Sunday, December 29, 2013

ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.

ஆண்டவன்  நம்மை சத்ய மார்கத்தில்.
தான மார்கத்தில்
தர்ம மார்கத்தில்
இட்டுச் செல்லும் அவன் நம்மை ஆண்டவன்.
என்றும் எங்கும் எதிலும் காட்சி அளிப்பவன்.
இன்று  எப்படி ஊழல் செய்து மறைத்தாலும்
வெளிப்படுத்தச் செய்யும் ஆற்றல் உள்ளவன்.
அதற்காக உருவாக்கிய பதவிகள்
பதவிமோகம் .பண மோகம் ,பண பலம்
இதை எல்லாம் மீறி ஊழல்பெசப்படுகிறது
ஊழல் வாதிகள் வெளியில் நடமாடினாலும்
நியாயம்  விரும்பும் நேர்மைவாதிகள் அதை
உணர வைக்கின்றனர்.
சத்தியம் சங்கடங்களில் நிமிர்ந்து நிற்கிறது.
ஊழல் நிமிர்ந்தாலும் பொலிவு இருப்பதில்லை.
தேர்தல் நேரத்தில் அந்த கட்சி ஊழல் ,இந்த கட்சி ஊழல்
ஒட்டு மொத்தமாக அரசியலில் ஆண்டவர்கள்
ஆளப்போகிரவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள்.
நேர்மை உறங்குவதுபோல் இருந்தாலும்
ஊழல்கள் போட்டிபோட்டு வெளியே வருகின்றன.
ஊழல்கள் சிலரை தலை காட்ட விடுவதில்லை.
இருப்பினும் ஊழல் ஆள்கிறது.
நேர்மை சத்தியம் என்ற பலஹீனமான சக்தி
ஊழல்களை வெளிப்படுத்துகிறது.
ஊழல்கள் தண்டனை பெறாவிட்டாலும்

ஊழல்வாதிகளுக்கு சாந்தி இல்லை.
அவர்களும் சமாதி ஆகிறார்கள்.
அங்குதான் ஆண்டவன்/இறைவன்/அல்லா/இயேசு அனைவரும்
  சாஸ்வதமாக அதாவது
 நிரந்தரமாக வாழ்கின்றனர்.
அவர்களை கல்லால் அடித்தவர்களும்
சிலுவையில் அறைந்த வர்களும்
போற்றப்படுவதில்லை.
அங்குதான் தர்மம் நிலைக்கிறது.
நான் ஊளை செய்தேன்.செய்வேன்.செய்கிறேன் என்று
வாக்கு வாங்க மேடையில் பேசும் தைரியம்
இல்லை .
நேர்மை,ஊழல் எதிர்ப்பு.ஊழல்வாதிகளுக்கு தண்டனை என்ற
வாய்ச்சொல்லே அவர்களுக்கு வெற்றிவாய்ப்பளிக்கிறது.
ஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.


வாழ்கின்றனர்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...