Monday, October 24, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் பக்கம் ஆறு

   
    சீதை மனதில்   நினைத்தார்---

      கடவுளே    எதிரி  ஆகிவிட்டார்.

   நெருப்பு கிடைக்கவில்லை.

    மனக்கவலை போகவில்லை.

 
 ஆகாயத்தில்  நெருப்புக் கனல்  தெரிகிறது.

 பூமியில்  ஒரு  விண்மீனும் காணவில்லை.

              என்னை  துரதிர்ஷ்ட   சாலி  என்று

     அக்னிமயமான  நிலவும்

     நெருப்பை  பொழியவில்லை.


அசோக  மரமே!

 என்  வேண்டுகோளைக்  கேள்.

 நீ  சோகமற்றவன் என்றபெயரை

    என்  சோகத்தை  மாற்றி   சத்தியத்தைக்  காப்பாற்று.

உன்  புத்தம்  புது     மென்மையான  இலைகள்

 நெருப்பைப் போன்றவை.

  நெருப்பைக்  கொடு.
   எனது  பிரிவு  நோயை  போக்கு.

   சீதையின்  துன்பத்தைக்கண்ட

ஹனுமானுக்கு  அந்த ஒரு  நொடி

ஒரு  யுகம்  போனதுபோல்  தோன்றியது.

    அவர்  சிந்தித்து  சீதைக்கு  முன்னாள்
 அந்த  மோதிரத்தைப்(கணையாழி) போட்டார்.

சீதை   அதை  விறகு என  நினைத்து  கையில்  எடுத்தாள்.
அது ராமர்  பெயர் பொறுத்தப்பட்ட கணையாழி.
சீதை  அதை  மிக  வியப்போடு பார்த்தாள்.
மனதில்  வேதனை ஓடியது.
  ராமரை  யாரும்  வெற்றிகொள்ளமுடியாது.
மாயையால்   கணையாழியை  உருவாக்க  முடியாது.

இப்படி  பல  எண்ணங்களில்  சீதை  இருந்தாள்.

  அப்பொழுது    ஹனுமான்  இனிய  குரலில்  பேசினார்---

ராமரின்  புகழ் பாடினார்.

இதைக்கேட்ட  சீதை  மகிழ்ந்தாள் .

ஹனுமார்  ஆரம்பம்  முதல்  அனைத்து நிகழ்வுகளையும்  சொன்னார்.

  சீதை   அமிர்தம் போன்று  பேசும்  சகோதரா!என்  முன்னால் வரக்கூடாதா ?

 ஹனுமான்  முன்  தோன்றினார்.

சீதை  முகத்தைத்  திருப்பிக்கொண்டாள்.

அவருக்கு  மிக ஆச்சரியமாகியது.



Sunday, October 23, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் .பக்கம் -ஐந்து.


ஆஞ்சநேயர் சீதையை  முதன்  முதலில்

 பார்த்தபோது  சீத  தேவியின்  கண்கள்

பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தன .

மனம்  ராமரின்   பாத  கமலங்களையே

 நினைத்துக் கொண்டிருந்தது.

ஜானகியின்  துக்கத்தைப்  பார்த்து

 வாயுபுத்திரன்  மிகவும்  துயரடைந்தார்.

ஹனுமான்  மரங்களின்  இலைகளில்

 தன்னை மறைத்துக்கொண்டு

என்ன  செய்யலாம்  என்ற  யோசனையில்  ஆழ்ந்தார்.


அப்பொழுது  ராவணன்  தன்னை

 நன்கு  அலங்கரித்துக்கொண்டு

பெண்களுடன்  அங்குவந்தார்.

    அந்த  தீய குணமுள்ள  இராவணன்  சீதையிடம்

சாம,தான ,தண்ட ,பயம்.


போன்ற  அனைத்து  முறைகளையும்  கையாண்டான்.

மண்டோதரி மற்றும்  ராணிகளை    சீதைக்கு அடிமை ஆக்குவேன்

   என்று  வாக்களித்தான்.

ஒருமுறை  தன்னை  நிமிர்ந்து  பார்  என்றான்.

 சீதை  தனது  கணவரும் காதலனுமான ராமனை  நினைத்துக்கொண்டு

தன்  முகத்தை  மறைத்துக் கொண்டு  சொன்னார்---

 பத்துத்  தலைகொன்டவரே!

மினுகட்டான்  பூச்சி  வெளிச்சத்தில்

  தாமரை  மலருமா ?

நானும்  அப்படியே என்று  தெரிந்துகொள்.


துஷ்டா!   ராமரின் பானங்களின்

 செய்தி  உனக்குத்  தெரியுமா ?

பாவியே!  நீ  என்னைத்  தனியாக  இருக்கும் பொழுது கடத்திவந்துவிட்டாய்.

தாழ்ந்தவனே!வேட்கமற்றவனே!  உனக்கு  வெட்கமில்லையா ?



   ராமரை  சூரியன்  என்றும்  தன்னை மின்மினுப்பூச்சி  என்றும்

  சொன்னதால்  இராவணனுக்கு  மிகவும்  கோபம்  வந்துவிட்டது.

  பின்னர்  சினத்துடன்  வாளை  உருவி    சொன்னான்---

 சீதா!நீ  என்னை  அவமதித்துவிட்டாய் .

  நான்  உன்  தலையை துண்டித்துவிடுவேன்.

 நீ  நான்  சொல்வதைக்  கேள் .அழகுமுகமே!

இல்லை  என்றால்  நீ  உயிர்  இழந்துவிடுவாய்..

    உடனே  சீதை  சொன்னாள்---

என்  பிரபுவின்  புஜங்கள்  தாமரை மாலைபோன்று  அழகானவை.


யானையின்  தும்பிக்கை போன்று

 உறுதியும் பெரியதுமானவை.

அந்த  கைகள்  தான்  என்னை

  அணைக்கும்  பைத்தியக்காரா!

இதுதான் என் சபதம்.






Saturday, October 22, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் ப--நான்கு

         ஹனுமான்      விபீஷணனை  ராம் நாமத்தை

      ஜபிப்பதைப்பார்த்து   மகிழ்ந்தார்.

 ஹனுமான்  அவரை  உத்தமர்  என்பதறிந்து  மகிழ்ந்தார்.

ஹனுமான்   இவரிடம் என்னை

 அறிமுகப் படுத்திக்கொண்டால்

எந்த தீங்கும்  வராது.

நன்மையே  பயக்கும்  என்று எண்ணினார்.


     அந்தணன் வடிவில் ஹனுமான்  ஜீ  அவரை  அழைத்தார்.

அழைப்பைகேட்டு  விபீஷன்  அங்குவந்தார்.

  ஹனுமானை  வணங்கினார்.

நலம் விசாரித்து  ,  வந்த  காரணம்  கேட்டார்.


  மேலும்  நீங்கள்   ஹரி  பக்தரா ?

 உங்களைப்பார்த்து  என் மனதில்

 அன்பு  பொங்குகிறது.

 நீங்கள்  ராமர்தானோ ?

என்னிடமே  வந்து  அருள்  பாலிக்க  வந்தீரா ?

வீட்டிலேயே காட்சி  அளித்து ,

 அதிக  பாக்யசாலி ஆக்க  எழுந்தருளி நீ ரா?

  ஹனுமான் ராமரின் முழு   கதையும்  கூறினார்.

கேட்டதும் இருவரும்  மிகுந்த  ஆனந்தமடைந்தனர்.

ஸ்ரீ  ராமரின் பண்புகளை நினைத்து

இருவரும்  அன்பிலும்  ஆனந்தத்திலும்

மூழ்கினர்.

விபீஷணர்  ஹனுமானிடம் சொன்னார் --

வாயு  புத்திரரே!   நான் இங்கு இருபல்லுக்கு

 நடுவில்  இருக்கும்  நாக்கு போல்   இருக்கிறேன்.

என்னை   அநாதை  என்றறிந்து சூரிய குல  நாதர் கிருபை காட்டுவாரா ?

நான்  அரக்க உடலில்   பிறந்ததால்  எதையும்  சாதிக்க  முடியவில்லை.

மனதில்  ராமர்  மேல்  அன்பும்  இல்லை.

ஆனால்  உங்களை  சந்தித்தது  ராமனருளால்  தான்.

  உங்களைப்பார்த்ததால்  ராமனருள்  எனக்கு  உள்ளது

என்ற  நம்பிக்கை  வந்துவிட்டது.

அவர்  அருள் இன்றி  உங்கள்  சந்திப்பு    கிடைத்திருக்காது.


ராமரின்  அருளால் தான்  தாங்களாகவே வந்து அருளியிருக்கிரீர்கள்.


அப்பொழுது  அனுமன்  சொன்னார் --

அவர் தன தொண்டர்  மீது எப்பொழுதும்   அன்பு  செலுத்துவார்.



நீங்களே  கூறுங்கள் ,

 நான் என்ன  உயர்  குலத்தவனா ?

சஞ்சல  முள்ள  வானர இனத்தைச் சேர்ந்தவன்.

 அனைத்து விதத்திலும்  தாழ்ந்தவன்.

காலையில் குரங்குகளின் பெயர் சொன்னால்  சாப்பாடே  கிடைக்காது.

தோழரே ! நான்  தாழ்ந்தவன்.

 ஆனால்  என்னை ராமர்   அருள்பாளித்துள்ளார்.

ராமரின்  குணங்களை  நினைத்து கண்ணீர் வடிக்க  ஆரம்பித்தார்.

  இவரின்  குணங்கள்  அறிந்தும்  பண்புகள்  அறிந்தும் ,

உலகியலில்  ஈடுபட்டு  அவரை  மறந்தால்

 துன்பம் வரத்தானே  செய்யும்.

இவ்வாறு  ராமரின்  பெருமைகளைக்கூறி

சொல்லமுடியா பேரானந்தத்தைப்  பெற்றார்.











 

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் -௧௧,௧௨,௧௩,௧௪,௧௫,ப -3

  விசித்திரமான  மணிகள் பதிக்கப்பட்ட தங்க மதில்  சுவர்.

அதற்குள் அதிக அழகான  வீடுகள், , 

 நாற்சந்திகள்,கடைத்தெருக்கள்,

மிகவும்  அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

அங்கு  எண்ணிக்கையில்  அடங்கா  யானைகள்

,குதிரைகள், கோவேறிக்கழுதைகள்,  காலாட்படைகள்,தேர்கள்.

பலவடிவங்களில்  அரக்கர்   கூட்டங்கள்,

 பலம் பொருந்திய  படைகள் வர்ணிக்க முடியாத

 அளவிற்கு  காணப்பட்டன.

  வனங்கள், தோட்டங்கள்,பூந்தோட்டங்கள், குளங்கள் , கிணறுகள்,

 படிகளுள்ள கிணறுகள் ஆகியவை

மிகவும் அழகாக  காட்சி அளித்தன.

மனிதர்கள், நாகங்கள்,தேவதைகள்,கந்தர்வர்கள், முனிவர்களின்

மனங்களையும்    கவரும் அழகு.

மலையைப்போல் பெரிய  உடல் கொண்ட

மல்யுத்த வீரர்களின்  அறைகூவல்கள்.

 பெரிய  மைதானத்தில் மோதிக்கொண்டனர் .

    அச்சம்  தரும்  உடல்  அமைப்புள்ள  போர்வீரர்கள்

நகரின்  அனைத்து  திக்குகளையும்

மிகவும்  எச்சரிக்கையுடன் காவல் காத்துவந்தனர்.

சில பகுதிகளில்  கொடிய  அரக்கர்கள் ,

 எருமைகள், மனிதர்கள்,பசுக்கள், கழுதைகள்,ஆடுகள்  ஆகியவற்றை

 சாப்பிட்டுக்  கொண்டிருந்தனர்.

 ராமரின்  அம்புகள் இவர்களை வதம் செய்வதின் முன் அறிவிப்பாக

துளசிதாசர்  இவர்களைப்பற்றி  கூறுகிறார்.

  நகரின் அதிக  எண்ணிக்கையில் உள்ள  காவலர்களைக்கண்டதும்

ஹனுமான்  சிறியவடிவில்   இரவில்   நகரத்திற்குள்

 செல்ல  முடிவெடுத்தார்.

  ஹனுமான்  கொசு  போன்று சிறிய  வடிவுகொண்டு

ஸ்ரீ ராமரை தியானித்துக்கொண்டே  ஸ்ரீலங்கா  நகருக்குள்  சென்றார்.

  ஸ்ரீலங்கா   நகரின்  நுழைவாயிலில் லங்கிணி என்ற

 அரக்கி  காவலில்  இருந்தாள்.

அவள்  ஹனுமானைத்தடுத்து  ,

என்  அனுமதியின்றி  எங்கே செல்கிறாய்  என்று வினவினாள்.

சொன்னாள்--முட்டாளே!நீ  என்  ரகசியத்தை  அறியவில்லை.

திருடர்கள்  அனைவரும் எனக்கு  உணவுப்பொருள்கள்.

மகாவீரரான   ஹனுமான்  எதுவும்  பேசாமல்  ஒரு குத்துவிட்டார்.

அவள் இரத்தம்  கக்கிக்கொண்டே  கீழே விழுந்தாள்.

பிறகு  மீண்டும்  எழுந்தாள்.

பயந்துகொண்டே  கைகூப்பி வேண்டினாள்.

அவள்  சொன்னாள்--

ராவணனுக்கு  பிரம்மா  வரம் அளித்தபோது  சொன்னார்,

நீ ஒரு குரங்கால்  தாக்கப்பட்டு

 குழம்பும்  நாள்.


   அரக்கர்களுக்கு அழிவுநாள் என்று தெரிந்துகொள்.


நான் மிகவும்  புண்ணியம் செய்துள்ளதால்

ராமரின் தூதரை உங்களை பார்த்துவிட்டேன்.

  ஒரு   நொடிப்பொழுதில்  நல்லவர்களை

 சந்திக்கும்  சுகம்,மகிழ்ச்சியை  திராசின்   ஒருதட்டிலும்

சுவர்க்கம், மோக்ஷம்  இரண்டையும் ஒரு தட்டிலும்   வைத்தாலும்

 நல்லவர்கள் ஒரு  நொடி சந்திக்கும்

 மகிழ்ச்சிக்கு  மோக்ஷம்   சமமாகாது.

 அயோத்யாவின் அரசர் ஸ்ரீ  ரகுநாதரை மனதில்  வைத்து

நகருக்குள்  நுழைந்து  அனைத்து செயலையும்  செய்யுங்கள்.

அப்பொழுது  விஷமும்  அம்ருதமாகும்.

எதிரியும்  நண்பனாவான்.

கடலின்  ஆழம்   பசுவின்  குழம்பின் ஆழம் ஆகிவிடும்.

நெருப்பில்  குளிர்ச்சி  வந்துவிடும்.


மேலும்  கருடரே,
 ராமரின்   அருள்   பெற்றோருக்கு

  சுமேரு   மலை ஒரு தூசிபோல்  ஆகிவிடும்.

ஹனுமான்  மிகச்  சிறிய  வடிவெடுத்து  நகருக்குள்

நுழைந்தார்.

 அவர்  அங்குள்ள  ஒவ்வொரு மாளிகையிலும்    சீதையைத்   தேடினார்.

அங்கே  அதிக எண்ணிக்கையில்  போர்  வீரர்களைக்  கண்டார்.

பின்னர்  சொற்களால்   வர்ணிக்க  முடியா  அழகுள்ள

இராவணனின்  அரண்மனையை  அடைந்தார்.

   ஹனுமான்  இராவணன்  படுத்திருப்பதைப்  பார்த்தார்.

ஆனால்  அங்கு  சீதை  தென்படவில்லை.

பிறகு  ஒரு  மாளிகை தென்பட்டது.

அது  இறைவனின்  ஆலயமாகும்.

அங்கு  ஸ்ரீ ராமரின்  அம்பு-வில்  அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதன் அழகு வர்ணனைக்கு  அப்பால்  இருந்தன.

 புதிய  துளசிச் செடிகள்  அதிகமாக  இருப்பதைக்  கண்டார்.

குரங்கரசர்  ஹனுமான்  மிகவும் ஆனந்தமடைந்தார்.

  இலங்கை   அரக்கர்கள்  வாழும்  இடம் .

இங்கு  நல்லவன் எங்கே  வாழ்கிறான் ?

பலவித மன  சர்ச்சையில்  இருக்கும்  பொது

விபீஷணன்  எழுந்தார்.








रामचरित मानस .ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் --௬,௭.,௮,௯,௧௦ ப-2

 
  தேவர்கள்    வாயு  புத்திரன்

 ஹனுமான்  செல்வதை  பார்த்தனர்.

    ஹனுமானின்  நுண்ணறிவு ,

  பலம்    போன்றவற்றை    அறியவும்

  சோதிக்கவும் ,

  சுரசா  என்ற    சர்ப்பங்களின்

 அம்மாவை அனுப்பினர்.

    சுரசா  ஹனுமானிடம்  கூறினார் :-

 இன்று தேவர்கள்  உணவுக்காக  உன்னை  உணவாக  அளித்துள்ளனர்.

  இதைக்  கேட்டதும்  வாயுபுத்திரனான   ஹனுமான் சொன்னார்:--

        நான்  சென்று  சீதையின்    இருக்குமிடம்  அறிந்து  ராமனுக்கு             அறிவித்துவிட்டு  திரும்பி வருகிறேன்,

  என்னை   சாப்பிட்டு பசி ஆற்றிக்கொள்   என்றார்.

நான்சத்தியம்  செய்கிறேன்.
 இப்பொழுது  என்னை  செல்ல  அனுமதி கொடு.
ஆனால் சுரசா  அனுமதி  தரவில்லை.

உடனே   ஹனுமான்  என்னை  சாப்பிடு  என்றார்.

பாம்பு  உடனே  நான்கு  மைல்  அகலத்திற்கு  வாயைத்   திறந்தது.


உடனே  ஆஞ்சநேயர்  தன்  உருவத்தை  எட்டு  மைல்

   அகலத்திற்கு
  உயர்த்திக்கொண்டார்.

  உடனே  சுரசாவின்  வாய்

  பதினாறு  மைல்  அகலத்திற்கு  மாறியது.

  ஆஞ்சநேயர்  முப்பத்திரண்டு   மைல்  உயரமாக  மாறினார்.

  சுராசாவின்  வாய்  அகலம்  அதிகமாக  அதிகமாக

  ஆஞ்சநேயரின் உயரமும்   அதற்கு  ஏற்றவாறு

   இரண்டு  மடங்காகியது.


    சுராசா  நூறுமைல்  அகலத்திற்கு  வாய்  திறந்ததும்

    ஹனுமான்  மிகச் சிறிய  உருவமெடுத்தார்.

அவர்  சுரசாவின்  வாயில்  நுழைந்து  வெளியே  வந்தார்.

பிறகு  வணங்கி   அனுமதி  கேட்டார்.

அப்பொழுது  சுரசா  சொன்னது ---

தேவர்கள் உங்கள் அறிவுத்  திறனையும்

பலத்தையும்  சோதிக்கவே  என்னை  அனுப்பினர்.

நீ ராமர்  கொடுத்த  காரியத்தை  செய்து  முடிததுவிடுவாய்.

நீ    அறிவிலும்  பலத்திலும்   மிகச் சிறந்தவன்.

பின்னர்  சுரசா  ஹனுமனுக்கு  ஆசி  வழங்கி  சென்று விட்டது.

ஹனுமானும்  மகிழ்ச்சியுடன்  புறப்பட்டார்.


 கடலில்  ஒரு ராக்ஷசி  வசித்து  வந்தாள்.

அவள்  தன் மாயா  சக்தியால்

பறக்கும்  பறவையின்  நிழலைப்  பற்றியே

ஆகாயத்தில்  பறக்கும் பறவைகளைப்  பிடித்து விடுவாள்.

இப்படியே  ஆகாயத்தில் பரப்பவைகளைப் பிடித்து

ஆகார மாக்கிக்  கொள்வாள்.

இப்பொழுது  ஹனுமானைப்பிடிக்கவும்

அதே  முறையை  கையாண்டாள்.

ஆனால் , ஹனுமான்  உடனே

அவளின்  வஞ்சனையைத்  தெரிந்துகொண்டார்.

 வாயு புத்திரன்  அறிவும் திறனும்  கொண்டவர்.

அந்த  ராக்ஷஸியை  வதம்  செய்தார்.

கடல்  கடந்து  சென்றார்.

அங்கு  சென்றதும்    வனத்தின்  அழகைக்  கண்டார்.

அங்குள்ள மலர்களில்  வண்டுகள்  ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

பலவித  மரங்கள் பழங்கள் -பூக்களால்  பூத்துக்குளிங்கின.

அந்த  வனத்தின்  அழகு  கண்டு  ஆஞ்சநேயர்  மனமகிழ்ந்தார்.

எதிரில் ஒரு பெரிய  மலையைப்  பார்த்து  ஆஞ்சநேயர்

 அச்சத்தை விட்டு ஓடி அதன்  மேல்  ஏறினார்.

 இந்த  காட்சியைக்  கண்டு  சிவபகவான்   பார்வதியிடம்  சொன்னார் --

இதில்  வானரனான  ஆஞ்சநேயருக்கு  எந்த  சிறப்பும் இல்லை.

இதில்  கடவுளின்   பிராதபம்  உள்ளது.

அந்த சக்தி  எமனையும்  சாப்பிட்டுவிடும்.

  ஆஞ்சநேயர்  மலைமேல்  நின்று  ஸ்ரீ லங்காவைப்  பார்த்தார்.

 மிகப்பெரிய  கோட்டை. .

சொல்லால் விவரிக்க முடியாது.

அது மிக உயரமான மதில் சுவர் கொண்டது.

மதில் சுவர்கள் தங்கம்  போல்  மின்னின.













रामचरित मानस .ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் --௬,௭.,௮,௯,௧௦ ப-2---A

 
  தேவர்கள்    வாயு  புத்திரன்

 ஹனுமான்  செல்வதை  பார்த்தனர்.

    ஹனுமானின்  நுண்ணறிவு ,

  பலம்    போன்றவற்றை    அறியவும்

  சோதிக்கவும் ,

  சுரசா  என்ற    சர்ப்பங்களின்

 அம்மாவை அனுப்பினர்.

    சுரசா  ஹனுமானிடம்  கூறினார் :-

 இன்று தேவர்கள்  உணவுக்காக  உன்னை  உணவாக  அளித்துள்ளனர்.

  இதைக்  கேட்டதும்  வாயுபுத்திரனான   ஹனுமான் சொன்னார்:--

        நான்  சென்று  சீதையின்    இருக்குமிடம்  அறிந்து  ராமனுக்கு             அறிவித்துவிட்டு  திரும்பி வருகிறேன்,

  என்னை   சாப்பிட்டு பசி ஆற்றிக்கொள்   என்றார்.

நான்சத்தியம்  செய்கிறேன்.
 இப்பொழுது  என்னை  செல்ல  அனுமதி கொடு.
ஆனால் சுரசா  அனுமதி  தரவில்லை.

உடனே   ஹனுமான்  என்னை  சாப்பிடு  என்றார்.

பாம்பு  உடனே  நான்கு  மைல்  அகலத்திற்கு  வாயைத்   திறந்தது.


உடனே  ஆஞ்சநேயர்  தன்  உருவத்தை  எட்டு  மைல்

   அகலத்திற்கு
  உயர்த்திக்கொண்டார்.

  உடனே  சுரசாவின்  வாய்

  பதினாறு  மைல்  அகலத்திற்கு  மாறியது.

  ஆஞ்சநேயர்  முப்பத்திரண்டு   மைல்  உயரமாக  மாறினார்.

  சுராசாவின்  வாய்  அகலம்  அதிகமாக  அதிகமாக

  ஆஞ்சநேயரின் உயரமும்   அதற்கு  ஏற்றவாறு

   இரண்டு  மடங்காகியது.


    சுராசா  நூறுமைல்  அகலத்திற்கு  வாய்  திறந்ததும்

    ஹனுமான்  மிகச் சிறிய  உருவமெடுத்தார்.

அவர்  சுரசாவின்  வாயில்  நுழைந்து  வெளியே  வந்தார்.

பிறகு  வணங்கி   அனுமதி  கேட்டார்.

அப்பொழுது  சுரசா  சொன்னது ---

தேவர்கள் உங்கள் அறிவுத்  திறனையும்

பலத்தையும்  சோதிக்கவே  என்னை  அனுப்பினர்.

நீ ராமர்  கொடுத்த  காரியத்தை  செய்து  முடிததுவிடுவாய்.

நீ    அறிவிலும்  பலத்திலும்   மிகச் சிறந்தவன்.

பின்னர்  சுரசா  ஹனுமனுக்கு  ஆசி  வழங்கி  சென்று விட்டது.

ஹனுமானும்  மகிழ்ச்சியுடன்  புறப்பட்டார்.


 கடலில்  ஒரு ராக்ஷசி  வசித்து  வந்தாள்.

அவள்  தன் மாயா  சக்தியால்

பறக்கும்  பறவையின்  நிழலைப்  பற்றியே

ஆகாயத்தில்  பறக்கும் பறவைகளைப்  பிடித்து விடுவாள்.

இப்படியே  ஆகாயத்தில் பறப்பவைகளைப் பிடித்து

ஆகார மாக்கிக்  கொள்வாள்.

இப்பொழுது  ஹனுமானைப்பிடிக்கவும்

அதே  முறையை  கையாண்டாள்.

ஆனால் , ஹனுமான்  உடனே

அவளின்  வஞ்சனையைத்  தெரிந்துகொண்டார்.

 வாயு புத்திரன்  அறிவும் திறனும்  கொண்டவர்.

அந்த  ராக்ஷஸியை  வதம்  செய்தார்.

கடல்  கடந்து  சென்றார்.

அங்கு  சென்றதும்    வனத்தின்  அழகைக்  கண்டார்.

அங்குள்ள மலர்களில்  வண்டுகள்  ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

பலவித  மரங்கள் பழங்கள் -பூக்களால்  பூத்துக்குளிங்கின.

அந்த  வனத்தின்  அழகு  கண்டு  ஆஞ்சநேயர்  மனமகிழ்ந்தார்.

எதிரில் ஒரு பெரிய  மலையைப்  பார்த்து  ஆஞ்சநேயர்

 அச்சத்தை விட்டு ஓடி அதன்  மேல்  ஏறினார்.

 இந்த  காட்சியைக்  கண்டு  சிவபகவான்   பார்வதியிடம்  சொன்னார் --

இதில்  வானரனான  ஆஞ்சநேயருக்கு  எந்த  சிறப்பும் இல்லை.

இதில்  கடவுளின்   பிராதபம்  உள்ளது.

அந்த சக்தி  எமனையும்  சாப்பிட்டுவிடும்.

  ஆஞ்சநேயர்  மலைமேல்  நின்று  ஸ்ரீ லங்காவைப்  பார்த்தார்.

 மிகப்பெரிய  கோட்டை. .

சொல்லால் விவரிக்க முடியாது.

அது மிக உயரமான மதில் சுவர் கொண்டது.

மதில் சுவர்கள் தங்கம்  போல்  மின்னின.













Friday, October 21, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் --2,௩, ௪, ௫, ப.1

       ஸ்ரீ  ரகுநாதரே !

      என்  மனதில்  எவ்வித   மற்றொரு   விருப்பமும் இல்லை ,

     நான்  சத்தியமாக  கூறுகிறேன்.

    நீங்கள்  அனைத்தும்  அறியும் அந்தராத்மா !

   நீங்கள்   ரகு  குலத்தில்  மேன்மையானவர்.

   உங்கள்மீது எனக்கு  பூர்ண  பக்தி(இறையன்பு)

      அளித்து   எனது  மனதை    காமம் (பெண் ஆசை )முதலிய

     குற்றங்கள் தவறுகள் (தோஷங்கள் ) இல்லாமல்    செய்யுங்கள்.


       ஈடில்லா ஒப்பீடு  இல்லா  பலம்  பொருந்தியவரே !

         தங்க  மலை போன்ற ஒளிமிக்க உடல் உடையவரே!

          அரக்கர்கள்  என்ற  வனத்தை அளிக்கும்  அக்னி உருவமே !

          ஞானமுள்ளவர்களில்  மூத்தோனே, நாதரே,

         சகல  குணங்களின்  இருப்பிடமே !

        வானரங்களின்  சுவாமி  ரகுநாதரின்  அன்புக்குரியவரே!

         வாயு புத்திரரான ஹனுமான்  அவர்களே !

         நான்  உங்களை  வணங்குகிறேன்.

***********************************************************************************

   ௪.    ஜாம்பவானின்  சொற்களைக்   கேட்டு

      ஹனுமான்ஜீக்கு மனதில் மிகவும்  பிடித்துவிட்டது.

    அவர்  ஜாம்பவானிடம்  சொன்னார் --சகோதரா!

      நீங்கள்  இன்னல்  பொறுத்துக்கொண்டு காட்டில்
   
    பழங்கள் கிழங்குகள்  சாப்பிட்டு

   நான்  சீதையைப் பார்த்து வரும்  வரை

   எனக்காக  காத்திருங்கள்.

   எனது  பணி கட்டாயம் முடிந்துவிடும்.

 எனது  மனதில்  மிக மகிழ்ச்சி  பொங்குகிறது .

  இவ்வாறு  கூறிய  ஹனுமான் ஜீ,

  மிக  மகிழ்ச்சியுடன்  அனைவரையும்  வணங்கிவிட்டு

 மனதில் ராமரை   தியானித்துக்கொண்டே  புறப்பட்டார்.



    சமுத்திரக் கரையில்  ஒரு  அழகான  மலை   இருந்தது.

   அதன் மீது விளையாட்டாக சர்வ  சாதாரணமாக  ஏறி

   அடிக்கடி ரகுநாதர ரை    நினைத்துக்கொண்டே

  மலை மேலிருந்து  மிக வேகமாக குதித்தார் ,

   ஹனுமான்  மலையிலிருந்து  குதித்ததுமே

 அந்த  மலை பாதாளத்துக்குள்  அமுங்கிவிட்டது.

 ஸ்ரீ ராமச்சந்திர  மூர்த்தியின்   குறிதவறா  அம்பு  போல் ,

 ஹனுமான்  ஜீ  புறப்பட்டார்.

 சமுத்திரமானது   மைனாக்  மலையிடம்  கூறியது --

 நீ  இவரை   உன்மீது  இளைப்பாற  விடு.

 இவரின்   களைப்பை  போக்கிவிடு.



 ஹனுமான்   அதை   கையால்  தொட்டு வணங்கிவிட்டு  சொன்னார் --

  ஸ்ரீ  ராமரின்   வேலையை  செய்து  முடிக்காமல்  எனக்கு   ஓய்வு  கிடையாது. .