Monday, December 11, 2017

ஞான கர்ம சந்யாச யோகம் --கீதா-௧.


ஞான கர்ம  சந்நியாச யோகம்.௧.


ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யோகத்தை 
 விவஸ்வானுக்கு  கூறியிருந்தார்.


இதை  விவஸ்வான் மனுவுக்கு கூற ,
மனு இக்ஷவாகுக்குக்  கூறினான்.
விவஸ்வான்  சூரியன்.
மனு ஸ்ம்ரிதியை  இயற்றியவர்.
மனு தன்  புத்திரன்  இக்ஷவாக்குக்குக் கூறினான்.
இக்ஷவாகு சூரியகுலத்தின்   முதல் அரசன்.
 இந்த ஞான கர்ம சந்நியாச யோகம்
இகபரஸௌபாக்கியத்தை  அளிப்பது.
வையகம் காக்கும்  பூபாலகர்களுக்கு  வலிமை தருவது.
இது பரம்பரையாக  வந்துள்ள ராஜரிஷிகளுக்கு
தெரிந்திருந்தது. காலப்போக்கில் வழக்கழிந்த  இந்த
யோகத்தை  பக்தனும் தோழனுமாகிய
அர்ஜுனனுக்கு  ஸ்ரீ க்ரிஷ்ணபரமாத்மர்
மீண்டும் உபதேசித்தார்.
இந்த யோகம் தகுதியில்லாதவர்களுக்கு 
என்றைக்கும்
மறை பொருளாகவே  இருக்கும்.

அர்ஜுனனுக்கு சந்தேகம்.
ஸ்ரீ கிரிஷ்ணருக்கு முன்பே
விவஸ்வான்  பிறந்துள்ளான்.
அவருக்குப்பின்பே பிறந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு எப்படிக் கூறியிருக்க முடியும்.?

அர்ஜுனனின் ஐயம் போக்க  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறினார் :-

நானும் பல பிறவிகள் எடுத்துள்ளேன்.
நீயும் பல பிறவிகள் எடுத்துள் ளாய்.
அனைத்தும் அறிந்தவன்  நான்.
அவதார புருஷனாகிய கிருஷ்ணருக்கு
அனைத்தும் தெரியும்.
ஸ்ரீ கிருஷ்ணர்  இறைவன்.
இறைவனுக்கு பிறப்பும் இல்லை.
இறப்பும் இல்லை. ஆனால்
அவர் அவதரிப்பதன் அதிசயம் ஏன்?
என்று நாம் நினைப்போம் .
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே பதில் அளிக்கிறார்.
நாட்டில் ,உலகில்  தர்மம் அழிந்து அதர்மம்
தன்  எல்லை கடக்கும்போது
பாரதத்தைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர்

 ஆத்மமாயையால்   அவதரிக்கிறார்.
நல்லவர்களைக் காப்பதற்கும்
தீயவர்களை ஒழிப்பதற்கும்
தர்மத்தை நிலைநாட்டவும்
ஒவ்வொரு யுகத்திலும்
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரின்  தெய்வீகப்
பிறப்பை அறிந்தவர்களுக்கு
இவ்வுலகை விட்டு நீங்கிய பின் 
மறு பிறவி என்பதே இல்லை.
ஆசை ,பயம்,கோபம்  ஆகியவை
அவர்களிடமிருந்து
தானாக வெளியேறிவிடுகிறது.
அவர்கள் ஞானம் பெற்று ,
பவித்திர ஆத்மாக்களாக
இறைவனின் இயல்பையே அடைந்து விடுகின்றனர் .

என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
அர்ஜுனனிடம் கூறினார்.









No comments: