Thursday, December 7, 2017

கர்மயோகம்-பகவத்கீதை ---௧௧.11


   கர்மயோகத்தின்  கொள்கைகள் ,
சித்தாந்தங்களை  விடாது  
பின்பற்றுபவர்கள் 
பொறாமை ப்  படமாட்டார்கள்.
கர்மவினைகளிலிருந்து   விடுபட்டு
 பலன் எதிர்பாராத
கர்மங்களில்   ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் மனதில்  எவ்வித
சலனமும்  ஏற்படாது.
 இவ்வாறு கர்மயோகத்தில்
ஈடுபடுபவர்களுக்கு  பகவான்
அவர்கள் விரும்பியதை
அளித்து மகிழ்வார்.

பொறாமை ,பேராசை இரண்டுமே
மனதில்   உள்ளவர்கள் 
தன்னிடம் இல்லாத
மற்றவர்களிடம்  இருக்கும்
பொருள்கள்   தங்களிடம்  இல்லை என்றே
 வேதனையில்  மூழ்குவார்கள்.
அவர்கள் மூழ்கிய ஆழ்ந்த
ஆழத்தில் இருந்து 
வரவே முடியாது.

பகவானின்  கர்ம யோகத்தில்
 ஈடுபட்டவர்கள்
தீய எண்ணங்களில்
 இருந்து விடுபட்டு
பலனை     பகவானிடமே 
 ஒப்படைத்துவிடுவார்கள்.

இந்த இறைவனின் கோட்பாட்டை
 ஏற்காதவர்கள்
அறிவும் ஞானமும்  இல்லாத
 மூடர்களுக்கு
இணையாவார்கள்.

இயல்பான வாழ்க்கையில்
செயலாற்றுபவர்கள் ஞானிகள்.
அவர்களும்    தன் இயல்பான 
குணத்தை அறிவார்கள்.

நமது புலன்கள்  இயல்பாகவே
சில விருப்புகள் கொண்டவை.
மேலும் வெறுப்புகள் கொண்டவை.
நாம் புலன்களுக்கு அடிமையாகக்கூடாது.
நமக்கு    புலனடக்கம்  தேவை.
புலன்கள் நமது கர்மங்கள்,
 மானம் ,மரியாதைக்கு
எதிரிகள் .
 அவைகளை அடக்கியே
வைத்திருக்க வேண்டும் .


வள்ளுவரும்

ஆமைபோல் ஐந்தடக்கல் ,
ஆற்றில் எழுமையும்
ஏமாப்புடைத்து.--என்கிறார்.

நாம் நமது நமக்கு  என்ற
இயல்பான கர்மங்களைச்
 செய்யவேண்டும் .
நமக்கென்ற அறத்தில் செயலில்
மேன்மை   கிடைக்கும்.
 மற்றவர்கள் தர்மத்தில்  ஈடுபட்டால்
அச்சமே .
நாம் நம் சுய தர்மத்திலேயே 
 நிலைத்து  இருப்பது மேல்.

No comments: