Sunday, December 10, 2017

கர்மயோகம் ..பகவத்கீதா.௧௨

  அர்ஜுனன்  ஸ்ரீ  கிருஷ்ணனிடம்  மனிதன்
 விரும்பா விட்டாலும்
  ஈன  பாபச் செயலில் ஈடுபடுவது ஏன்?
 என்று  வினவ, பகவான் பகர்கிறார்..


      ரஜோ குணத்தில்  காமம் என்பது
   மிகவும் அபாயகரமானது.
  குரோதம்  அதனுடன்   இணைந்தால்
  பெரும் பாவம் செய்யத்   தூண்டி  விடும்.
 ஆகவே காமமும் குரோதமும்  எதிரி
என்பதைத் தெரிந்து கொள்.


 அவைகளை மனதில் இருந்து அகற்றி விடு.

  புகை சூழ்ந்த நெருப்பு,
 தூசி  படிந்த  கண்ணாடி ,
,கருப்பையினால் மூடிய சிசு,.

இவைகளைப் போல
 ஞானம் ஆசையினால்
மூடப்பட்டிருக்கிறது.
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.
 அதை அணைத்து விட வேண்டும்.
 கரு மேகம்  சூரியனை  மறைத்து  விடுகிறது.
அவ்வாறே காமம் என்ற மாயை
கடவுளை மறைத்து விடுகிறது.
ரஜோ குண ஆசை களை முயற்சி  செய்து  வென்று விடலாம்.

தமோகுண ஆசைகள் கருப்பையில்
இருக்கும் குழந்தை போன்றது.
அதைப்போக்க காலமும் ஆயத்தமும் அவசிய மாகிறது.


அதை சுத்தப்படுத்தவேண்டும்.
இந்த மாயைகள்   அகன்றால்
 ஞானமும் வைராக்கியமும் உண்டகும்.
அதன்  பயனால் பகவானின் தரிசனம் கிட்டும்.


  அதை அகற்றிவிட்டால் ஞானம் வந்துவிடும்.
ஐம்புலன்கள் ,மனம்,  அறிவு இவைகள் 
 காமத்திற்கு  இருப்பிடமாகிறது.

இவைகள்  ஞானத்தை  மறைத்து
அஞ்ஞானத்தை  வளர்க்கின்றன.

இந்த ஆசையை வெல்வது எப்படி?
ஐம்புலன்களை அடக்கவேண்டும்.
அதற்கு ஆசைகளை ஒழித்துவிடவேண்டும்.

ஐம்புலன்கள் இந்த  உடலை விட பெரியவை.
 மனம் அதற்கும்  மேலானது.
அறிவு மனத்தைவிட உயர்ந்தது.
அறிவுக்கும் மிக உயர்ந்தது ஆத்மா .
அந்த ஆத்மஞானம்  பெற
ஆசைகளைத் தூண்டும்
புலனறிவை அடக்கவேண்டும்.
 தேங்காய்  வேண்டும் என்றால்
மட்டையை உரிக்க வேண்டும்.
உடைக்க  வேண்டும்.
 உடைத்தபின் தேங்காய் ஓட்டிலிருந்து
உண்ணும் தேங்காய் பருப்பு எடுக்கவேண்டும் .
ஆசைகள் மட்டை,நார், ஓடு போன்றது.
மட்டை,நார் ,ஓடு  இவைகளில் இருந்தும்
அறிவைப் பயன்படுத்தி
புலன்களுக்கு  ஒரு  இன்பத்தை  ஏற்படுத்துவதே  ஆசை.
இவைகளைக்கடந்து  ஞானம் பெற  பற்றற்ற வாழ்வு ,
ஆசைகளை எல்லாம் ஒழித்துவிடும்
 வாழ்வைப் பெற வேண்டும்.
அறிவிலும்  மேலான ஆத்ம ஞானத்தால்
 காம,குரோத சத்துருக்களை
ஒழித்துவிட  வேண்டும். .
 கர்மயோகம்    இதுவே.










No comments: