Tuesday, December 19, 2017

சனிப்பெயர்ச்சி பலன்

இன்று சனிப்பெயர்ச்சி .
ஆலயங்களில் கூட்டம் அதிகம்.
சனி பெயர்ச்சி பூஜைகள்.
அதைவிட அதிக கூட்டம் .
நம்மை நக்ஷத்திர பலன் படி
சனி ஆட்டிவைப்பானா ?

கடவுளின் பக்தர்கள்
 பூஜை செய்கிறோம் .
பூஜை செய்வதால்
 மட்டும் பலன் கிட்டுமா ?

தங்கக்குடம் கொடுத்தவர்கள் ,
பல வேள்விகள் செய்தவர்கள்
அஸ்வமேதயாகம் செய்தவர்கள்
எல்லோருமே நம் கதைகளில் படித்த

படி பார்த்தால் அவதார புருஷர்களாக

 இருந்தாலும் இன்னல் அனுபவித்திருக்கிறார்கள்.

நமது இன்னல்களுக்கு யார் காரணம்.
கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.
நான் படைக்கிறேன் .
 யாருடைய புண்ணிய பாவங்களையும்

 நான் கவனிப்பதில்லை.
அவன் கர்மமே அவனுக்கு தண்டனை
அல்லது
பரிசு அளிக்கிறது.
இன்பமளிக்கிறது.
 இன்னல் அளிக்கிறது.
இவற்றையும் கடந்து மனம்.
மனசஞ்சலம்.
மனதில் எழும் ஆசைகள்
 பேராசைகள் ,பொறாமை
ஆகியவைகளும்
இன்னல்களைத் தருகின்றன.

அறிவு/ ஞானம் மனிதனுக்கே உண்டு.

 அதை ஞானமுள்ளதாகவும்
 ஞானமற்றதாகவும் ஆக்குவது

ஞான சூன்யமாகவும் மாற்றுவது

அவனுடைய ஆசைகள் .கர்மங்கள்.


நாம் நம் கடமையைச் செய்யவேண்டும் .
நாணயமாக ,நடுநிலையாக ,
 மனசாட்சிப்படி
செய்யவேண்டும்.
 தான-தர்மங்கள் செய்யவேண்டும்.
இன்னலும் இன்பமும் அவன் தருபவை.

கர்ம வினைகள் போக்க நாம்
 பகவானை வழிபட வேண்டும்.

ஆனால் நம் வினைகள்

நல் வினையாக மாறவேண்டும்.
அப்பொழுது நமக்கு
 சனித்தொல்லை இருக்காது.


No comments: