Thursday, October 27, 2016

ராமசரித மானஸ்---சுந்தரகாண்டம் .பக்கம் பதினொன்று


   ஹனுமானின்   பக்தி , ஞானம் ,வைராக்கியம் நீதி

 நிறைந்த  

 நன்மை  செய்யும்  சொற்கள் கேட்டும்

 ராவணன் சிரித்து,

 இந்த  குரங்கு எனக்கு

 ஞான குருவாகி  விட்டது.

  துஷ்டனே! உன்  மரணம்  நெருங்கிவிட்டது.

 நீச்சனே!எனக்கு  பாடம் சொல்லிக்கொடுக்க

  வந்துவிட்டாயா ? என்றாய்.


  ஹனுமான்  ஜீ   சொன்னார் --

-நீ  சொல்வதற்கு  நேர்  மாறாகத் தான் நடக்கும்.

 மரணம்  எனக்கல்ல,

உன்னருகில்  வந்துவிட்டது.

உன்னுடைய  பிரம்மை தான்  அதிகம்.

நான்  நேரடியாக  தெரிந்து கொண்டுவிட்டேன்.

   ஹனுமானின்  கூற்றைக்  கேட்டு
  ராவணன்  மிகவும்  கோபப் பட்டான்.

உடனே    இந்த  முட்டாளைக்

 கொன்றுவிடுங்கள்

என்று கத்தினான்.

உடனே  அனைவரும்  அவனை  அடிக்க  ஓடினர்.

அந்த  சமயம்  விபீஷணன்

 மந்திரிகளுடன்  அங்கே  வந்தான்.

  அவன்  மிகவும்  பணிவுடன் ,

தூதனை அடிப்பது  நீதிக்கு  விரோதமானது .

   வேறு ஏதாவது  தண்டனை  கொடுக்கலாம்  என்றான்.

எல்லோரும்   விபீஷணின்

 ஆலோசனையை  ஆமோதித்தனர்.

       இதைக்கேட்டு  ராவணன்  சிரித்து ,


இவனின்  அங்கங்களை  காயப்படுத்தலாம்.


குரங்குக்கு  அதன் வால்

 மிகவும்  பிடித்தமானது.

வாலில்  துணி  சுற்றி
 எண்ணெயில்  நனைத்து

  நெருப்பு வைத்துவிடுங்கள்  என்றான்.

  வால்  இல்லாமல் , இந்த  குரங்கு  சென்றால்,

 இவனுடைய   முட்டாள்    எஜமானன்

  இங்கு  வருவான்.

அவனைப்  பற்றி  இவன்  கூறிய
 மகிமையை
  நேரில்  பார்க்கலாம்.

என்று  கட்டளை  இட்டான்.

அவனின்றி அவனியில் வாழ்வதரிது

அவனின்றி  அவனியில்  வாழ்வதரிது.

அவன் புகழே  அவனியில் சாஸ்வதம் .
ஆஸ்திகள் பல கோடி .

வசதிகள் இல்லாததில்லை.

மருத்துவர் கூட்டம் .
இருபெரும் தலைவர்கள் .
அன்புள்ளம் கொண்ட தொண்டர்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரார்த்தனை.
ஆஸ்திகப் பேரரசர் திமுருகத் தொண்டர்

ஆன்மீக ஞானி தமிழ் வடமொழி மேதை

திருமுருக கிருபானந்தவாரியை
விதியின் வலிமை அமேரிக்கா சென்றாலும் விடாது என்றதற்குத் துரத்தி அடித்த கும்பல்
மண் சோறு சாப்பிடுகிறது.
காவடி எடுக்கிறது.
கண்ணீர் மல்கி பிரார்த்திக்கிறது.
என்ன செய்வது ?
இறைவனை வேண்டும் .
இறைவனின் பலத்திற்கு முன் லௌகீக பலம்

வீண் .

எல்லாம் வல்ல இறைவனின் ஆற்றல் , திறன்

மக்கள்
அறியவே மூப்பு , நோய் , மரணம்.

இறைவா ! போற்றி.
பக்தர்களுக்கு அருள்வாய் போற்றி.
தி.க உன்னை அவமதித்த கூட்டத்தை கலங்கவைக்கும்
உன் வல்லமை போற்றி.

கோடிகள் சேர்த்தாலும் . துணைவியர்கள் சேர்த்தாலும்
தொண்டர்கள் சேர்த்தாலும் பதவிகள் பல வகித்தாலும் உன்னருளின்றி வாழ்வதரிது.
இறைவா! காப்பாற்று!
உன்னடி சரணம்.
உன்னைப்போற்றுவோரும் உன்னடி சரணம் .

உன்னைத் தூற்றியோரும்
தூற்றுவோரும்
உன்னடி சரணம் !
வீரமணிகண்டா! ஐயப்பா! உன்னைத் தூற்றியோரும்

உன் முன் இருகரம் இணைத்து வணங்கும் காலம்.

ராமா! கிருஷ்ணா ! சிவா! முருகா ! கணேசா !

உன்னடி சரணம்.

பல பங்களாக்கள் , அரண்மனைகள் காலப்போக்கில் இல்லை .
உன் புகழ்பாடும் வேதங்கள் , குரான் , பைபிள் , குரு கிரந்த சாஹப் என்றும் மன நிறைவு. மன அமைதி . ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் ! ஓம்!







ஓம் ! இதுவே சத்தியம்.
உன்னடி சரணம்.

Wednesday, October 26, 2016

ராமசரிதமானஸ் ----சுந்தரகாண்டம் --பக்கம் பத்து

    தேவர்களும்  திக்கு பாலகர்களும்  கைகூப்பி

   பயத்துடன் ராவணனைப்     பார்த்துக்கொண்டிருந்தனர்.

ராவணனின் வீரத்தைக்  கண்டும்

ஹனுமான்  மனதில்   எள்ளளவும்

பயம்  ஏற்படவில்லை.

பாம்புகளின்  கூட்டத்திற்கு

 நடுவில்  இருக்கும்  கருடன்  போன்று

 பயமின்றி இருந்தார்.

     ஹனுமானைப்பார்த்து   ராவணன்
  கடும்  சொற்களைக்  கூறி சிரித்தான்.
 பிறகு  புத்திரனின்
வதத்தைநினைத்து   வருத்தமடைந்தான்.

 பிறகு    அனுமானிடம் -- வானரா!நீ  யார் ?
உனக்கு பக்கபலமாக  இருப்பவர்  யார் ? வனங்களை   அழித்துவிட்டாய். 

 என்  புகழ்  மற்றும்  பெயரைக்  கேட்டதில்லையா ?
  பைத்தியக்காரா !
நீ  சிறிதளவும்  அச்சமின்றி  இருக்கிறாய். 

 அரக்கர்கள்   செய்த  குற்றம் என்ன?
முட்டாளே! உனக்கு  உயிர்  பயம்  இல்லையா ?

அனுமான்  கூறினான் :--

 
  நான்   தூதன். யார்  தூதன் ? தெரியுமா  ? ராவணா !

பிரம்மா , விஷ்ணு ,மஹேஷ்   மற்றும்

  உலகில்  அனைத்தையும்

 சிருஷ்டிப்பவரின்  தூதன்.
உன்னைப்போன்ற  கொடியவர்களை
  வதம்  செய்கின்றவரின்  தூதன்.
அனைத்து  உலகத்தையும்

 தலையில்  தாங்குகின்றவரின்
தக்க  பலத்துடன்  வந்துள்ளேன்.

அவர்  தேவர்களை ரட்சிக்க பலவித
  அவதாரம் எடுப்பவர்.
உன்னைப்போல  முட்டாள்களுக்கு
தண்டனை  அளிப்பவர்.
 சிவதனுஷை  முறித்தவர்.
அனைத்து  அரசர்களின்
கர்வத்தை  அளித்தவர்.
கரன் , தூஷன் ,திரிசடை , வாலி

போன்ற   வல்லமை
  படைத்தவர்களைக்  கொன்றவன்.
 ஈடு  இணையற்ற பல சாலி.
அவரின்  மிகச்சிறிய  பலம் கொண்டு
 நீ அகில  உலகையும்  வென்றுவிட்டாய்.

அவரின் மனைவியை  ஏமாற்றி
  கடத்தி வந்துவிட்டாய்.
நான்  அவரின்  தூதர்.

  நான்  உன்  வல்லமையை    நன்கே அறிவேன்.

சஹஸ்ரபாஹுவுடன்  போரிட்டாய்.
 வாலியை  வென்று  புகழ்  பெற்றாய்.
   வாயுபுத்திரனின் இதயத்தைத்  தொடும்
பதிலைக் கேட்டு ராவணன்  சிரித்து

 பேச்சின்  போக்கை  மாற்றினான்.

    வாயு புத்திரன்  கூறினான் --

அரக்கர்களின்  தலைவரே!
எனக்குப்  பசி  எடுத்தது.
நான்  பழங்கள்  சாப்பிட்டேன்.
வானரங்களின்  குணப்படி  மரங்களை  ஒடித்தேன்.
மாயைகளின்  தேவரே!
  உயிர் அனைவருக்கும்  மிகவும்  பிரியமானது.  தீயவழியில்  செல்கின்ற  அரக்கர்கள்
 என்னை  அடித்தனர்.
 நானும் தற்காப்புக்காக  தாக்கினேன்.
என்னை  அடித்தவர்களை  அடித்தேன்.
 இதற்காக  உன்  மகன்  என்னைக்  கட்டினான். நானும் என் எஜமானனின்
 சேவைக்காக  வந்துள்ளேன்.  இதில்
எனக்கு  எந்த வெட்கமும்  கிடையாது.

 ராவணா! நீ  உன்  ஆணவத்தை விடுத்து
 நான்  சொல்வதைக்கேள்.

நீ உன் குலத்தைப் பற்றி எண்ணிப்பார்.
 பிரமையை விட்டுவிடு.
பக்தர்களின்  அச்சங்களைப் போக்கும்
பகவானை  பஜனை செய்.
அனைத்து  ஜீவராசிகளையும்
  கொல்லும்  காலனும்
அவரைக்கண்டு  அஞ்சுவான்.
அவரை  பகைத்துக்  கொள்ளாதே.
  அன்னை  ஜானகியை  அனுப்பிவிடு.

கரனின்  விரோதி  ஸ்ரீ ரகுநாதர்
,சரணாகத் வத்சலர்,
சரணடந்தவரைக்  காப்பவர்.
அன்பானவர்.
நீ  சரணடைந்தால்
 உனக்கும்  அருள் புரிவார்.

  நீ  ஸ்ரீ  ராமரின்  தாமரைப் பாதங்களை  இதயத்தில் வைத்து  சரணடைந்து  விடு.
 நீ  நிரந்தரமாக  ஸ்ரீ லங்காவை
 நிலையாக ஆட்சி  செய்.
 ரிஷி   புலச்த்தியரின்  புகழ்
 நிலவைப்போல்
களங்கமற்றது.
 அந்த  நிலவில் நீ   ஒரு  களங்கமாக  விளங்காதே.
.
  ஆணவம்  மோகத்தை  விட்டு
 ராம  நாமத்தை ஜபி.

 சிந்தித்துப்பார்.
 தேவர்களின்  விரோதியே !
எல்லா நகைகளாலும்
 அலங்கரிக்கப்பட்ட  பெண்
 ஆடையின்றி  நிர்வாணமாக  இருந்தால்
 சோபிக்க மாட்டாள்.

  ராமனை  விரும்பா
 மனிதனின் சொத்து
அதிகாரம்  அழிந்துவிடும்.
 அவைகளைப்  பெறுவதும்
  பெறாததற்குச்  சமம்.

மூல ஊற்று இல்லா நதிகள்
 மழைகாலத்தில்  மட்டும்  நீர் ஓடும்.
 வெயில்  காலங்களில் 

காய்ந்து விடும் .

  நான்  பிரதிக்ஞை  செய்து  சொல்கிறேன் --

ராமனை நேசிக்காத  விரோதிகள்
   தப்பிக்க முடியாது.
அவர்களை  எந்த  சக்தியாலும்
 காப்பாற்ற  முடியாது,

  அறியாமையால் உண்டாகும்
  மோகம்  மிகவும்  
 மனத்துயரம்  அளிக்கக்   கூடியது.
இருள்மயமான  ஆணவத்தை  விட்டு  விடு.
 பாற்கடல் பள்ளிகொண்ட
 பெருமான்  ராமனைத்துதி.




Tuesday, October 25, 2016

ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் பக்கம் ஒன்பது

 
  சீதையின் ஆசிகளைக்கேட்டு  ஆஞ்சநேயர்


சீதையை  வணங்கி  கைகூப்பி   சொன்னார் ---

  அன்னையே!உங்களுடைய ஆசிகள்

   என்னை எப்பொழுதும் காக்கும்.

   உங்கள்  ஆசிகள் தவறாது, இது  புகழ்  பெற்றது.

   இங்குள்ள் மரங்களின் பழங்களைப் பார்த்து

பசி  அதிகமாகிவிட்டது.

அப்பொழுது  சீதை --மகனே! பெரிய  பலம் வாய்ந்த  போர் வீரர்கள்

      இந்த  வனத்தைக்  காக்கின்றனர்  என்றார்.

    அன்னையே!  நீங்கள்  மகிழ்ச்சியுடன்  ஆணையிட்டால்

எனக்கு  அச்சமே  இருக்காது.
   ஹனுமானின்  அறிவையும் வலிமையையும் பார்த்து

சீதை ---மகனே!ரகுநாதனின் பாதங்களை  வணங்கி   மனதில் கொண்டு

பழங்களை   சாப்பிடவும்.

   அவர்  சீதையை  வணங்கி   தோட்டத்தில்  நுழைந்தார்.

பழங்களை  சாப்பிடவும் , மரங்களை  உடைக்கவும்  தொடங்கினார்.

அங்குள்ள  வன காவலர்களில்  சிலரைக்  கொன்றார். சிலர்  சென்று ராவணனிடம்   புகார் அளித்தனர்.

 தலைவா! ஒரு  மிகப்  பெரிய  குரங்கு வந்துள்ளது. அது  அசோக  வனத்தை

பாழாக்குகிறது .   பழங்களை  சாப்பிட்டது. காவலர்களை  நசுக்கி  தரையில் போட்டுவிட்டது.

 இதைக்கேட்டு  இராவணன்   அதிக  போர்வீரர்களை  அனுப்பினார்.

அவர்களைப்பார்த்து  ஆஞ்சநேயர்  கர்ஜித்தார்.

அனைத்து  காவலர்களையும்   அடித்தார்.  சிலர் குற்றுயிர் ஆயினர்.

சிலர்  அபயக்குரல்  எழுப்பினர்.

பினனர்  ராவணன் அக்ஷய குமாரனை அனுப்பினார். அவன்  எண்ணிக்கையற்ற  வீரர்களுடன் வந்தான். அவனைப்பார்த்ததும்

ஒரு   பெரிய  மரத்தைப்பிடுங்கி  அவனைக்  கொன்று  பேரிரைச்சல் போட்டார்.

சேனையில்  சிலரை அடித்தார். நசுக்கினார்,கொன்றார், சிலர்  பயந்தோடி

ராவணனிடம்    குரங்கு  மிகவும்  பலசாலி என்றனர்.

  மகனின்  வதம்  பற்றி அறிந்து  ராவணன்  மிகவும்  கோபமுற்றான்.

அவன் மிகவும்  பலசாலியான  தன்  மூத்தகுமாரன்

  மேகநாதனிடம்   அவனைக்  கொன்றுவிடாதே,
 உயிருடன்  பிடித்துவா   என்று  அனுப்பினான்.

அந்த  குரங்கு  எங்கிருந்து  வந்துள்ளது  என்பதை அறியலாம்.

   மேகநாத்  தன்  சகோதரன்  கொல்லப்பட்ட  செய்தி  அறிந்து
  மிகவும் சினமுற்றான்.  அவன்   இந்திரனையே  வென்ற
  ஈடு  இணையற்ற  வீரனாவான்.
  இப்பொழுது  பயங்கர போர்  நடக்கும்  என  அறிந்து  கடுமையாக

கூச்சலிட்டுக் கொண்டே  ஓடினார்.

    ஒரு  மிகப்பெரிய  மரத்தை வேரோடு  பிடுங்கி

 மேகநாதனின்  தேரை பயனற்றதாக்கினார்.

தேரை உடைத்தெரிந்தார்.

 அவனுடன் வந்த மிகப்பெரிய வீரர்களை
 தன்  உடலுடன்  சேர்த்து  நசுக்கினார்.

அவர்கள்  அனைவரையும் கொன்றுவிட்டு

 மேகநாதனுடன்  மோதினார்.

அவனின்  மீது  ஒரு  குத்து போட்டு

அவனை மயக்கமடையச் செய்தார்.

சில  நொடிகள்  மயக்கமடைந்து  எழுந்ததும்

பல மாயைகள் புரிந்து  போரிட்டான்.

ஆனால்  வாயுகுமாரனை   வெல்ல  முடியவில்லை.

 இறுதியில்  அவன்  பரகுமாஸ்திரத்தை  பயன்  படுத்தினான்.


வாயுகுமாரர்    பிரம்மாஸ்த் திறத்தின்  மேன்மை

குறையக்கூடாது என்று  நினைத்துக்  கட்டுப்பட்டார்.

பிரம்மாஸ்த்  திரம்   பட்டதுமே    வாயுகுமாரர்
மரத்தில்  இருந்து  விழுந்தார்.

 கீழே  விழும்போதே  பல  வீரர்களைக்  கொன்றார்.

ஹனுமான்  மூர்ச்சை அடைந்ததைக்  கண்டதும்  நாகபாசத்தால்

அவரைக்  கட்டினான்.

  இந்நிகழ்ச்சியைக்  கண்ட சிவன்  தன்  மனைவி  பார்வதியிடம்

கூறினார்-- ராமநாம  ஜெபத்தால்   பக்தர்கள்

  உலக  பந்த்தத்தை முறித்துக்கொள்வர்.
ஆனால்   ராமச்சந்திர  பிரபுவிற்காக
 ஹனுமான்  கட்டுண்டு  இருக்கிறார்.

 குரங்கு கட்டப்பட்டதை  அறிந்து  
வேடிக்கை பார்க்க  பல  அரக்கர்கள்
 ராஜசபைக்கு  வந்தனர்.

வாயுகுமாரர்  ராவணனின்  அவைகண்டு  வியந்தார்.

அதன்  ஐஸ்வர்த்தை   வர்ணிக்க வார்த்தைகள் கிட்டவில்லை.








ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் --பக்கம் எட்டு

  ஹனுமானின்   சொல்லைகேட்ட   சீதை ,

   மகனே!அந்த வானரங்கள்

உன்னைப்போலவே  இருப்பார்கள் .

அரக்கர்களோ  மிகவும்

பலம்  பொருந்தியவர்கள்.

 போர்வீரர்கள்.

அதனால்  என்  மனதில்  அதிகக்  கவலை  உண்டாகிறது.

நீங்கள்  எப்படி அரக்கர்களை  வெல்வீர்கள்.


இதைக்  கேட்டதும்

 ஆஞ்சநேயர் தன்  உண்மைத்  தோற்றத்தில்  தோன்றினார்.

  தங்கக்  குன்று  போன்ற   மிகப்  பெரிய   உடல்,

எதிரிகளை  பயமுறுத்தும்  தோற்றம்.

மிக அதிக  வீரம் ,

பலம் நிறைந்த பெரிய  தோற்றம்.

  ஆஞ்சநேயரின்  தோற்றம்  கண்டு

சீதையின்  மனதில்   நம்பிக்கை  உண்டாகியது.

ஹனுமான்  மீண்டும்  சிறிய

உருவத்தை  அடைந்தார்.

  சொன்னார் ---
  அன்னையே!  வானரங்களுக்கு  பலம்  கிடையாது.

  அறிவு  கிடையாது.

 ஆனால்

  ஸ்ரீ  ராமரின்   வீரத்தால்

  மிகச்  சிறிய பாம்பு  கூட

 கருடனை  வீழ்த்த   முடியும்.


  வீரமும்  தீரமும்  விவேகமும்

  பலமும்  பொருந்திய

  ஆஞ்சநேயர்  சொற்களைக்  கேட்ட  சீதைக்கு

 மன  நிறைவும்

மன  மகிழ்ச்சியும்  ஏற்பட்டது.

சீதை    ஆஞ்சநேயருக்கு   ஆசி  வழங்கினார்.

நீ பலம் மற்றும்  வீரத்தின்  இருப்பிடமாவாய்.

நீ எப்பொழுதும்  இளமையுடன்  இருப்பாய்.

சிரஞ்சீவியாக  இருப்பாய்.

பிரபு  கிருபை  செய்யட்டும்.

அன்னையின்  ஆசியால்  ஆஞ்சநேயர்  அகமகிழ்ந்தார்.

பார் பார் !

காலை வணக்கம்.
பகவான் பாரினைக் காக்கிறார்.
பார்! பார்! பாரினைப்பார்!
பாரினை இணைப்பார்.
சனாதன தர்மம் பாரதம்.
வையகம் முழுவதும் வியாபித்த தர்மம்.
விவேகானந்தர் மூலம் பாரில்
உள்ளோர் உள்ளன்புடன்
சகோதர சகோதர பாசத்துடன் இணைத்தார்.
இஸ்லாம் என்றே இறைவனால் இணைந்ததுபார்.
ஏசுவால் இணைந்த அவனி.
பகவான் பாரினை இணைப்பார் பார்காண்.
ரைட் சகோதரர்கள் மூலம் சரியாக இணையவைத்தார்.
பாரினில் கலகங்கள் மதங்களால்,
பாரின் சுமை குறைக்க வெடிமருந்துகள்.
வெடித்தால் வெடித்து சிதறுவன
ஆலயங்கள் .
சுனாமிவந்தால் மூழ்கிஅழிபவர்கள்
மக்கள்.
தொற்றுநூய் வந்தால் ஒரு குறிப்பிட்ட
மதங்களைமட்டுமா
தாக்குகின்றன.
கப்பல்/ விமானம்/ தொடர்வண்டி/பேருந்து
விபத்துக்கள்.
அங்கே கூடும் கூட்டம்
உற்றார்.உறவினர், நண்பர்என்று தேடும் கூட்டம்
ஒரே மதத்தையோ, மொழியையோ, இணைத்தையோ
சார்ந்ததல்ல.
அதில் வையகத்தின் அனைத்துஇனமும்
பாதிக்கப்படுகின்றன.
இயற்கை சீற்றங்கள்/விபத்துக்கள்/நோய்கள்
ஒருகுறிப்பிட்ட மத/இன/ஜாதிகளைத் தாக்கவில்லை.
இனிப்பு அனைவருக்கும்ஒன்றே.
கசப்பும் அனைவருக்கும் ஒன்றே.
மிளகாய்த்தூள் முகமதியனுக்கு இனிப்பல்ல.
இந்துக்கு இனிப்பல்ல.
கிறிஸ்தவனுக்கு இனிப்பல்ல.
அனைவர் கண்களில் பட்டாலும்
ஒரே எரிச்சல் தான்.
பாரினை இணைக்கும் சனாதன தர்மம்
வையகம் வாழ்கஎன்றது.
வையகம் ஒரு குடும்பம் என்றது.
கடவுளை உருவமற்றவன் என்றது.
கடவுளை உருவமுள்ளது என்றது.
ஜனன மார்க்கம் ஒன்றே.
இளமை. முதுமை, நரைஅனைத்தும் ஒன்றே.
பாரினை இணைக்கும்தொலை தொடர்பு,
பாரினை துண்டிக்கும் தொலைதொடர்பு
உலகை அளிக்கும் வெடி குண்டுகள்.
உலகைக் காக்கும் வெடிகுண்டுகள்.
உயிரெடுக்கும் கத்த்திகள்,
உயிர்காக்கும் கத்திகள்.
காப்பவன் அகிலத்தை இணைப்பான்.
எடுப்பவன் நிம்மதிஇன்றி தவிப்பான்.
வையகம் வாழ்க! ஜய ஜகத்.!

Monday, October 24, 2016

ராமசரிதமானஸ் --சுந்தர காண்டம் பக்கம் ஏழு

       ஹனுமான் சீதையிடம்  தான்

          யார் என்று கூறினார்.

         அம்மா  ஜானகி  அவர்களே ---நான்  ராம தூதர்.
நான்  சொல்வது  சத்தியம் .
இந்த மோதிரத்தை நான்  தான்   கொண்டுவந்தேன்.

கருணைக்கடலான  ராமர் என்னை அறிந்துகொள்ளத்தான் 

 இந்த மோதிரத்தை  அளித்தார்.

இது தான்  ஆதாரம்.

    சீதை   கேட்டார்--

வானரருக்கும் மனிதருக்கும் 

எப்படி  நட்பு  ஏற்பட்டது?

ஹனுமார் எல்லா விவரங்களையும்  சொன்னார்.

ஹனுமாரின் ஒவ்வொரு  சொல்லும் நம்பிக்கை  அளிப்பதாக  இருந்தது. அவர்  ஹனுமானை மனம் ,
வாக்கு,செயலால் கருணைக்கடல்  ராமரின் தாசர் என்பதை தெரிந்துகொண்டார்.

    இறைவனின்  தாசர்  என்றதும்  ஆழ்ந்த  அன்பு
ஏற்பட்டது. உடலும்  மனதும்  ஆனந்தமடைந்தன.

கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடியது.

ஹனுமான் அவர்களே! பிரிவுக்கடலில்  மூழ்கிய  எனக்கு    கப்பல்  போன்று  நீர்  கிடைத்துவிட்டீர்.
 
    தியாகியே! எனது  பிரபு  மற்றும்  லக்ஷ்மணனின் 


நலத்தைக்கூறு. 

எனது  பிரபு  மென்மையான 

 மனம்  படைத்தவர்.  
தயை   நிறைந்தவர்..
 அவர்    ஏன்  இப்படி   இரக்கமற்ற 

கொடியவர்  ஆனார் ?

     சீதை  மிகவும்  வருத்தத்துடன்  சொன்னாள்--

தொண்டர்களுக்கு  நலம்  

அளிப்பது    அவர்  இயற்கை  குணம்.

அவருக்கு  என்  நினைவு  உள்ளதா ?

அவரைப்பார்த்து  என்  மனம்  குளிருமா ?


கண்கள்  மகிழுமா ?

  சீதையால்  துன்ப  மிகுதியால் 
 பேசமுடியவில்லை.
கண்களில்  கண்ணீர்  பெருக்கெடுத்தது .

என்  நாதர் என்னை மறந்துவிட்டார்  என்று புலம்பினார்.

சீதையின்  துயரம்

  போக்க  மிக மென்மையாகவும்
 பணிவாகவும்  ஹனுமார்  சொன்னார் --

அன்னையே!

 பிரபு  தன் தம்பி  லக்ஷ்மணனுடன்  நலமே.

 உங்கள்  துன்பத்தால்

அவர் வருத்தமுடன்  உள்ளார்.

 உங்கள்  மீது  அதிக அன்புவைத்துள்ளார்.

 நீங்கள்  தைரியமாக

ஸ்ரீ ராமரின் செய்தியைக்  கேளுங்கள்.

  இதைக்  கூறும் போதே  அன்பு  மிகுதியால்

 ஆஞ்சநேயரின்  கண்களில்  இருந்து

 கண்ணீர்  வழிந்தது.
      ராமர்   சொன்னார் --சீதையே!

 உன்  பிரிவால்

எனக்கு  எல்லாமே

 அனுகூலமற்றதாகி விட்டது.

மரங்களின்  துளிர்  இலைகள்  கூட
  நெருப்புபோல் ஆகிவிட்டது.

இரவு  எமனின் இரவாகி  விட்டது.

நிலவும் சூரியனைப்போல்   சுட்டெரிக்கிறது.

   தாமரைகளின்  வனம் கூட
  ஈட்டிபோல்  துன்புறுத்துகிறது.
நன்மைதருவன  எல்லாம்
துன்பம்  தருவதாகிவிட்டது.

 மணமும்  குளிர்ச்சியும்  மேன்மையும் உள்ள  காற்று  கூட
விஷமுள்ள  பாம்பின்  சீற்றம்போல்  உள்ளது.

மனத்தின்  துன்பத்தை
 வெளியிட்டால்  துயரம்  குறையும் .

யாரிடம்  சொல்வது?

உனக்கும்  எனக்கும்  உள்ள

 அன்பின்  தத்துவம்  எனது
 மனதிற்குத்தான்  தெரியும்.

 மேலும்  அந்த  மனம்
சதாசர்வகாலமும் உன்னிடமே உள்ளது.

 பிரபுவின்  இந்த  செய்தியைக்  கேட்டதும்  சீதையின்  மனதில்  அன்பு  பெருகியது.

சீதை தன்  மெய்மறந்து  ராமரின்

 நினைவில்  மூழ்கினாள்.

           அனுமான் ,  அன்னையே!
ராமரை  நினையுங்கள்.
தொண்டர்களுக்கு  சுகம்   தரும்  ராமர்
  நலம்  தருவார்.
நான்  சொல்வதைக்கேளுங்கள். 

கோழையாக  இருக்காதீர்கள்.

      அரக்கர்களின்  கூட்டம்
விளக்கு பூச்சிகள்  போன்றது.

ராமரின்  பானங்கள்  நெருப்பு.
 அவர்கள் பொசுங்கிவிடுவார்கள்.
தைரியமாக இருங்கள்.
.உங்கள்  செய்தி  ராமர்   அறிந்தால்
 சற்றும்   தாமதிக்க  மாட்டார்.
அவர். சூரியன்.
 இங்கு வந்ததும்
இருள் போன்ற  அசுரர்கள்
  அழிந்துவிடுவார்கள்.

    அன்னையே!நான்   நினைத்தால்
உங்களை  அழைத்துச்  செல்லமுடியும்.
ஆனால்  ராமரின்  கட்டளை  அதுவல்ல.
அன்னையே!சிலநாள்  பொறுத்திருங்கள்.
 ராமர்  வானரங்களுடன்  இங்கு  வருவார்.

 அரக்கர்களை  அழித்து
 உங்களை அழைத்துச்  செல்வார்.
 நாரதர்  போன்ற ரிஷிகளும்
முனிவர்களும்  அவரைப்  புகழ்வார்கள்.