யோகி என்பவன் தனியாக இருப்பான்.
அவன் மனத்தையும் ,உடலையும் அடக்கி
ஆசைகளை விட்டு யாரின் கண்களுக்குப்
படாமல் வசிப்பவன்.
யோகி அமர்ந்து தியானம் செய்யும்
ஆசனம் துணி ,மான் தோல், தர்ப்பை
பரப்பிய ஆசனம்.
நல்ல தூயமான சூழல்.
புலனடக்கம் ,மன அடக்கம்
.யோகநிலை தியானம்.
அந்த யோக நிலையில் தேகம் , தலை ,கழுத்து ,
நேராக இருக்கும்.
நாசியின் முனையில் அவன்
பார்வை இருக்கும்.
மற்ற திக்குகளில் அவன் பார்வை செல்லாது.
அவனுக்கு அச்சம் என்பதே இருக்காது.
பிரமச்சரிய விரதம் காப்பவன்.
அவன் சித்தம் முழுவதிலும்
ஸ்ரீ கிருஷ்ணனே இருப்பான்.
இந்த நிலையில் பகவானை மட்டுமே
,தியானத்து அவன் அருள் பெற்று
முக்தி பெற்று சாந்தி அடைகிறான்.
No comments:
Post a Comment