந்தால்
  பெரும் பாவம் செய்யத்   தூண்டி  விடும்.
 ஆகவே காமமும் குரோதமும்  எதிரி
என்பதைத் தெரிந்து கொள்.


 அவைகளை மனதில் இருந்து அகற்றி விடு.

  புகை சூழ்ந்த நெருப்பு,
 தூசி  படிந்த  கண்ணாடி ,
,கருப்பையினால் மூடிய சிசு,.

இவைகளைப் போல
 ஞானம் ஆசையினால்
மூடப்பட்டிருக்கிறது.
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.
 அதை அணைத்து விட வேண்டும்.
 கரு மேகம்  சூரியனை  மறைத்து  விடுகிறது.
அவ்வாறே காமம் என்ற மாயை
கடவுளை மறைத்து விடுகிறது.
ரஜோ குண ஆசை களை முயற்சி  செய்து  வென்று விடலாம்.

தமோகுண ஆசைகள் கருப்பையில்
இருக்கும் குழந்தை போன்றது.
அதைப்போக்க காலமும் ஆயத்தமும் அவசிய மாகிறது.


அதை சுத்தப்படுத்தவேண்டும்.
இந்த மாயைகள்   அகன்றால்
 ஞானமும் வைராக்கியமும் உண்டகும்.
அதன்  பயனால் பகவானின் தரிசனம் கிட்டும்.


  அதை அகற்றிவிட்டால் ஞானம் வந்துவிடும்.
ஐம்புலன்கள் ,மனம்,  அறிவு இவைகள் 
 காமத்திற்கு  இருப்பிடமாகிறது.

இவைகள்  ஞானத்தை  மறைத்து
அஞ்ஞானத்தை  வளர்க்கின்றன.

இந்த ஆசையை வெல்வது எப்படி?
ஐம்புலன்களை அடக்கவேண்டும்.
அதற்கு ஆசைகளை ஒழித்துவிடவேண்டும்.

ஐம்புலன்கள் இந்த  உடலை விட பெரியவை.
 மனம் அதற்கும்  மேலானது.
அறிவு மனத்தைவிட உயர்ந்தது.
அறிவுக்கும் மிக உயர்ந்தது ஆத்மா .
அந்த ஆத்மஞானம்  பெற
ஆசைகளைத் தூண்டும்
புலனறிவை அடக்கவேண்டும்.
 தேங்காய்  வேண்டும் என்றால்
மட்டையை உரிக்க வேண்டும்.
உடைக்க  வேண்டும்.
 உடைத்தபின் தேங்காய் ஓட்டிலிருந்து
உண்ணும் தேங்காய் பருப்பு எடுக்கவேண்டும் .
ஆசைகள் மட்டை,நார், ஓடு போன்றது.
மட்டை,நார் ,ஓடு  இவைகளில் இருந்தும்
அறிவைப் பயன்படுத்தி
புலன்களுக்கு  ஒரு  இன்பத்தை  ஏற்படுத்துவதே  ஆசை.
இவைகளைக்கடந்து  ஞானம் பெற  பற்றற்ற வாழ்வு ,
ஆசைகளை எல்லாம் ஒழித்துவிடும்
 வாழ்வைப் பெற வேண்டும்.
அறிவிலும்  மேலான ஆத்ம ஞானத்தால்
 காம,குரோத சத்துருக்களை
ஒழித்துவிட  வேண்டும். .
 கர்மயோகம்    இதுவே.










Thursday, December 7, 2017

கர்மயோகம்-பகவத்கீதை ---௧௧.11


   கர்மயோகத்தின்  கொள்கைகள் ,
சித்தாந்தங்களை  விடாது  
பின்பற்றுபவர்கள் 
பொறாமை ப்  படமாட்டார்கள்.
கர்மவினைகளிலிருந்து   விடுபட்டு
 பலன் எதிர்பாராத
கர்மங்களில்   ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் மனதில்  எவ்வித
சலனமும்  ஏற்படாது.
 இவ்வாறு கர்மயோகத்தில்
ஈடுபடுபவர்களுக்கு  பகவான்
அவர்கள் விரும்பியதை
அளித்து மகிழ்வார்.

பொறாமை ,பேராசை இரண்டுமே
மனதில்   உள்ளவர்கள் 
தன்னிடம் இல்லாத
மற்றவர்களிடம்  இருக்கும்
பொருள்கள்   தங்களிடம்  இல்லை என்றே
 வேதனையில்  மூழ்குவார்கள்.
அவர்கள் மூழ்கிய ஆழ்ந்த
ஆழத்தில் இருந்து 
வரவே முடியாது.

பகவானின்  கர்ம யோகத்தில்
 ஈடுபட்டவர்கள்
தீய எண்ணங்களில்
 இருந்து விடுபட்டு
பலனை     பகவானிடமே 
 ஒப்படைத்துவிடுவார்கள்.

இந்த இறைவனின் கோட்பாட்டை
 ஏற்காதவர்கள்
அறிவும் ஞானமும்  இல்லாத
 மூடர்களுக்கு
இணையாவார்கள்.

இயல்பான வாழ்க்கையில்
செயலாற்றுபவர்கள் ஞானிகள்.
அவர்களும்    தன் இயல்பான 
குணத்தை அறிவார்கள்.

நமது புலன்கள்  இயல்பாகவே
சில விருப்புகள் கொண்டவை.
மேலும் வெறுப்புகள் கொண்டவை.
நாம் புலன்களுக்கு அடிமையாகக்கூடாது.
நமக்கு    புலனடக்கம்  தேவை.
புலன்கள் நமது கர்மங்கள்,
 மானம் ,மரியாதைக்கு
எதிரிகள் .
 அவைகளை அடக்கியே
வைத்திருக்க வேண்டும் .


வள்ளுவரும்

ஆமைபோல் ஐந்தடக்கல் ,
ஆற்றில் எழுமையும்
ஏமாப்புடைத்து.--என்கிறார்.

நாம் நமது நமக்கு  என்ற
இயல்பான கர்மங்களைச்
 செய்யவேண்டும் .
நமக்கென்ற அறத்தில் செயலில்
மேன்மை   கிடைக்கும்.
 மற்றவர்கள் தர்மத்தில்  ஈடுபட்டால்
அச்சமே .
நாம் நம் சுய தர்மத்திலேயே 
 நிலைத்து  இருப்பது மேல்.

KARMAYOGAM BAGAVADGEETHA -10

கர்மயோகம் --பகவத்கீதை

         ஞானியின்  கடமை அனைவருக்கும்  மனதில்

ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே.
 ஞானியின் கடமை மக்களிடத்தில்
  மனக்கலக்கத்தை  ஏற்படுத்துவதல்ல.
ஞானி உலகியல் கர்மங்களில் ஈடுபட்டு ,
 மற்றவர்களையும்  ஈடுபடுத்த வேண்டும்.
ஆனால் ஞானி கர்மத்தை செய்யும்
போது   அதற்கான  பலனை  எதிர்பார்க்கக் கூடாது.

    இயற்கையாகவே   ஏற்படும்  குணங்கள்
 செயல்களை செய்விக்கின்றன.
  ஒருவனுடைய வெற்றிக்கு  காரணம்
அவனுக்கு இறைவன் இயற்கையாகவே
 கொடுத்த  திறமையாகும்.

 சிறந்த பாடகன் , ஓவியன் , மருத்துவன் ,எல்லாமே   இயற்கையாக  ஆண்டவன் அளித்த திறமைகள்.

ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த ஆசிரியர்
என்று பாராட்டுப்  பெறுவதில்லை,

சிறந்த ஆசிரியரிடம்  கல்வி பயிலும்
அனைவரும்   சிறந்த மாணவராவதில்லை.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும்
 அனைவரும்  புதிய  கண்டுபிடிப்புகள்
   கண்டு பிடிப்பதில்லை.

ஆ னால் சிலர் அகம்பாவத்தால்
 பெற்ற  வெற்றியைத்   தானே   என்று    கருதுகிறார்கள் .
இது சரியல்ல.

   ஆனால் ஞானி  குண தர்மத்தின்
 குணங்களின்  இயற்கை அறிந்து
 எதிலும் பற்றுவைப்பது  இல்லை.

   அன்பாக இனிய குரலில் பேசுவது 
அனைவராலும் இயலாத காரியம். 
சிலரைப்பார்த்தாலே  மரியாதை தோன்றும்.

சிலரைப்   பார்த்தாலே பயம் தோன்றும்.
 சிலரைப் பார்த்தாலே  கிண்டலாகப் பேசத்தோன்றும் .
சிலரைப் பார்த்தாலே வெறுப்பு தோன்றும்.
இவை   எல்லாமே   இறைவனாகிய கிருஷ்ணனின்
 குணப் படைப்புகள்.

இவைகளெல்லாம் ஞானிகள்  அறிவதால்
  அவர்கள் உலகில்  பற்று இல்லாமல்
 செயலில்  இறங்குகின்றனர்,

  இயற்கையால் உண்டாகும் மோகத்தால்   அதில் பற்றுவைப்பவர்கள்  மந்த புத்தி உள்ளவர்கள்.

ஞானிகள் இவர்களைத்  தெளிய வைப்பவர்கள் .
அப்படி இல்லாமல்  அவர்களைக்
கலக்கமடையச் செய்வது
ஞானிகளுக்கு  அழகல்ல.

 நாம்  செய்யும்   கர்மங்கள்  அனைவற்றுக்கும்
 பொறுப்பு  இறைவனே.
ஆகையால்  நாம் செயல்கள் ஆற்றவேண்டும் .
 நமக்குத் திறமையை  அளித்த  இறைவனே
நம் வினைகளுக்கேற்ற  பலனை அளிப்பான் என்று அவனிடமே   பலனை  ஒப்படைத்துவிட வேண்டும்.




Tuesday, December 5, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --9


உலகில்  உயர்ந்தவர்கள்,
சான்றோர்கள் ,
மகான்கள் செய்கின்ற ,
சொல்கின்ற, 
 சான்றளிக்கின்ற
உயர் செயல்கள் ,
எண்ணங்கள்
யாவும் உலகத்தினரால்
பின்பற்றப்படுகின்றன.
அனைவரும் மகான்கள்
ஆவது எளிதல்ல.
அதற்கு இறைவனின்
 கருணை வேண்டும்.
உயர்ந்த எண்ணங்கள்,
கருத்துக்கள்
வெளியிடுவது எளிது.
அதையே நாம் பின்பற்றுகிறோமா ?
காந்தியடிகள்
எந்த ஒரு செயலையும்
தானே செய்வார்.
அதைப்பார்த்து 
மற்றவைகள் செய்வார்கள்.
அவர் செய் சொல்லாதே
என்றே அனுசரித்தார்.
சாலையில்  உள்ள மலத்தின்
அசிங்கத்தைஅவரே கூடையில்
எடுத்து சுத்தம் செய்தார்.
 அவர் மாகான் .
கிருஷ்ணருக்கு  MOOVULAKILUM
கடமை ஏதும் கிடையாது .
அவருக்கு எந்த இலக்கையும்
அடையும்
தேவையும் இல்லை.
இருப்பினும் அவர் செயல்
ஆற்றிக்கொண்டே  இருப்பார்.
இறைவன் தன்னுடைய
கடமையை
செயலை சரிவர
செய்யவில்லை என்றால்
மக்களும் எதுவும்
செய்யமாட்டார்கள்.
மரணம் ,நோய் ,  இளமை , மூப்பு ,
என்ற கர்மங்களை
இறைவன் இடைவிடாது
 செய்வதால்  தான்
மனிதர்களும் கர்மங்களில்
ஈடுபடுகிறார்கள்.
இயற்கையே  இறைவன் என்றால்
சூரியன் THAN  கர்மாவை
கடமையைச் செய்கிறான்.
வருணன் மழைபோழிவிக்கிறான்.
வாயு பகவான் காற்று வீசுகிறான்.
கோடை, வசந்தம்குளிர் ,இலையுதிர்
காலம் என்று   செயலாற்றி
 கடமையைச் செய்கின்றது.
இப்படி மனிதர்களும்
தன்  கர்மங்களை
கடமையைச் செய்யவேண்டும்.
இறைவன் தன் கடைகளைச்
செய்யாமலிருந்தால்
இவ்வுலகமே செயலற்று அழிந்துவிடும்.

பற்றுள்ள  மனிதர்கள் மட்டுமல்ல
ஞானிகளும் தங்கள்
 கடமைகளைச் செய்யவேண்டும்.