Wednesday, January 1, 2014

அதுவே உலகியல் அவ்வுலகியல் இன்பம்.

இறைவனைப்பற்றி பல சிந்தனைகள்.
எங்கே இறைவன்?
ஏன் மனிதர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட குணத்தை தரவில்லை.

கீழுள்ள அனைத்தும் தெளிந்து புரிந்து அறிந்து

நல்லவை செய்யும் ஆற்றல் மனிதனுக்கு இறைவன் தந்தது.

மற்ற மிருகங்களுக்குத் தரவில்லை.

 இறைவனை குறை கூறும்

மனிதர்கள் சிந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு படைப்பின் தன்மை அமிர்தம்,விஷம் கசப்பு
புளிப்பு  என அறு சுவை அறிகிறோம்.உண்ணும் விஷயத்தில்
நாம் உசார்.அதுமட்டுமல்ல தங்கம்,வைரம் ,இருப்பு,மண் என்று
அனைத்தையும் தெரியும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
பஞ்சை நூலாக்கி நெய்து ஆடைகள் அணிகிறோம்.
இறைவன் படைப்பின் மூலத்தை மாற்றும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.
தேங்காயை எடுத்து அப்படியே சாப்பிடுவதில்லை.
தேங்காய்ப்பால் ,தேங்காய் என்னை,தேங்காய் பர்பி  இன்னும் எத்தனையோ.
தின் பண்டங்கள்,எள்ளில் இருந்து எள்ளுருண்டை,எண்ணெய் .
தேங்காய் நார் எப்படி அழகாகிறது.?இவ்வளவாற்றல்,இசைக்கருவிகள்
இனிமை யான பாடல்  இவ்வளவு ஆற்றல்.
இருப்பினும் துன்பங்கள்.நோய்கள். மரணம். விபத்துக்கள் காரணம்

நாம் பெற்ற ஆற்றல் அனைத்தும் இவ்வுலக இன்பங்கள் அனுபவிப்பதிலேயே ஈடுபடுகின்றன. வீடு,தங்கம்,வாஹனம் ,எதிர்கால சேமிப்பு.குழந்தைகள்,படிப்பு  இதிலே மனம் செலுத்துகிறோம். ஒவ்வொருவரும்  பெற்றோர்கள் எந்த நிலையில்  உள்ளார்களோ அந்த நிலையில் வளர்கிறோம்.பெற்றோர்கள் எப்படியோ அப்படியே குழந்தைகள் என்று கூறமுடியாது.ஆற்றல் மிக்க பெற்றோர்களுக்கு  பிறக்கும் குழந்தைகளும் அறிவில்லாமல் உள்ளனர்.
அறிவே இல்லாமல் சித்தபிரமை பிடித்த பெற்றோர்களுக்கு மிக்க அறிவாற்றல் உள்ள குழந்தைகள். இந்த வினோதம் ஏன்?

இதற்கு "மாதா-பிதா செய்தது மக்களுக்கு ,முன் பிறவிப்பயன்,செயற்கை தோஷம், செய்த பாவம், முன் வினைப்பயன்.
இவ்வளவு ஆய்ந்து தெளியும் நாம் ஏன் தவறு செய்கிறோம்?
இதில் இறைவனின் தவறென்ன?
அவனை ஏன் குறை சொல்லவேண்டும்?

இவ்வளவு சிந்தனைகள்,ஆராய்ச்சி.தெளிவு. பிறகும் நாம் அசத்திய,நேர்மையற்ற,கடமைசெய்யாமல் இருப்பது கீலுள்ளவற்றி நேர்மைக்கு புறம்பான செயல்கள். இறைவன் எப்படி அருள் புரிவான்.?
நாம் நம்மையே உணரவேண்டும்.பரோபகாரம்,இறக்கம்.உதவி.பிறருக்கென வாழ்தல் திருடாமை  ,ஆசைப்படாமை போன்ற உயர் குணங்களை பின்பற்றி சென்றால் ஆனந்தமாக திருப்தி சாந்தியுடன் வாழலாம்.

அதில் தான் ஆண்டவன் அருள்.அதுவே உலகியல் அவ்வுலகியல் இன்பம்.

சத்யம்-அசத்தியம்
பொறாமை
பேராசை .
ஆணவம்
கோபம்
சாந்தம்
சிரிப்பு
அழுகை
தாரள குணம்
கஞ்சம்
பழிவாங்குதல்
நினைவாற்றல்.
மறதி
போற்றுதல்
தூற்றுதல்
பாராட்டுதல்
இகழ்தல்
திறமை
திறமை இன்மை
விருப்பம்
ஆழ்மன விருப்பம்
கண்டொன்று பேசல்.
நேரில் பேசல்
ஒருதலைப் பக்ஷமாக பேசல்,
நியாய அநியாயம்
   

No comments: