கடவுள்கருணை இல்லை என
கடவுளை சும்மாக் கட
உள்ளத்தினுள்ளே என்றே
ஊர்க்கோடி சாமியாரிடம்
குறிக்கோள் இல்லா மனிதன்
குறி கேட்டு தறிகெட்டு
சிக்கனாமாய்ச் சேர்த்த பணமிழந்து
அர்த்தமில்லா அர்த்த ராத்திரி பூஜை
அந்தரங்க பூஜை என்று
மானமிழந்து மதிகெட்டோர்
செய்திகள் வந்தாலும்
உண்மை பக்தர்கள் உள்ளம் பதைத்தாலும்
உடனடி பலன் பெறும் பேராசை
உள்ளே இருக்கும் கடவுளை தட்டி எழுப்பாமல்
உள்ளே கட என்று வெளியில் தேடுவதேன்
என்பது தான் புரியவில்லை.
கட கலக்கும் கடக்கும் வழி யறியா
கடவுளைத்தேடும் மனிதர்காள்.
சற்றே சிந்தித்தால் உள்ளே கடந்து
துயிலும் கடவுள் உனக்குள்ளே தோன்றி
துரித பலன் அளிப்பார் காண்.
No comments:
Post a Comment