Thursday, December 7, 2017

KARMAYOGAM BAGAVADGEETHA -10

கர்மயோகம் --பகவத்கீதை

         ஞானியின்  கடமை அனைவருக்கும்  மனதில்

ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே.
 ஞானியின் கடமை மக்களிடத்தில்
  மனக்கலக்கத்தை  ஏற்படுத்துவதல்ல.
ஞானி உலகியல் கர்மங்களில் ஈடுபட்டு ,
 மற்றவர்களையும்  ஈடுபடுத்த வேண்டும்.
ஆனால் ஞானி கர்மத்தை செய்யும்
போது   அதற்கான  பலனை  எதிர்பார்க்கக் கூடாது.

    இயற்கையாகவே   ஏற்படும்  குணங்கள்
 செயல்களை செய்விக்கின்றன.
  ஒருவனுடைய வெற்றிக்கு  காரணம்
அவனுக்கு இறைவன் இயற்கையாகவே
 கொடுத்த  திறமையாகும்.

 சிறந்த பாடகன் , ஓவியன் , மருத்துவன் ,எல்லாமே   இயற்கையாக  ஆண்டவன் அளித்த திறமைகள்.

ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த ஆசிரியர்
என்று பாராட்டுப்  பெறுவதில்லை,

சிறந்த ஆசிரியரிடம்  கல்வி பயிலும்
அனைவரும்   சிறந்த மாணவராவதில்லை.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும்
 அனைவரும்  புதிய  கண்டுபிடிப்புகள்
   கண்டு பிடிப்பதில்லை.

ஆ னால் சிலர் அகம்பாவத்தால்
 பெற்ற  வெற்றியைத்   தானே   என்று    கருதுகிறார்கள் .
இது சரியல்ல.

   ஆனால் ஞானி  குண தர்மத்தின்
 குணங்களின்  இயற்கை அறிந்து
 எதிலும் பற்றுவைப்பது  இல்லை.

   அன்பாக இனிய குரலில் பேசுவது 
அனைவராலும் இயலாத காரியம். 
சிலரைப்பார்த்தாலே  மரியாதை தோன்றும்.

சிலரைப்   பார்த்தாலே பயம் தோன்றும்.
 சிலரைப் பார்த்தாலே  கிண்டலாகப் பேசத்தோன்றும் .
சிலரைப் பார்த்தாலே வெறுப்பு தோன்றும்.
இவை   எல்லாமே   இறைவனாகிய கிருஷ்ணனின்
 குணப் படைப்புகள்.

இவைகளெல்லாம் ஞானிகள்  அறிவதால்
  அவர்கள் உலகில்  பற்று இல்லாமல்
 செயலில்  இறங்குகின்றனர்,

  இயற்கையால் உண்டாகும் மோகத்தால்   அதில் பற்றுவைப்பவர்கள்  மந்த புத்தி உள்ளவர்கள்.

ஞானிகள் இவர்களைத்  தெளிய வைப்பவர்கள் .
அப்படி இல்லாமல்  அவர்களைக்
கலக்கமடையச் செய்வது
ஞானிகளுக்கு  அழகல்ல.

 நாம்  செய்யும்   கர்மங்கள்  அனைவற்றுக்கும்
 பொறுப்பு  இறைவனே.
ஆகையால்  நாம் செயல்கள் ஆற்றவேண்டும் .
 நமக்குத் திறமையை  அளித்த  இறைவனே
நம் வினைகளுக்கேற்ற  பலனை அளிப்பான் என்று அவனிடமே   பலனை  ஒப்படைத்துவிட வேண்டும்.




No comments: