Monday, January 30, 2017

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம் அறுபத்தாறு

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம்   அறுபத்தாறு

         ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும்  ஜனகபுரியையும் ,
வில் வேள்விப்போட்டி  நடந்த இடங்களையும் பார்த்து மிக மகிழ்வுடன்  திரும்பினர். அவர்களுன் வந்த ஜனகபுரியின்  பாலகர்களிடம்  மிக அன்பாகப் பேசி விடைபெற்றனர்.
  மிக தாமதமாக திரும்பியதால் அவர்களுக்கு ரிஷியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற பயம் . அதனால் மிகவும்  பணிவாக  சென்று ரிஷியை  வணங்கினர்.

ரிஷியின் அனுமதி  பெற்று அமர்ந்ததும் ,
ரிஷி பல புராணக் கதைகளைக் கூறிவிட்டு
படுத்துக்கொண்டார். ராமர்  பகவானாக இருந்தும் இரவு
அதிக நேரம் வரை அவரின் கால்களை அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் ரிஷியே அவரை தூங்குவதற்கு அனுப்பினார்.
லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரின் சரணங்களைத்
 தொட்டு வணங்கி  கால் அமுக்கினார்.
அவ்வாறு செய்ததில் அவருக்கு அன்பும் பயம் கலந்த மரியாதையும் இருந்தது.
 பின்னர் ராமரின் கட்டளைபெற்று  தூங்கினார்.

  விடிந்ததும் சேவல் கூவியதுமே லக்ஷ்மணர் எழுந்தார்.
 பிறகு குரு எழுவதற்கு முன்பே ராமர் எழுந்தார்.

காலைக்கடன்களை முடித்து ஸ்நானம் செய்து
  நித்ய கர்ம அனுஷ்டானங்களை முடித்து
ரிஷியை வணங்கினார்.
பிறகு ரிஷியின் அனுமதி பெற்று
பூஜைக்கு மலர் எடுக்கச் சென்றனர்.
அவர்கள் அரசனின் தோட்டத்தைப் பார்த்தனர். அங்கு வசந்தகாலக்  காட்சிகள் மனத்தைக் கவர்ந்தன.
மனதை கொள்ளை கொள்ளும் அநேக மரங்கள் நடப்பட்டிருந்தன.
பலவண்ணங்களில்  மிக அழகான கொடிமண்டபங்கள்  நிழல்கள் அளித்து ரம்யமாக இருந்தன.

அங்குள்ள  எழில் நிறைந்த மரங்களின் செழுமை ,
 புதிய இலைகள்,பழங்கள் ,பூக்கள்
 அனைத்துமே கற்பக விருக்ஷத்தை நாணச்  செய்கின்றபடி
இருந்தன.
குயில்,கிளிகள்,சகோர் முதலியே பறவைகளின்
 இனிய ஒலிகள் ,வண்டுகளின்  ரீங்காரம் ,
மிகவும் ரம்யமாக இருந்தன.
தோட்டங்களும் நதிகளையும் பார்த்து
பிரபு ராமச்சந்திரனும்
லக்ஷ்மணனும் மகிழ்ந்தனர்.
 ராமருக்கே ரம்யமாக  இருந்த
தோட்டம் மிக ரம்யமானதே.
 நான்கு பக்கமும் பார்த்து
 தோட்டக்காரர்களிடம் கேட்டு ,அறிந்து
மிக சந்தோஷத்தோடு இலைகளும் பூக்களும் பறித்துக்கொண்டனர்.
அதே சமயம் சீதை,
 அங்கே  பார்வதி தேவியை பூஜை
 செய்வதற்காக  வந்தார் .
சீதையுடன் எல்லா இளமை ததும்பும்
அழகான தோழிகள் மதுரமான குரலில் பாட்டு பாடிக்கொண்டு வந்தனர்.
.    கிரிஜாவின் மிக  அழகான ஆலயம் இருந்தது.
  தோழிகளுடன் நதியில் குளித்துவிட்டு ,
  சீதை மகிழ்ச்சியுடன்
கிரிஜா கோயிலுக்கு சென்றாள்.
அவர் மிகவும் அன்புடன் பூஜை செய்து
தகுந்த வரன் அமைய வேண்டினாள்.
ஒரு  தோழி சீதையை விட்டுவிட்டு
  பூந்தோட்டத்திற்குச்
சென்றாள்.
 அவள் அங்கே ராமரையும் லக்ஷ்மணனையும் பார்த்தாள். உடனே மிக மகிழ்ந்து சீதையிருக்குமிடம் சென்றாள்.
அவள் மிகவும் மகிழ்ச்சியுடன்  வருவதைப் பார்த்து
 தோழிகள் அவளிடம் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன
  என்று கேட்டனர்.
அவள் இரண்டு அரசகுமாரர்கள்
 தோட்டத்தைப் பார்க்க வந்துள்ளனர்.
 அவர்கள் எல்லாவிதத்திலும் அழகானவர்கள்.
அவர்களில் ஒருவர் கருப்பாகவும் மற்றவர்
 வெள்ளையாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் அழகை    நான்  எப்படி வர்ணிப்பேன் ?
கண்கள் பேசமுடியாது,
சொல்லிற்கு  கண்கள் கிடையாது.

 இதைக்கேட்டதும் சீதை மனதில் ஏற்பட்ட ஆனந்தம்   கண்டு  ,
எல்லா தோழிகளும் மிகவும்  மகிழ்ந்தனர்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,
இவர்கள் விஷ்வாமித்திரருடன் வந்த ராஜகுமாரர்கள். அவர்கள்  தங்கள் அழகால்  நகரத்தின்
 ஆண்கள் -பெண்கள் அனைவரையும்
 வசப்படுத்திவிட்டனர்.
எல்லா இடங்களிலும் ,அனைவரும்
இவர்கள் இருவரின் அழகைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 கட்டாயம் அவர்களைப்  பார்க்கவேண்டும் .
 அவர்கள் பார்க்கத்தக்கவர்கள் .
அவர்களின் பேச்சு சீதைக்கு அவர்களைப் பார்க்கவேண்டும்
என்ற ஆவலைத்  தூண்டியது.
 அந்த அன்பான   தோழிக்குப் பின்  சீதை சென்றாள் . அவளின்  முன்பே  இருந்த அன்பை,யாரும் அறியவில்லை.
 நாரதரின்  கூற்றை நினைத்து சீதையின் மனதில் புனிதமான காதல் உண்டாகியது.
அவள் பயந்த மான் இங்கும் அங்கும்  பார்ப்பதுபோல்   பார்த்துக்கொண்டிருந்தாள் .

கை வளையல்கள் , சலங்கை ,ஒட்டியாணம் ஆகியவற்றின் ஒலி  கேட்டு ராமர் லக்ஷ்மணனிடம் இந்த ஓசைகள் காமதேவன் உலகத்தை வெற்றி கொள்ள உறுதியுடன் இசைப்பது போல் உள்ளது.
இப்படி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தார்.
சீதையின் நிலவு முகத்திற்கு அவருடைய  கண்கள்
சகோர பறவை ஆகிவிட்டது.
அழகான  கண்கள் நிலைத்து  நின்று  பார்த்துக்கொண்டிருந்தன.
சீதையின் அழகைக் கண்டு ராமர் மிகவும் ஆனந்தமடைந்தார்.
மனதில் சீதையின் அழகைப் புகழ்ந்தார். ஆனால்
வெளிப்படையாக  எதுவும்  பேசவில்லை.
அந்த அழகுக்கு ஈடு-இணை இல்லாமல் பிரம்மா  தன் முழுத்
திறமையையும் பயன்  படுத்தி உலகுக்கு காட்டியதுபோல்
சீதையின்  அழகு இருந்தது.
அழகுக்கே அழகு தரும் அழகு சீதையின் அழகு.
அழகு என்ற பவனம் இருட்டாக இருந்தது. இப்பொழுது
சீதையின் அழகுச் சுடர் எரிந்து அதை ஒளிமயமாக்கியது போன்றிருந்தது.
எல்லாவுடமைகளையும்  கவிஞர்கள் கையாண்டு எச்சலாக்கிவிட்டனர்.
 நான் ஜனகரின் மகள் சீதைக்கு
எதை உவமையாக்க  முடியும்.
இவ்வாறு ராமர்  மனதில் சீதையின் அழகை  வர்ணித்துக்கொண்டு    தன் தம்பி லக்ஷ்மணனிடம்
சொன்னார்,"தம்பி லக்ஷ்மணா !இவள் ஜனகரின் மகள்.
இவளுக்காகத்தான்  வில் உடைக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தோழிகளுடன் இவள் கெளரி பூஜை செய்ய  வந்துள்ளாள். இவள் பூந்தோட்டத்தை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளாள்.
இவளுடைய  தெய்வீக அழகைக் கண்டு  என்னுடைய புனித மனதில்  காதல் உண்டாகிவிட்டது. இந்த எல்லா  காரணங்களும்  பிரம்மா அறிந்துதான் உள்ளார்.
தம்பி!என்னுடைய வலது பக்க அங்கங்கள் துடிக்கின்றன.
அது மங்களம் தரக்கூடியதே.

    ரகுவம்சத்தின் கால்கள் தீய வழியில்  செல்லாது.
இது இயற்கை யான ரகுவம்ச குணம்.
கனவிலும் அடுத்த பெண்ணைப் பார்க்காது என்பது என்  மனதின் திடமான  நம்பிக்கை.

போர்க்களத்தில் புறமுதுகிட்டு  ஓடாதவர்கள்,
அடுத்தவன் மனைவியை ஏறிட்டு பார்க்காதவர்கள்,
பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாதவர்கள்
உயர்ந்த மனிதர்கள் . இப்படிப்பட்ட மனிதர்கள் உலகில்
அதிகமாக இல்லை.
இவ்வாறு ராமர் லக்ஷ்மனனுடன் பேசிக்கொண்டிருந்தாலும்
அவர் மனம் சீதையை நோக்கிச் சென்றது. அவளுடைய முக அழகு என்ற மகரந்தத்தில் வண்டுபோல் மனம் அந்த அழகை
ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.
 சீதையும் ஆச்சரியத்துடன் நாலா பக்கங்களிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.மனதில் அரச குமாரர் எங்கே சென்றார் என்ற கவலை சுற்றிக்கொண்டிருந்தது.
மான்விழியால்,சீதை எங்கு பார்த்தாலும் வெள்ளைத்தாமரை வரிசை பொழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது தோழிகள் கொடியின் மறைவில் இருந்து ராமரையும் லக்ஷ்மணனையும்
காட்டினார்கள்.   அவர்கள் அழகைக் கண்டு மனதில் பேராசை உண்டாகியது. புதையலைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த ராமரின் அழகைகண்டு  கண்களின் இமைகள்   மூட  மறந்தன. அதிக அன்பின் காரணமாக
உடல் தன்  வசம் இழந்தது . குளிர்கால நிலவை மெய்மறந்து சகோரப் பறவை பார்ப்பதுபோல் சீதை  நிலை.
கண்கள் வழியாக ஸ்ரீ ராமரை இதயத்தில் கொண்டுவந்து
கண் இமைகளை மூடிக்கொண்டாள்.
சீதை அன்பின் வசத்தில் இருப்பதைக் கண்டு தோழிகள் எதுவும் பேசவில்லை.

Sunday, January 29, 2017

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --அறுபத்தைந்து

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --          அறுபத்தைந்து

       தோழியே !ராமரின்  தரிசனம்  மிக மிக துர்லபம் .
நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் ராமரின்
தரிசனம் கிடைத்துள்ளது. அதனால் தான் இந்த தரிசனம் செய்யும் நல்ல யோகம்  கிடைத்துள்ளது.

தோழியே ,இந்த திருமணம் அனைவரின் நன்மைக்காக .
மற்றொரு தோழி ,"இந்த சிவதனுஷ் மிகவும் உறுதியானது.
இந்த கருப்பு  அரசகுமாரன்  ,மென்மையான உடல் உள்ளவன்.
எல்லோருமே  தர்மசங்கடத்தில் உள்ளனர். இதைக் கேட்டு மற்றொரு தோழி சொன்னாள்----பார்ப்பதற்குத்தான்  இவர்

சிறியவர். ஆனால் அதிக சக்திசாலியானவர்.
இவர் சரண  கமலக்களின் ஸ்பர்சத்தினால் கல்லான மிகப்பெரிய   பாவியான அஹல்யா  பெண்ணாகிவிட்டாள்.

இவர் வில்லையா  உடைக்கமாட்டார்.?
இந்த நம்பிக்கையில்
உறுதியாக இருக்கவேண்டும்.
 சீதையை  அழகாகப்  படைத்த  இறைவன்
நன்கு சிந்தித்துத்  தான் இந்த கருநீலவண்ணனைப்
படைத்துள்ளார்.
அனைத்துப்  பெண்களும்   மனதில் மிக மகிழ்ந்தனர்.
   ராமரும்-லக்ஷுமண்   இருவரும்  சென்ற இடமெல்லாம்
மகிழ்ச்சி  பொங்கியது.
இரண்டு  சகோதரர்களும் நகரத்தின் கிழக்குத்திசையில் சென்றனர். அங்கே வில்போட்டிக்கான அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது . மிகவும் நீளமான அகலமான நன்கு அமைக்கப்பட்ட  மைதானம்.
நான்கு பக்கங்களிலும் அரசர்கள் அமர மிகப்பெரிய
ஸ்வர்ணமேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
பின்னால் வட்டவடிவில் காவலர்கள் மேடைகள் உயர்ந்து காணப்பட்டது.
நகரமக்கள் அமர மிக உயர்ந்த  மேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
அவைகளுக்கு  அருகிலேயே  மிகப்பெரிய அகலக்கண வெள்ளைக் கட்டிடங்கள்  பல வண்ணங்களில் அமைக்கபட்டிருந்தன. அங்கே தன் தன் குல வழக்கப்படி பெண்கள் அமர்ந்து பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நகரத்தின் பாலகர்கள் ராம-லக்ஷ்மணர் களுக்கு அந்த வில்
போட்டி நடக்கும் இடத்தைக் காட்டினர்.
பாலகர்கள் இந்த காரணத்தைக் கொண்டு அன்பின் வயப்பட்டு ராமரின் அழகான அங்கத்தைத் தொட்டு ஆனந்தப்பட்டனர்.
பாலகர்களின் அன்பினால் மகிழ்ந்து அவைகள் காட்டிய வேள்வி பூமியை மிகவும்  புகழ்ந்தனர். இதனால் பாலகர்களின் உத்சாஹமும் ஆனந்தமும் அன்பும் அதிகரித்தன. அவர்கள் தங்கள் விருப்பப்படி அவர்களை அழைத்தனர். இரு சகோதரர்களும் அவர்களுடன்
மிக ஆனந்தமாகச் சென்றனர்.  

அனைவரின் நன்மைக்கே. வேறுபாடின்றி,

இறைவனுக்கு படைப்பதெல்லாம்,
ஏழைகளுக்கு உதவும்  எண்ணம்
தேங்காய் சிதறுதேங்காய்
அங்குள்ள ஏழைகள் எடுத்து சாப்பிட.
ஆனால் இன்றோ அது ஒப்பந்தகாரர் கையில்.
ஏழை எடுத்து சாப்பிட்டால்  அடிதான்.
பாலாபிஷேகமும் அப்படியே .
பிரசாத ஸ்டால்கள் இல்லாத காலம்
பிரசாதாம் பிறருக்கே . ஆனால்  இன்று
அதுவும் வாணிகமே.
ஆலயம் என்பது
  ஆ , ஐயோ, என்பவருக்கு
உதவ .
உள்ளோர் இல்லாருக்கு உதவ.
ஆனால் இன்றோ உள்ளே நுழையவே
நுழைவுக்கட்டணம்.

பூக்கள் சமர்ப்பிப்தால் எத்தனை ஏழை
பெண்கள் பொருளீட்டுகின்றனர்.
வாடும் மலரில் வாடும் மனம்  மகிழும்.
மணம்  வாழ்க்கையில் வீசும்.
பூ மணம்  இயற்கை அழகு,அவைகளை
பறித்து   அர்ச்சித்தால் பலருக்கு வருமானம்.
பூந்தோட்டக்காரன், அதை பறித்து சேர்ப்பவன்.
அதைதொடுத்து கலை  வண்ணம் சேர்ப்பவன்.
அதிலும் மொத்தவியாபாரி, சில்லறை வியாபாரி,
ஆலயங்கள் முன் விற்கும் பெண்கள்.
தெருவில் விற்கும் தெரு வியாபாரி.
பூதன்னை வாடவைத்து ,
எத்தனை பேர் வாழ்க்கையில் மனம் வீசும் மாண்பு.
மனிதனைத்தவிர  அனைத்து படைப்புகளும்
அனைவரின்  நன்மைக்கே. வேறுபாடின்றி,

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

     ஸ்ரீ ராமர்  ரிஷிகளுடன் உணவருந்திவிட்டு  ஓய்வு  எடுத்துக் கொண்டிருந்தார்.  லக்ஷ்மணனுக்கு  நகரை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
ஆனால் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. அண்ணனிடம் கேட்க பயமாக இருந்தது.

ஆனால் சகலமும் அறிந்த ஸ்ரீ ராமருக்கு தன் தம்பியின் மனதில் உள்ள   ஆசை புரிந்துவிட்டது. அவர் முனிவரிடம் சென்று  தன் தம்பியின்  விருப்பத்தைக்கூறி நகரை சுற்றிப்பார்த்து வர  அனுமதி கேட்டார்.
முனிவர் நகரைச் சுற்றிப்பார்க்க  அனுமதி அளித்தார்.
அப்பொழுது முனிவர் ,"ராமா!நீ நீதியைக் காப்பவன். அன்பின் வசப்பட்டு சேவகர்களுக்கு சுகம் அளிப்பவன்.
தர்ம ரக்ஷகன்.  நகரத்தின் அழகையும் ,பார்த்து நகரமக்களுக்கும்  காட்சி அளித்து   மகிழ்விக்கவும்.

 எல்லா உலகத்திற்கும் சுகம் தரக்கூடிய இரண்டு  சகோதரர்களும்  ரிஷியை வணங்கி விட்டு  நகர்வலம்  காணச் சென்றனர். இவர்கள் வெளியில் வந்ததுமே ,
இவர்களுடைய அழகால் மகிழ்ந்து பாலகர்களின் கூட்டம்
இவர்களைப் பின் தொடர்ந்தது.

இரண்டு சகோதரர்களின்  மஞ்சள் நிற பட்டாடை, இடுப்பின் துப்பட்டாவில் கட்டப்பட்டுள்ள அம்பராத்தூண் , கருப்பு ,வெள்ளை உடலுக்கேற்ற சந்தனத் திலகம் ,மிகவும் அழகாக
இருந்தன.  கருப்பான ராமர், வெள்ளை நிற லக்ஷ்மணர் இந்த
அழகான  ஜோடி  அனைவருக்கும் பார்க்க பார்க்க மிக ஆனந்தம் அளித்தது.

சிங்கம் போன்ற கழுத்து ,மிகப்பெரிய புஜங்கள், மார்பில்
கஜமுத்துமாலை  அழகான  செந்தாமரைக் கண்கள்,  நிலவுபோன்ற முகம் மூன்று தாபங்களையும் போக்கக் கூடியது.
காதுகளில் தங்க காதணிகள்  மிகவும் அழகாக அனைவரையும்  கவர்ந்தது.  புருவங்கள் வளைந்து மிகவும் சோபித்தன. நெற்றியில் திலகக் கோடுகள் அழகில் முத்திரையிட்டதுபோல் இருந்தன.
தலையில்  கருப்பான சுருட்டை முடிகள் அதன் மேல் ஜடாமுடி மிக அழகாக இருந்தன. பாதங்களிலிருந்து  தலை வரை
அனைத்துமே பார்க்க மிக அழகாக இருந்தன.
இரண்டு சகோதரர்களும் நகரத்தைப் பார்க்க வந்துள்ளனர் என்ற செய்தி கேட்டதுமே, எல்லோரும் தங்கள் வீட்டையும் வேலைகளையும் வீட்டு விட்டு  தரித்திரன் கஜானா கொள்ளை அடிக்க ஓடிவந்தது போல் ஓடிவந்தனர்.
இயற்கையான அழகுள்ள சகோதரர்களைக் கண்டு நகர மக்கள் மகிழ்ந்தனர். வீட்டின் பெண்கள் ஜன்னல் வழியாக அன்புடன் ராமச்சந்திர மூர்த்தியைப் பார்த்தனர்.
பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்---
இவர்கள் கோடிக்கணக்கான காமதேவனின்  அழகை
மொத்தமாக பெற்றுள்ளனர். இவ்வளவு அழகு எங்கும் பார்க்கக் கிடைக்கவில்லை. தேவர்கள், மனிதர்கள் ,
அசுரர்கள், முனிவர்கள், நாகர்கள்  ஆகியோரிடத்திலும்
இவ்வளவு அழகு இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை.

பகவான்  விஷ்ணுவிற்கு  நான்கு புஜங்கள் உள்ளன. பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உள்ளன.
சிவனின் வேஷம் மிகவும் பயங்கரமானது. அவருக்கு ஐந்து முகங்கள்.  இந்த அழகுக்கு சமமான உவமை எதுவும் இல்லை.
இவ்வளவு அழகானவர்களைக் கண்டு  மோகிக்காதவர் ஒருவரும் இருக்கமுடியாது.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"இவர்கள் மகாராஜா தசரதரின்  குழந்தைகள் என்று கேள்விப்பட்டேன். இவர்கள் அன்னப்பறவைகள் போன்று அழகான ஜோடி.
இவர்கள் விஷ்வாமித்திரரின் யாகத்தின் காவலாளிகள்.
இவர்கள் போர்க்களத்தில் ராக்ஷசர்களைக் கொன்றுள்ளனர்.

   இதில்  கருப்பாக இருப்பவர் மாரீசன்,சுபாஹுவின் ஆணவத்தை அழித்தவர். இவர் கௌசல்யாவின் புத்திரர்.
இவருடைய பெயர் ராமர்.

 வெள்ளையாக வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு  பின் தொடருபவர்   ராமரின் சகோதரர் லக்ஷ்மணன். அவருடைய தாயார் சுமித்திரை .
இரண்டு சகோதரர்களும்   அரக்கர்களை அடக்கி வரும் வழியில்  கௌதமரின்  மனைவி அஹல்யாவிற்கு முக்தி அளித்து   இங்கு தனுஷ் யக்ஞம் காண வந்துள்ளனர்.
இதைக்கேட்ட தோழிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 ராமரின் அழகைக்கண்டு ஒரு தோழி ,"ராமர் ஜானகிக்கு ஏற்ற வரன் "என்றாள்.
அரசன் இவரைப்பார்த்தால், தன் பிரதிக்ஞையை  விட்டுவிட்டு  ராமருடனேயே திருமணம் செய்துவிடுவார்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"அரசர் பார்த்துவிட்டார்.
முனிவருடன் இவருக்கும் தக்க மரியாதை செய்து கௌரவித்துள்ளார். ஆனால்  தோழியே! அரசர் தன பிரதிக்ஞையை  விடவில்லை.
தன் பிரதிக்க்னையில் திடமாக இருப்பதால்  அவிவேகி ஆகிவிட்டார்.
 ஒரு தோழி சொன்னாள்."கடவுள்  நல்லவராக இருந்தால்,
எல்லோருக்கும் தகுந்த பலன் அளிப்பவராக  இருந்தால் ,
ஜானகிக்கு இந்த வரம் தான் . இதில் சற்றும்  ஐயமில்லை.

 தெய்வ சங்கல்பத்தால்  இந்த வரன் ஜானகிக்கு கிட்டினால்
   நாம் எல்லோரும்  பகவானுக்கு  மிகவும் நன்றிக் கடன் பெற்றவராவோம்.  

Saturday, January 28, 2017

ராமசரித மானஸ்- பாலகாண்டம் --அறுபத்து மூன்று.

ராமசரித மானஸ்-  பாலகாண்டம் --அறுபத்து மூன்று.

        அங்கு வந்த இரண்டு அழகான அரசகுமாரர்கள் ,
இருவரும் , கருப்பு-வெள்ளையாக அனைவரின் பார்வைகளுக்கும்  சுகத்தை அளிப்பவர்களாகவும் ,
மனம் கவர்  கள்வர்களாகவும்  இருந்தனர். ஸ்ரீ ராமர் அங்கு வந்ததும்  அனைவரும் எழுந்துநின்றனர். ரிஷி அவரை தன் அருகில் அழைத்து உட்கார வைத்தார்.

இரண்டு சகோதரர்களைப் பார்த்து அனைவரும் மிக மகிழ்ந்தனர். அனைவரின் கண்களிலும்  ஆனந்த்தக் கண்ணீர்  பெருக்கெடுத்தது.  உடல் புல்லரித்தது.
ராமரின் இனிய அழகான தேகத்தைக் கண்டு
ஜனகர் தன்  மெய்மறந்து போனார்.

   மனது   அன்பால் மூழ்கியது கண்டு  ஜனகர் தன் விவேகத்தால்  தைரியமாக்கிக் கொண்டு
முனிவரை வணங்கி ஆனந்தக்குரலில் சொன்னார் ---
"முனிவரே ! சொல்லுங்கள். இந்த இருவரும் முனிகுலத்தின்
ஆபரணங்களா ?  அல்லது அரச வம்ச பாலகர்களா?
வேதங்களில் புகழப்பட்ட பிரம்மனே இரட்டை சகோதரர் களாக   வந்துள்ளனரா ?

என்னுடைய வைராக்கியமான  மனம் இவர்களைப் பார்த்ததும்   நிலவைக்கண்டு மகிழும் சகோரப்பறவை
போன்று மகிழ்கிறது.  முனிவரே! மிகவும் ஆவலுடன் கேட்கிறேன். இவர்கள்  யார்  என்பதை மறைக்காமல் சொல்லுங்கள்.

இவர்களைப் பார்த்ததும் என்  மனம் பிரம்ம சுகத்தை பெற்றுள்ளது.
முனிவர்,    "அரசே! நீங்கள் சொன்னது சரியே! உங்கள் வாக்கு பொய்யாகாது.  உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்  இவர் மிக அன்பானவர்.
முனிவர் சொல் கேட்டு ராமர் மனதிற்குள் புன்னகை பூத்தார்.
அவர் முனிவரிடம் ரகசியத்தை சொல்லவேண்டாம் என சமிக்ஞை செய்தார்.
அப்பொழுது முனிவர் சொன்னார் ,"இவர்கள்  ரகுகுல திலகர் தசரதரின்  புத்திரர்கள்.  என் நன்மைக்காக என்னுடன் அனுப்பியுள்ளார்.
 இவர்கள்  ராமனும் லக்ஷ்மணனும் ஆவார்கள்.
நல்லொழுக்கமும் வீரமும் பலமும் பெற்றவர்கள்.
இவர்கள் அரக்கர்களை வதம் செய்து  என்னுடைய வேள்வியை காப்பாற்றயுள்ளனர். இதற்கு இந்த வையகமே சாக்ஷி.
உங்களுடை தரிசனத்தால் நான் மிகவும் புன்னியவானானேன். கருப்பும் வெள்ளையும் உள்ள இரண்டு சகோதரர்களும்  ஆனந்தத்திற்கே ஆனந்தம் அளிப்பவர்கள்.

  இவர்களுடைய பரஸ்பர அன்பு  மிகவும் புனிதமானது. மிகவும் அழகானது. அது மனதை மிகவும் கவர்கிறது.
அதை சொற்களால் சொல்ல முடியாது.
பிரம்மா -ஜீவன் போன்று இவர்களுடைய அன்பு இயற்கையானது.

ஜனகர் அடிக்கடி பிரபுவைப் பார்த்து ஆனந்தமடைகிறார்.
முனிவரைப் புகழ்ந்து வணங்கி அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு அழகான மாளிகையில் முனிவரை தங்கவைத்தார் .
அது சகல வசதியும் மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது.
பிறகு அனைத்துவிதமான பூஜைகள் செய்து அரசர் விடைபெற்றார். 

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

    அஹல்யாவிற்கு மோக்ஷம் அளித்து அங்கிருந்து
முனிவருடன்      புனித கங்கை ஓடும் இடத்திற்கு   சென்றனர்.  மகாராஜ் காதியின் புத்திரரான  விஷ்வாமித்திர ரிஷி தேவகங்கா   பூமியில்தோன்றிய கதையைச்  சொன்னார்.

 பிரபு ராமச்சந்திரரும் ,லக்ஷ்மணனும் ,முனிவரும்
 கங்கையில்   ஸ்நானம்  செய்தனர்.
அந்தணர்களுக்கு விதவிதமான தானங்கள்  கொடுக்கப்பட்டது.
 முனிவருடன் மிக மகிழ்ச்சியாக  விரைவில்
 ஜனகபுரியை அடைந்தனர்.
  ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணரும்  ஜனகபுரியின்  அழகைக்கண்டு
மிகவும்  மகிழ்ந்தனர்.
அங்கே அனேக அழகான குளங்கள் ,
கிணறுகள், நதிகள் , குட்டைகள் இருந்தன.
அங்கு இறங்குவதற்கு  அழகான படிகள் இருந்தன.
தண்ணீர் அமிர்தம் போன்று இருந்தது.
 வண்டுகள்   மகரந்த ரசத்தால்
 ஆனந்தமடைந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன,
வண்ண-வண்ண பறவைகள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.
பல  வண்ணங்களில்  தாமரைகள் மலர்ந்திருந்தன.
எப்பொழுதும்  சுகமளிக்கின்ற  குளிர்ந்த , மந்தமான,
மணமுள்ள  காற்று  வீசிக்கொண்டிருந்தது.
நந்தவனங்களிலும் , தோட்டங்களிலும் ,வனங்களிலும்
அதிக பறவைகள்  வசிக்கின்றன.
மலர்களாலும்  பழங்களாலும்  நிறைந்த மரங்கள் நகரத்தை மேலும் அழகு படுத்தின.

    சென்ற இடமெல்லாம்  மனத்தைக் கவர்வதாக இருந்தது.
பிரம்மாவே தன் கைகளாலேயே செய்தது போன்ற
அழகான  கடைத்தெருக்கள், மணிகள் கட்டிய அழகான
துருத்துமாடங்கள்.

குபேரனைப்  போன்ற  மேன்மை பொருந்திய வணிகர்கள்
எல்லாவிதமான பொருட்களை விற்பனைக்காக  கொண்டுவந்திருந்தனர்.
அழகான நாற்சந்திகள், தெருக்கள்  எப்பொழுதும் நறுமணத்துடன்  இருந்தன.

 எல்லோருடைய  வீடுகளும் மங்களகரமாக இருந்தன.
வீடுகளில்  மிக அழகான சித்திரங்கள்
 காமதேவனே வந்து தீட்டியதுபோல் இருந்தன.
நகரத்தில் இருந்த ஆண்கள் -பெண்கள்  அழகானவர்களாகவும் , பவித்திரமாகவும் , சாது குணம் உள்ளவர்களாகவும் , ஞானிகளாகவும் ,ஒழுக்கம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
 ஜனகரின் அழகான அரண்மனை கண்டு தேவர்களும் பிரமித்து நின்று ரசிப்பார்கள்.
அரண்மனையின் மதில்  சுவர்கள் அனைத்து
 உலகில் உள்ள அழகையும் தடுத்து நிறுத்துவதுபோல்  ஆச்சரியப்படும்படி இருந்தன.

  அழகான ஒளிபொருந்திய மாளிகையில்
 திரைச்சீலைகள்   மணிகள்  பதித்து  மிக நேர்த்தியாக இருந்தன.
 சீதை வசித்த அழகான மாளிகையை வர்ணிக்கவே முடியாது.
அரண்மனையின் ஒவ்வொரு   வாயிற் கதவும்   மிகவும் உறுதிவாய்ந்ததாகவும், மணிகள் பதித்தும்
மிக அழகாக இருந்தன.
அங்கு  அரசர்கள், நட்டுவனார்கள் ,
அரசரின் புகழ் பாடுபவர்கள், பாடகர்கள் போன்றோரால்
நிரம்பி வழிந்தது.
 யானைகளுக்கு பெரிய கஜசாலைகள்
மற்றும் குதிரை லாயங்கள்  மிகப் பெரியதாக  இருந்தன.
தேர்களும் நிரம்பி இருந்தன.

அங்குள்ள மிகப்பெரிய  சூர-வீரர்கள் , அமைச்சர்கள், சேனாபதிகள்  அனைவருக்குமே  அரண்மனை போன்றே
மாளிகைகள்  இருந்தன.
நகரத்தின்  அருகில்  உள்ள  குளக்கரையிலும்  நதிக்கரையிலும் அதிக அரசர்கள்
 கூடாரம் போட்டு தங்கி இருந்தார்கள்.
  அங்குள்ள மாந்தோப்புகள்  பார்த்து
அதன் அழகில் மயங்கி
விஷ்வாமித்திரர் மனதில் அங்கேயே
 தங்கவேண்டும் என்ற
ஆசை உண்டாகியது.
 இந்த    ஆவலை ராமரிடம் வெளிப்படுத்தினார்.
நல்லது என்று கூறி ஸ்ரீராமர் அங்கேயே முனிவர்களுடன் தங்கினார்.
  மிதிலையின்  அரசர்  ஜனகர் ,    ரிஷி  விஷ்வாமித்திரர், வருகை   அறிந்து   அவரை வரவேற்க நாணயமுள்ள , விசுவாசமுள்ள அமைச்சர்கள், மிகுந்த  போர்வீரர்கள்,
சிறந்த அந்தணர்கள், குரு, மேலும் தன் இனத்தின் மேன்மை பொருந்தியவர்கள்  அனைவரையும் அழைத்துக்கொண்டு
சென்றார்.
    ஜனகர்    ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
முனிவர்களின் அரசனான விஷ்வாமித்திரர் ஆசீர்வதித்தார்.
பிறகு அனைத்து அந்தணர்கள் குழுவிற்கும் நமஸ்காரம் செய்தார். தன்னை பெரிய பாக்கியசாலியாக எண்ணி மகிழ்ந்தார்.
நலம் விசாரித்து  விஷ்வாமித்திரர்  அரசரை அமரவைத்தார்.
அப்பொழுது பூந்தோட்டம்  பார்க்கச்சென்ற இரு சகோதரர்களும்  அங்கே வந்தனர்.

 

துளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தொன்று

துளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --             அறுபத்தொன்று

    விஷ்வாமித்திர ரிஷியின்  ஆஷ்ரமத்தில்  ரகுநாதர்  சில நாட்கள்  இருந்து  அந்தணர்களுக்கு  சேவை செய்தார்.
அந்தணர்கள்  பக்தியின்  காரணமாக  ஸ்ரீராமனுக்கும் ,லக்ஷ்மணனுக்கும்  புராணங்களின் பல கதைகளைச்சொன்னார். அந்தக்கதைகள்   அனைத்தும்
ஸ்ரீ ராமர் அறிந்தவைகளே.
   அதற்குப்பின் ரிஷி விஷ்வாமித்திரர் மிகவும் மரியாதையுடன்  ஸ்ரீ ராமரிடம் ,"வாருங்கள். மற்றொரு கதாபாத்திரம் பார்க்கலாம்" என்றார்.
அவர் தனுஷ் யாகம் கேட்டு மிக  மகிழ்ச்சியுடன்
விஷ்வாமித்திர ரிஷியுடன்  சென்றார்.

   வழியில்  ஒரு  ஆஷ்ரமம்  தென்பட்டது.  அங்கே பறவைகள் ,மிருகங்கள் போன்ற  எந்த ஒரு   ஜீவ ஜந்துக்களும் தென்படவில்லை.
அங்கு  ஒரு கல்  தென்பட்டது. அதைப் பார்த்து ஸ்ரீ ராமர்  அதென்ன  என்று வினவினார்.
அப்பொழுது ரிஷி விவரமாக அந்த கல்  கதையைச் சொன்னார்.

கௌதமமுனிவரின்   மனைவி சாபத்தின் காரணமாக கல்லாகிவிட்டாள். கல்லானாலும் மிக தைரியத்துடன்
தங்களின்  சரண கமலங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள் .
ரகுவீரரே! இவள்மேல்  கிருபை  காட்டுங்கள்.

ஸ்ரீ ராமரின் பவித்திரமான சோகங்களை போக்கும்  பாதங்களின்  ஸ்பர்சம்  பட்டதுமே  தபத்தின்  சிலையான
அஹல்யா  வெளிப்பட்டாள்.  பக்தர்களுக்கு சுகம் அளிக்கும்
ஸ்ரீ ரகுநாதரைப் பார்த்ததும் வணங்கினாள்.

அதிக அன்பும் பக்தியும் கொண்டதால், ஆனந்த பரவசத்தால்
பேசமுடியவில்லை. மிகவும்  அதிர்ஷ்டசாலியான அஹல்யா ,
பிரபுவின்  சரணங்களை சுற்றிக்கொண்டாள். அவளுடைய
கண்களில்  இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பிறகு  மனத்தை திடப்படுத்திக்கொண்டு ,
பிரபுவிடம் மிகவும் களங்கமற்ற சொற்களால் புகழத்  தொடங்கினாள்-" ஞானத்தால் காட்சியளிக்கும் ஸ்ரீ ரகுநாதரே! நீங்கள்  வாழ்க!  நான் ஒரு புனிதமற்ற பெண்;
நீங்கள் உலகத்தையே   புனிதமாக்குபவர்.
பக்தர்களுக்கு  சுகம் அளிப்பவர்.
தாமரைக் கண்ணாளரே!  பக்தர்களை பிறவித்தளையில் இருந்து  விடுவிப்பவர்.  நான் உங்களிடம் சரணடைகிறேன்.
என்னைக் காப்பாற்றுங்கள்.

முனிவர் எனக்கு சாபம் கொடுத்து நல்லதே செய்திருக்கிறார்.
அதை நான் மிகவும் அனுக்கிரஹமாக ஏற்கிறேன்.
அந்த சாபத்தின்  காரணமாக மறுபிறவியிலிருந்து
காக்கும் வல்லமை கொண்ட உங்கள் தரிசனம் கிடைத்தது.
இந்த உங்கள் தர்சனத்தை சங்கரர்  மிகவும் பெரிய பாக்கியமாகக்   கருதுகிறார்.
நான்  ஒன்றுமறியாத அறிவிலி.  என்னுடைய ஒருவேண்டுகோள் .  எனக்கு எந்த வரமும் தரவேண்டாம்.
நான் விரும்புவது ஒன்றே. எனது மனம் என்ற வண்டு எப்பொழுதும்  உங்கள்  சரண கமலங்களையேசுற்றி அன்பு -பக்தி ரசத்தை எப்பொழுதும் உறிஞ்சட்டும்.
  எந்த சரணங்களில் இருந்து கங்கை நதி தோன்றியதோ,
அதே புனித கால்களை என் தலைமேல்  வைத்து முக்தி அளித்துள்ளார். அந்த கால்களிருந்து தோன்றிய கங்கையை
சிவபெருமான் தலையில் வைத்துள்ளார். அந்த சரண கமலங்களை  பிரம்மா பூஜிக்கிறார். இவ்வாறு அடிக்கடி சரணங்களில் வணங்கி மனதிற்குப் பிடித்த  வரம் பெற்று ,
கௌதமரின்  மனைவி ஆனந்தத்துடன் தன் கணவன்  இருக்கும்  உலகத்திற்குச் சென்றாள்.

  ஸ்ரீ ராமச்சந்திர பிரபு  ஏழை  பங்காளர் , அஹல்யா போன்று காரணமின்றியே பலருக்கு முக்தி அளித்துள்ளார்.
   துளசிதாசர் சொல்கிறார்--மனமே! நீ கபடம் -வஞ்சனை மறந்து    அந்த ஸ்ரீ ராமரையே  பஜனை செய்யவும்.