Friday, December 15, 2017

சந்நியாச யோகம்

  ஸ்ரீ கிருஷ்ண  பகவானின்   கர்ம யோகம் ,
ஞானகர்ம  சந்நியாசயோகம்
இரண்டையும் கேட்டு   அர்ஜுனன்
தெளிவடைய வில்லை .

  அவன் மேலும்  விளக்கம் கேட்க  ஆரம்பித்தான்.

கர்மத்தை செய்யச் சொல்கிறீர்கள்.
கர்மத்தை விட்டுவிடச் சொல்கிறீர்கள் ,
இந்த இரண்டிலும்  எது  சிறந்தது  என 

உறுதி நிச்சயக்கிப்பட்டதை எனக்குச்    சொல்லவும். என்றான். 

ஸ்ரீ கிருஷ்ணர்     மேலும்  விளக்க  ஆரம்பித்தார்.


       இதற்கு   கர்ம சந்நியாச யோகம், கர்மயோகம் ஆகிய  இரண்டுமே  மிகச் சிறப்பைத் தரக்கூடியது தான்.
 ஆனால் இரண்டையும் ஒப்பிடும்போது 
சந்நியாசத்தை  விட  கர்மயோகம்  மேலானது.

  வெறுப்பையும்  விருப்பையும் 
  மனதில்  வைத்துக்   கொள்ளாது
 இருப்பவன்
நித்திய   சந்நியாசி.
இவ்வுலக   வாழ்க்கையும் ,
அவ்வுலக   வாழ்க்கையும் 
 அதாவது  இம்மையும் ,மறுமையும்   
 சம  நிலையாக  எவ்வித  பற்றும்  இல்லாதவன் 
  எளிதாக  உலகியல்  பந்தங்களில் இருந்தும்
 விடுபட்டு  உயர்ந்த   நிலையை 
அடைந்து விடுகிறான்.
 சிறு குழந்தைகள்  தான்   
கர்மசன்னியாசமும்  சாஸ்த்திரத்தின்  ஆழ்ந்த    கருத்துக்களையும் அறியாமல்
இரண்டையும்  வேறாகக்    கருதுவர்.
 இரண்டும் ஒன்றே ஆகும். 
ஒன்றை   பின்பற்றி   இரண்டின்     பலனையும்   அறியலாம்.      அறிவினால்  இயற்கையின்      இயல்பை 
அறிவதே    சாங்க்யம்,   
 இதுவே  ஞான மார்க்கமாகும்.
கர்மயோகத்தில்   ஈடுபடாமல் 
   கர்மத்தின்    துறவறம் 
இன்றியமையாதது. 

 கர்ம  யோகத்தில்  ஈடுபட்டவன்
     தெளிவான  மனதுடையவன்.
   உடலின்பங்ககளை  வென்றவன்.
புலன்  அடக்கம் உடையவன். 
அனைத்தும்   ஆத்மாவெனக்  காண்பவன்.
   உலக  மாயையில் இருந்து விடுபட்டவன்.

   அவன்     தத்துவம்  அறிந்த   யோகி.
 அவன் தன்  ஒவ்வொரு  செயலையும் 
  தானே  செய்வதாக    அறிய  மாட்டான். 

பார்த்தல்,கேட்டல்,    தொடுதல்  ,நடத்தல், தூக்கம்,  சுவாசம்,
பேச்சு ,  என அனைத்திலும்     தன்   
தொடர்பு    இல்லை  என்று   கருதுபவன்.
   கண் மூடி தியானம் செய்தாலும்
  திறந்தாலும்
 புலன்கள்  அதன் போக்கில்
போகின்றவை  என்று அறிந்தவன்.
 ஆகையால் அவன் செயல்கள்
அவனால் செய்யப் படுவதில்லை
 என   உணர்ந்தவன். 
ஒவ்வொரு செயலின் கர்த்தா  இறைவனே  என்று     இறைவனைச் சார்ந்து 
பற்றுதல்களை புறந்தள்ளி 
   தாமரை  இலை 
தண்ணீர்     போன்று    பாவங்களில்
   இருந்து  முக்தி அடைந்து     
கர்மங்களில்  ஈடுபடுவான்.

யோகிகள்    பற்றுக்களைத்  துறந்து   
மனத் தூய்மைக்காக 
 உடல்,உள்ளம் ,அறிவால்,
புலன்களால் கர்மங்களை  செய்கிறான்.

No comments: