Sunday, April 30, 2017

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

                    சீதையின் மன நிலை அறிந்து,
 கிருபையுள்ள ராமர்    சீதையிடம் ,
"நீ கவலைப் படாதே. என்னுடன் காட்டிற்கு வந்து விடு. இப்பொழுது வேதனைப்படும் நேரம் அல்ல. 
 உடனே   கானகம் செல்ல   ஏற்பாடு செய். புறப்படு" என்றார்.

ஸ்ரீ ராமர் சீதைக்கு அன்புடன் அனைத்தையும்
 எடுத்துச் சொல்லி விளக்கினார்.
  பிறகு அம்மாவை வணங்கி
ஆசிகள் பெற்றார்.
 அன்னை  ராமரிடம் சீக்கிரம் வந்து
மக்களின் துன்பத்தையும் ,
அன்னைகளின்  துன்பத்தையும்
போக்கவேண்டும்  என்றார்.
  அன்னை இறைவனிடம்  வேண்டினாள்--
பகவானே!   என் இந்த நிலை மாறுமா?
என்  கண்களால்  மீண்டும்
 இந்த  அழகான ஜோடியைப் பார்ப்பேனா ?
  மகனே! உன்னை நான்  மீண்டும் பார்க்கும்
 நல்ல நேரம்  எப்பொழுது   வரும் .
நான்  உயிருடன் உன்னுடைய   நிலவு
போன்ற  முகத்தை  மறுபடியும் பார்ப்பேனா ?
என்று புலம்பினாள்.
மகனே!  செல்லமே !ரகுபதியே !ரகுவரனே!   என்று அழைத்து
அரவணைத்து    மகிழ்ச்சியுடன்   பார்ப்பேனா ?
       அம்மா அன்பின் மிகுதியால் மிகவும் கவலைப் படுகிறாள்.   அவளால் பேசவும் முடியவில்லை  என்றறிந்து   ராமர்
அம்மாவிற்கு மிகவும்  ஆறுதல் சொன்னார்.
 
  அப்பொழுது  சீதை  ,
மாமியாரின்  கால்களில் விழுந்து
 "அம்மா! நான் துர்பாக்கியசாலி.
 உங்களுக்கு பணிவிடை
செய்யும்    காலத்தில் என்னை
  இறைவன்  வனவாசம் செய்ய அனுப்பிவிட்டார்.
 என்னுடைய மன விருப்பம்  நிறைவேறவில்லை.
 அம்மா! வருத்தப் படாதீர்கள்.
 கர்மவினை மிகவும் கடினமானது .
  என்னுடைய   தவறு இதில் எதுவும்லை.
 சீதையின்  சொற்களால் கௌசல்யா தேவிக்கு
 மிகவும் கவலை.
  சீதையை  அணைத்து    தைரியமளித்து ,
 கங்கையும் யமுனையும்  வற்றாமல்  ஓடும் வரை ,
நீ சுமங்கலி யாகவே இருப்பாய்  என  ஆசிகள் வணங்கினார்.


Wednesday, April 26, 2017

रामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திநான்கு.

रामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திநான்கு.
*************************************
அன்பான கணவரின்   மென்மையான  அழகான சொற்களைக்  கேட்டு சீதையின் அழகான கண்களில்  
இருந்து  கண்ணீர் பெருக்கெடுத்தது. ஸ்ரீ ராமரின் இந்த குளிர்ச்சியான  உபதேசங்கள் எப்படி எரிச்சலை உண்டாக்குவதாக இருந்தது?

ஜானகிக்கு    எதுவும்    பதில்  சொல்ல  முடியவில்லை.
என்னுடைய  பவித்திரமான,    அன்புக்    கணவர் ,என்னை விட்டுவிட்டு செல்ல விரும்புகிறாரே  என்பதை
நினைத்து  கவலைப் பட்டார்.
கண்ணீரை  மிகவும் கஷ்டப்பட்டு நிறுத்தி ,
பூமியின் புத்திரியான சீதை  தன்னை தைரியப்
படுத்திக் கொண்டு , மாமியாரின் பாதங்களில்
விழுந்து  கைகூப்பி வேண்டினாள்:--
தேவி! என்னுடைய  இந்த    பயங்கர  அதிகப்பிரசங்கித்தனமான 
 வேண்டுகோளைக்  கேட்டு
மன்னித்து விடுங்கள் .
என்    பிராண பதி    எனக்கு மிகவும் நன்மை தரும்
அறிவுரை  கூறியுள்ளார்.
ஆனால் கணவனின் பிரிவைப் போல்
 உலகில் மிகப் பெரிய  துயரம் வேறெதுவும்
இல்லை  என்பதை   தெரிந்துகொண்டேன்.
என் பிராண நாதா!இரக்கத்தின் வாசமே!அழகே!
சுகம் அளிப்பவனே!   அன்பரே!
ரகுகுலம்  என்ற அல்லிமலரை
மலரச்  செய்யும்  நிலவே!
நீங்கள் இல்லாமல் எனக்கு சுவர்க்கமும்  நரகமே.

அன்னை, தந்தை , சகோதரி , அன்பு   சகோதரன் , குடும்பம் ,
நண்பர்கள் , மாமனார் , மாமியார், உற்றார்-உறவினர்கள்,
உதவியாளர்கள், அழகானவர்கள், நல்லொழுக்கமும்  அன்பும் உள்ள சந்தானங்கள் ,  எத்தனை பேர் இருந்தாலும்
கணவன் அருகில்  இல்லை  என்றால்  எல்லோருமே
சூரியனைவிட   அதிகமாக     சுட்டு எரிப்பவர்களே.
உடல், செல்வம், வீடு ,  பூமி,    நகரம் , ராஜ்ஜியம்  எல்லாமே
கணவன் இன்றி  ஒரு  பெண்ணுக்கு    சோகத்தின் கூட்டமே.

போகம் நோயிக்கு சமம்.
 நகை வீண் சுமை,
உலகமே நகரத்தின்  துன்பம் போன்றது.

பிராண நாதா! நீங்களின்றி உலகில் எனக்கு எங்குமே  எதுவுமே    சுகம் தரக்கூடியது.
உயிரற்ற உடல், நீரில்லா ஆறு,எப்படியோ அப்படியே
கணவனில்லா   மனைவி.
உங்களுடன்    இருந்து  உங்கள்   முழு நிலவு  போன்ற
முகத்தைப்   பார்ப்பதால் எனக்கு எல்லா சுகங்களும்
கிடைத்துவிடும்.
நாதா!  உங்களுடன்  இருக்கும்போது  பறவைகள் மிருகங்கள் என்னுடைய குடும்பங்கள் ஆகிவிடும். வனம் நகரமாகிவிடும்.
மரங்களின் பட்டைகள்  தூய  ஆடைகள்  ஆகிவிடும்.
 குடிசை   சுவர்கத்தின்   சுகங்களுக்கு    மூலமாகி விடும்.
 தாராள இதயமுள்ள   வனதேவிகளும்,தேவதைகளும் மாமனார்  மாமியார்  போன்று  என்னை காப்பவர்கள்
ஆகிவிடுவார்கள்.   தர்ப்பைப் புற்களும்    இலை களும்
அழகான   படுக்கை விரிப்புகளாகும்.
பிரபுவுடன்  இருப்பது  காமதேவனின்   அழகான உள்ளாடைகளாகிவிடும்.

கிழங்கு ,வேர்,பழங்களே  அமிர்தம் போன்ற ஆகாரமாகும் .
காட்டில்  உள்ள   மலைகள்  அயோத்தியாவின்  நூற்றுக்கணக்கான  அரண்மனைகளாகும்.
 ஒவ்வொரு நொடியும்   பிரபுவின்   சரண கமலங்களைப்
பார்த்து    பகலில்  சக்வா பறவைகள்     போன்று  ஆனந்தமடைவேன்.
நீங்கள்   வனத்தின்   அநேக    துன்பங்களைப்  பற்றியும்
பயங்கள்  பற்றியும் , இன்னல்கள் பற்றியும்
சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால்  கிருபையின் இருப்பிடமான
 உங்களைப் பிரிந்து
இருப்பதை   நினைக்கும்போது
  அவை எல்லாம்  ஒன்றுமே இல்லை.
இதை   மனதில் அறிந்து   அன்பின் மணியான  நீங்கள்
என்னை  உடன்   அழைத்துச்  செல்லுங்கள்.
இங்கே விட்டுவிட்டு செல்லாதீர்கள்.
நான்  உங்களிடம்    அதிகமாக  எதுவும் வேண்டப்போவதில்லை.
நீங்கள் கருணாமூர்த்தி.
அனைவரைப் பற்றியும் அறிவீர்கள்.
ஏழை பங்காளர் நீங்கள். அனைவருக்கும் சுகம் அளிப்பவர்.
ஒழுக்கம் மற்றும் அன்பின்  களஞ்சியம்.
நீங்கள் பதிநான்கு  ஆண்டுகள்  அயோத்தியாவில் விட்டுவிட்டு சென்றால்   என் உயிர்   இருக்காது  என்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் பாத   கமலன்களைப்
பார்த்தாலே   எனக்கு   களைப்பு போய்விடும்.
அன்பானவரே!   நான்  தங்களுக்கு  அனைத்து  விதத்திலும்
பணிவிடை  செய்வேன்.
வழியில் நடை
பயணத்தால்     உண்டாகும் அனைத்து
 சிரமங்களையும்   போக்கிவிடுவேன்.
உங்கள் பாதங்களைக் கழுவி  ,
மரங்களின்     நிழலில்  உட்கார்ந்து
மனதில்     மகிழ்ந்து   விசிறிவிடுவேன்.
வியர்வைத் துளிகளுடன்   உங்கள் கருமேனி  கண்டு
பிராண  நாதரை  தர்சித்துக் கொண்டே
இருக்கும் போது  வருத்தப்பட  நேரமே இருக்காது.
சமதள  பூமியில்  புல்  மற்றும் மரங்களின் இலைகளைப் பரப்பி இரவு முழுவதும் உங்கள் கால்களை
பிடித்துவிட்டுக் கொண்டே   இருப்பேன்.
உங்களின் மென்மையான  உருவத்தைப்
பார்த்துக்கொண்டே   இருந்தால்  
 எனக்கு  வெப்பக்  காற்றும்     கூட  வராது.
நீங்கள் உடன்   இருக்கும் போது    என்னை  நிமிர்ந்து  பார்க்கும்   துணிச்சல் உள்ளவர்கள்  யார்  இருக்கிறார்கள்.
சிங்கத்தின்  பெண் சிங்கத்தை முயலும்  நரியும் பார்க்க  முடியுமா ?
நான் சுகுமாரி என்றால் எனது
நாதர் காட்டிற்குச் செல்ல தகுதியானவரா ?
உங்களுக்கு  தவம் உசிதமென்றால்
எனக்கு    மட்டும்    உலக  மகிழ்ச்சி தேவையா?
இப்படிப்பட்ட  கடுமையான சொற்களைக்   கேட்டும்
என்  இதயம்  வெடிக்கவில்லை  என்றால்
இந்த     அபலை   உங்கள் பிரிவின்    பயங்கர
துன்பத்தை  சகிக்குமா?
இவ்வாறு சொல்லிய  சீதை மிகவும் வருத்தப்பட்டாள்.
சீதையால்  பிரிவு என்ற  சொல்லையே தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளின்   இந்த நிலை கண்டு  ,
பிடிவாதமாக    சீதையை  விட்டுச்  சென்றால் ,
உயிரோடு இருக்கமாட்டாள் என்பதை
ராமர்    புரிந்து கொண்டார்.

Tuesday, April 25, 2017

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று .

     அம்மாவிற்கு  எதிரில் ராமர் சீதையிடம்
பேசத் தயங்கினார்.
 மனதில் இதை நினைத்து  சொன்னார் --
ராஜகுமாரி !நான் சொல்லுவதைக் கேள் .
 மனதில் வேறு எதையும்  வேறுவிதமாக   புரிந்து கொள்ளாதே.
  உனக்கும் எனக்கும்  நல்லது நினைத்தால் ,
 நான்  சொல்லுவதைக்  கேட்டு  வீட்டில்  இரு.
பெண்ணே!
என்னுடைய    கீழ் படிந்த மனைவி யாகவும் ,
 மாமியாருக்குத்
தொண்டு செய்யவேண்டும்.
 வீட்டில் இருப்பதால் சகலவித
நன்மையையும் உண்டாகும்.

   மரியாதையுடன்   மாமியாருக்கும்,
  மாமனாருக்கும்  சேவை  செய்வதைத்
 தவிர    வேறு  அறம்  எதுவும்  கிடையாது.

அம்மாவிற்கு  எப்பொழுதெல்லாம் நினைவு வருமோ,.   அன்பு
மிகுதியால்    கவலையின்    காரணமாக  ,
அவள் தன்னையே மறந்துவிடுவாள்.
 அழகியே!  அப்பொழுதெல்லாம் , நல்ல சொற்கள் மூலம்
பழைய கதைகளைக் கூறி    அவருக்கு விளக்கவும்.

நான் உன்னை என் அம்மாவிற்காகத்தான்
  வீட்டில்   விட்டுவிட்டு செல்கிறேன்.
என் ஆணைகேட்டு   வீட்டில்  இருந்தால்,
 குரு மற்றும்   வேதத்தின்    மூலமாக  சொல்லப்படும்
 எல்லா பலன்களும்  எவ்வித துன்பமுமின்றி
உனக்குக்  கிடைத்துவிடும் .

ஆனால்  பிடிவாதத்தின் காரணமாக ,
கலாவ்  முனியும் ,  ராஜா  நஹுஷும்
  கஷ்டங்களையே   சஹிக்கின்றனர்.
 அழகான  முகமுடையவளே!
 நான்  அப்பாவின் வாக்கை
சத்தியமாக்கி சீக்கிரமாக   திரும்பிவிடுவேன்.
   நாட்கள்   வேகமாக சென்றுவிடும்.
நான் சொல்வதைக்    கேள் .
பெண்ணே! அன்பின் வசத்தால்  பிடிவாதம்    செய்தால் ,
அதன்  பலனாக   துன்பத்தை    அனுபவிப்பாய்.
 வனம் மிகவும்  பயங்கரமானது.
 கஷ்டங்கள்  அதிகமானது.

அங்கு  வெயில், குளிர்,மழை,மற்றும்    காற்று   போன்றவையும் பயங்கரமாக இருக்கும்.
 சாலையில்   தெர்பையும், கல்லும் முள்ளும்
அதிகமாக     இருக்கும்.   வழியில்  பெரிய-பெரிய
மலைகளைக்   கடக்க  வேண்டியிருக்கும்.
மலைகளில்   குகைகள், கணவாய்கள்,    நதிகள் , கால்வாய்கள் வாய்க்கால்கள் இருக்கும் .
அதைக் கடப்பது மிகவும்  கடினம்.
அவை மிக ஆழமானதாக இருக்கும்.  
கரடி,  புலி,  ஓநாய்,
சிங்கம்,யானை    போன்றவைகளின்   பயங்கர
  சத்தங்கள் இருக்கும்.  
அதைக்    கேட்டால்    தைரியம் போய் விடும் .

அங்கு  தரையில்  தூங்க    வேண்டும்.
 மரப்  பட்டை  ஆடைகள் அணியவேண்டும் .
கிழங்கு , வேர், பழங்களையே  உணவாக
சாப்பிட வேண்டியிருக்கும்.   அவைகளும்  எல்லா   நாட்களிலும்     கிடைக்காது.  அதுவும்   காலத்திற்கு      ஏற்றபடியே   கிடைக்கும்.

மனிதனையே சாப்பிடும் ராக்ஷசர்கள்
 இரவில் உலாவுவார்கள்.
 அவர்கள் கோடிக்கணக்கில் கபட    நாடகம்
நடத்துவர்.   காட்டாற்று    மழை   வெள்ளம் பெருக்கெடுக்கும்.
அங்குள்ள ஆபத்துக்கள்   அதிகம்.
 
மான்விழியாளே!

நீ   இயற்கையிலேயே  பயந்தவள்.
அன்னம் போன்று   ந டப்பவளே !  
 நீ  காட்டில்  வசிக்கத் தகுதியற்றவள்.
நீ காட்டிற்குப்  போகும்    செய்தி கேட்பவர்கள்  
  எல்லோருமே    என்னைத்  திட்டுவார்கள்.
என் புகழுக்கு   களங்கம்  உண்டாகும் .
 மானசரோவர் அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீர்
 குடித்து  வளர்ந்தவள் ,
அன்னப்பறவை  போன்ற  நீ,
  உப்புநீர்  கடலில் செல்ல  முடியுமா ?
மாந்தோப்பில்      இருக்கும்   குயில்,
 கசப்பான  மரம்  உள்ள    காட்டில் அழகு  பெற  முடியுமா ?

சந்திரமுகியே!    இதயத்தில்    இதெல்லாம்  எண்ணி வீட்டிலேயே    இரு.
 வனத்தில்  மிக கஷ்டம்  அதிகம்.

இயற்கையாக  நன்மை    விரும்பும்
 குருவும் சுவாமியும்   சொல்வதை சிரமேற்கொண்டு நடக்கவேண்டும். இல்லை  எனில்   மனதில் மிகவும்  வருந்த  வேண்டியிருக்கும்.
 நிச்சயம் நன்மைக்குப் பதில்  தீங்கே உண்டாகும்.

Monday, April 24, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் 
-பக்கம் இருபத்திரண்டு.

 சீதை ராமரின்  வனவாசம்  பற்றி 
 பல விதத்தில்  சிந்தித்தார்.
 எனது பிராணநாதர் காட்டிற்குப்
 போக  விரும்புகிறார்.
 எந்த புண்ணியவான் அவருடன் செல்வார்
 என்று பார்க்கலாம்.
உடலும் உயிரும்   இரண்டும்   உடன் செல்லும்.
அல்லது உயிர் மட்டும் போகுமா ?
கடவுளின் செயல் எதுவும் 
அறிந்து கொள்ள முடியவில்லை.

சீதை  அழகான கால் நகங்களால்
  பூமியை  கீரிக்கொண்டிருந்தாள்.
 இப்படி செய்யும்   போது   கால் கொலுசுகள்    சத்தம் .   அன்பின் வசத்தால் சீதை கொலுசுகளைத் துறந்துவிடக்கூடாது என்று
சலங்கைகள் வேண்டுவது  போல்
  இருப்பதாக கவிஞர் வர்ணிக்கிறார் .

சீதையின் அழகான கண்களில் இருந்து
 கண்ணீர் பெருக்கெடுத்தது.
 அவளின் இந்நிலை   கண்டு  ஸ்ரீ ராமரின் தாயார் கௌசல்யா சொன்னாள்:---
மகனே!  சீதை மிகவும் இளம் பெண்.
 மாமியார் ,மாமனார்
மற்றும் குடும்ப உறவினர்களுக்கு
  மிகவும் அன்பானவள்.
இவருடைய  தந்தை அரசர்களுக்கு அரசர்.
மாமனார் சூரிய  குல  சூரியர்.
கணவர் சூரிய குலம  என்ற   அல்லி  மலரை
மலரச் செய்யும் நிலவு    போன்றவர்.
அழகு   மற்றும் குணக் குன்று.
  குணக்களஞ்சியம்.
நான்   அழகும் , குணமும் ,ஒழுக்கமும் நிறைந்த
அன்பான மருமகளைப் பெற்றுள்ளேன்.
இவளை  கண்ணின் மணியாகக்
 கருதி  நேசித்து  வருகிறேன்.
என்னுயிரையே இவளிடத்தில் வைத்துள்ளேன்.
இவளைக்  கற்பகக்  கொடியைப்  போல்
மிகவும் நேசித்து  அன்பு நீர் பாய்ச்சி வளர்த்திருக்கிறேன்.
இப்பொழுது இந்தக்கொடி பூத்து  குலுங்கும் நேரம்.
கடவுளின் செயல் .
அதனால்   பலன்  என்னவாக  
முடியும் என்று  தெரியவில்லை.
 சீதை  கட்டிலில் ,மடியில் , ஊஞ்சலில் ,   தான் காலடி வைத்துள்ளாள். நான் இவளை சஞ்சீவினி
மூலிகை போல்  மிக எச்சரிக்கையுடன் வளர்த்துவருகிறேன்.
பாதுகாத்துவருகிறேன். நான் விளக்கின் திரி அகற்றும்  வேலை கூட  அவளுக்குத் தருவதில்லை.
அதே சீதை  இன்று  உன்னுடன்  காட்டிற்கு வர விரும்புகிறாள்.
ரகுநாதா!  அவளுக்கு உன் ஆணை என்ன ?நிலவின் கதிரில் ஆனந்தத்தை விரும்புபவள்  ,சக்ரவாகப் பறவைபோல்  சூரியனை எப்படி   பார்க்க முடியும் ?

காட்டில்  யானை, சிங்கம் , புலி என்ற துஷ்ட மிருகங்கள் வாழ்கின்றன. நடமாடுகின்றன.
மகனே! விஷத்தின் தோட்டத்தில் ,
அழகான சஞ்சீவினி மூலிகை அழகு பெற முடியுமா ?
காட்டில் வாழ்வதற்காகவே
வேடர் குலப்  பெண்களையும்
கோல் இனப்     பெண்களையும்
 கடவுள்  படைத்துள்ளார்.

அவர்களுக்கு  கல்லில் உள்ள புழு போன்ற
கடினமான குணம் உண்டு.
 அவர்களுக்கு   காட்டில் துன்பமே    இருக்காது.

அல்லது
தபசிகளின் மனைவிமார்கள்  
வாழத்  தகுதியானவர்கள்.
அவர்கள் தவத்திற்காக எல்லா வற்றையும் தியாகம் செய்தவர்கள்.
மகனே! படத்தில் இருக்கும்  குரங்கைப்
பார்த்தே  பயப்படும்  சீதை யால்
 காட்டில் எப்படி இருக்க முடியும் .
தேவசரோவரில்  தாமரை வனத்தில் வாழ்கின்ற அன்னப்பறவை  காட்டுக்    குளங்களில்
வசிக்கத்தகுதி உண்டா?
அம்மா  சொல்கிறாள் ---
சீதை வீட்டில் இருந்தால்    எனக்கு  உதவியாக  இருப்பாள்.
ஒழுக்கமும்    அமிர்தமும்  கலந்தது   போன்ற
அம்மாவின் சொற்களைக்  கேட்டு
  அறிவுமிகுந்த  அன்பான  சொற்களால்
ராமர்   அன்னை   மகிழும்படியும் 
  
 மன நிறைவு    அடையும்   படியும்  பேசினார்.
பிறகு  காட்டின் குணங்கள் தோஷங்கள்  பற்றி
சீதைக்கு விளக்கினார்.

ராமசரித மானஸ் ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

ராமசரித மானஸ்  ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

      கௌசல்யா  ராமரிடம் சொன்னாள்--"வனவாசம் சென்றால் வன தேவதைகள் உன்னுடைய தந்தைஆவார்கள் வன தேவிகள் உன்னுடைய தாயார் ஆவார்கள். அங்குள்ள மிருகங்கள் பறவைகள் உன்னுடைய தாமரை பாதங்களுக்கு தொண்டர்கள் ஆவார்கள். அரசர்களுக்கு இறுதியில் வனவாசம் செய்வது சரியானது தான். உன் நிலைகண்டு தான் எனக்கு மனதில் வேதனையாக உள்ளது.

 நீ ரகுவம்சத்தின் திலகம். காடு மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது. அயோத்தியா அதிர்ஷடமில்லாமல் போய் விட்டது.  நானும் உன்னுடன் வருவேன் என்றால் உனக்கு என் மேல்    சந்தேகம்  வரும். இந்த கூட வரும் சாக்கில் அம்மா என்னைத்   தடுக்க விரும்புகிறாள்.
மகனே!நீ எல்லோருக்குமே மிகவும் அன்பானவன்.
உயிருக்கே உயிரானவன் நீ ., எல்லோரின் இதயத்துக்கும்
வாழ்க்கை நீ தான்.
நீ சொல்கிறாய்-நான் காட்டிற்கு செல்கிறேன்  .  எ
நீ    சொல்வதைக்கேட்டு    நான்  வருந்துகிறேன்.
இதை நினைத்து    பொய்யான  அன்பை அதிகரித்து நான் பிடிவாதம்  செய்ய  மாட்டேன்.    நான்  உனக்கு   திருஷ்டி சுத்துகிறேன்.  அம்மாவின் உறவை ஏற்றுக்கொள்.    என்னை
மறந்துவிடாதே.
கோபாலா!எல்லா தேவர்களும் முன்னோர்களும்  கண்களை இமைகள் காப்பதுபோல்    உன்னைக் காக்கட்டும். உன்னுடைய    வனவாசம்  பதினான்கு ஆண்டுகள் தண்ணீர் என்றால் ,  உனக்கு அன்பானவர்களு ம், குடும்பத்தவர்களும்  
மீன்கள் நீ அறத்தின் அச்சு.  இரக்கத்தின் சுரங்கம்.
எல்லோரும் உயிருடன்    இருக்கும் போதே சந்திக்கும் முயற்சியில் யோசனை   செய்.
நான் உனக்காக அனைத்தும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.   நீ சேவகர்கள்  ,  குடும்பத்தவர்கள், நகரமக்கள்  அனைவரையும்  அனாதைகளாக்கிவிட்டு, சுகமாக  வனத்திற்குச்  செல்.   இன்று அனைவரின் செய்த புண்ணியத்திற்கு  பலன்  கிடைத்து விட்டது. கடினமான காலம்    எல்லாமே நமக்கு விபரீதமாகிவிட்டது.  இவ்வாறு மிகவும்    புலம்பிவிட்டு    தன்னை  மிகவும்   துரதிர்ஷ்டசாலி என்றறிந்து ஸ்ரீ ராமரின்   கால்களைப் பற்றி சுற்றிக்கொண்டாள்.
மனதில் பயங்கரமான    துன்பம்  சூழ்ந்து கொண்டது. அந்த சமயம்    பல வித  புலம்பல் , அவைகளை  வர்ணிக்க முடியாது. ராமர் அம்மாவைத் தூக்கி , இதயத்துடன் அணைத்துக்கொண்டார்.  பிறகு மென்மையான  சொற்களால்  பேசினான்.  அதே  நேரம்  இந்த  செய்தி    கேட்டு  சீதை ஓடிவந்தாள். பிறகு மாமியாருக்கருகில்
அவர்கள்    இருவரின் பாதங்களை வந்தனம் செய்து  தலை குனிந்து அமர்ந்து  கொண்டாள். மாமியார் மென்மையான குரலில்  ஆசிகள் வழங்கினார். சீதையின்   இளமை, அழகு கண்டு  கவலை அடைந்தான். அழகின் ராசியும்  பவித்திரமான    பதியின்  மேலுள்ள அன்பையும் கொண்ட  சீதை  தலை  கவிழ்ந்து வருத்தமுடன் இருப்பதை
கௌசல்யா வால்  சகிக்க முடியவில்லை.

Friday, April 21, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம் இருபது

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம்   இருபது

         ரகுகுலத்தில் மேன்மையான    ஸ்ரீ ராமச்சந்திரரின்

 மிகவும் பணிவான இனிய  சொற்கள்
அன்னை கௌசல்யாவின்   இதயத்தில் அம்புகள் தைத்ததுபோல் வேதனை  அளித்தன.
 அந்த குளிர்ந்த மென்மையான ராமனின்   வேண்டுகோள்

 மழை பெய்ததும் வாடும்    ஆமணக்கு (ஜவாசா ) செடி போல கௌசல்யா    மனம்   வாடியது.

     மனவேதனைகளைச்  சொல்ல முடியாது.
  அவள் நிலை சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பெண்மான்       மருட்சி    அடைந்தது    போல்  இருந்தது.
கண்களில் கண்நீர்ததும்பியது.
உடல்   நடுங்கியது.
  மீன்  முதல்  மழை  நுரை சாப்பிட்டு
பெரு மூச்சு விட  கஷ்டப்படுவது போல்  அவள்  நிலை.
பிறகு மனதை திடப்படுத்தி   தைரியத்தை வரவழைத்துக்கொண்டு    மகனின் முகத்தைப்  பார்த்து

சொன்னாள்--"மகனே!  உன்  தந்தை   உன்னைத்   தன் உயிரை விட அதிகமாக  நேசிக்கிறார்.
உன் குணங்களையும்    பார்த்து

  தினமும் மிக  மகிழ்வார். அவர் தான்  உனக்கு நாட்டை  ஒப்படைக்க  நல்ல நேரத்தைக் குறிக்கச் செய்தார்.

இப்பொழுது உன்  அபராதம் என்ன ?
மகனே! எனக்கு இந்த
காரணத்தை மட்டும்  சொல்லிவிடு.
 சூரிய வம்ச மரத்தை  எரிக்கும்
 நெருப்பாக யாரானார்கள் ?
அப்பொழுது ராமரின் தயக்கத்தைக்  கண்ட
 அமைச்சரின்   மகன்  ,  எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.
அந்த நிகழ்ச்சிகளைக்  கேட்டு   கோசலை ஊமையானாள்.
அவளின் நிலையை  வர்ணிக்க இயலாது.
 அவளால் ராமனை வைத்துக்கொள்ளவும் முடியாது.,
காட்டிற்குப்போ  என்று   சொல்லவும்  முடியாது.
இரண்டு விதமாக வும்   இதயத்தில்  மிகப்பெரிய துன்பம். கடவுளின் செயல் எப்பொழுதும் எல்லோருக்குமே   வளைந்து நெளிந்துதான்  இருக்கும்.
 நிலவு என்று எழுதத் தொடங்கி ,
ராஹு என்றும்  எழுதிவிட்டார்.
அறமும் அன்பும்  கௌசல்யாவின்
 அறிவை சூழ்ந்துகொண்டது.
அவர்  தர்ம சங்கடத்தில்  இருந்தார்.
அறமும் அன்புக்கும் இடையில்  போராட்டம்.
 பிடிவாதமாக  மகனை வைத்துக்கொண்டால்
 அறம் கெட்டுவிடும் . சகோதரர்களுக்குள்  விரோதமும்  சண்டையும்   வந்துவிடும்.

ராமனை காட்டுக்கு  அனுப்பினால்
 மிகப்பெரிய   தீங்கு  வந்துவிடும்.
அறிவுள்ள  கௌசல்யா  பெண்ணின் குணம்
புரிந்து தெளிந்து    ராமனையும் பரதனையும் தன்  மகன்களாக   பாவித்து   ராமரிடம்  சொன்னாள்--
மகனே!    நான்    உனக்காக   அனைத்தையும்
 தியாகம் செய்கிறேன். நீ      நல்லதே    செய்துள்ளாய் .  அப்பாவின் கட்டளையை     ஏற்று
நடப்பதுதான்   எல்லா அறங்களிலும்
உயர்ந்த  அறம்.  
நாட்டுக்கு  அதிபதி  ஆக்குகிறேன் என்றவர் காட்டுக்கு  அனுப்புகிறார்.இதனால்    எனக்கு எதுவும்   வருத்தம்  இல்லை. நீ   இன்றி   பரதனுக்கு ,மகாராஜாவிற்கும், குடிமக்களுக்கும்

மிகவும்   வேதனையாக  இருக்கும்.  அப்பாவின்   கட்டளை தான்  என்றால்,   அம்மாவை  அப்பாவை  விட  பெரியவர் என்று நினைத்து  காட்டிற்கு செல்லாதே. அம்மா-ஆப்பா இருவரும் கட்டளையிட்டால்  நீ செல்லும்   காடு நூற்றுக்கணக்கான அயோத்தியாவிற்குச் சமம்.

   

Thursday, April 20, 2017

ராமசரிதமானஸ் ---அயோத்யாகாண்டம் -- பக்கம் --பத்தொன்பது.

ராமசரிதமானஸ்  ---அயோத்யாகாண்டம் --  
பக்கம் --பத்தொன்பது.

கௌசல்யா  ராமரிடம்   மகனே!  சொல் .
 அந்த ஆனந்தமான
லக்னம் எப்பொழுது ?
அந்த  நேரம்  எனக்கு இந்தப்
 பிறவியின் பலன்     கிடைக்கும்   நேரம்.
 என்னுடைய  ஒழுக்கம் ,
புண்ணியம் சுகத்தின் அழகான எல்லை
அந்த  நேரமே .
சாதகப் பறவைகளின்  ஜோடிகள்  குளிர்கால சுவாதி நக்ஷத்திரத்தின்  மழையை  ஆவலாக எதிர்பார்ப்பதுபோல் , 
இந்த ராஜதிலக நல்ல முஹூர்த்த நேரத்தை 
  ஆண்களும் பெண்களும்  வியாகூலத்தோடு  எதிர்பார்க்கிறார்கள் .
நான்  உனக்கு  திருஷ்டி சுத்தி போடுகிறேன்.
 நீ சீக்கிரம்  குளித்து விட்டு  ,
நீ  விரும்பும் இனிப்புகளை   சாப்பிடு .
பிறகு அப்பாவிடம் செல்.
மிகவும்   தாமதமாகி விட்டது.
அம்மாவின்  அனுகூலமான சொற்களைக்கேட்டு ,
அவை சொற்களாகத் தெரியவில்லை.
 அன்பு என்ற கற்பக  விருக்ஷத்தின்  பூக்கள்.
அதில் சுகம் என்ற மகரந்தம் நிரம்பி இருந்தது.
ராஜலக்ஷ்மியின் மூலம் தான் அவை.
இப்படிப்பட்ட சொல்லென்ற பூக்களைப் பார்த்து
ராமர் என்ற  வண்டு    ரீங்காரமிடுகிறது.

அறத்தின்  அச்சான    ராமர்        அறத்தின்   இயக்கம்
அறிந்து மிகவும்  மென்மையான குரலில்  சொன்னார்--
"அம்மா ! அப்பா,   எனக்கு வன ராஜ்யத்தைக்
கொடுத்துள்ளார்.
அங்கே என்னுடைய செயல்கள்  எல்லாமே நடக்கும்.
 நீ ங்கள்    மகிழ்ச்சியான மனதுடன்  எனக்கு  அனுமதி அளியுங்கள்.
என்னுடைய  வன -யாத்திரை ஆனந்தமாக -
நலமுடன் முடிய  ஆசி  கூறுங்கள்.
என் மீதுள்ள அன்பினால் தப்பித் தவறி   கூட
  பயப்பட வேண்டாம்.
அம்மா! உங்கள் கிருபையால்  ஆனந்தமே உண்டாகும்.  
நான்  பதினான்கு   ஆண்டுகள்
வனவாசம்     முடித்து
அப்பாவின் வாக்கைக் காப்பாற்றி
நலமுடன் திரும்பி வருவேன்.






 நீங்கள்  வருத்தப்பட  வேண்டாம்.