Sunday, January 15, 2017

ராமசரிதமானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தைந்து

  ராமசரிதமானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தைந்து

     நாரதர் மீண்டும்  விஷ்ணுவின் மீது குற்றம் சாட்டினார் :--
அசுரர்களுக்கு மதுவும் , சிவனுக்கு விஷமும் அளித்து ,
நீங்கள் லக்ஷ்மியையும் அழகான மணியையும் எடுத்துக்கொண்டீர்கள்.
 நீ மிகப்பெரிய ஏமாற்றுக்காரன். சுய நலமுள்ளவன்.

எப்பொழுதும் கபடமாக நடந்துகொள்கிறாய்.

 நீ முற்றிலும் சுதந்திரமாக இயங்குகிறாய்.
மூளையே கிடையாது. மன இஷ்டம் போல் நடக்கிறாய்.
நல்லவனை கெட்டவனாகவும் ,
 கெட்டவனை நல்லவனாகவும்
மாற்றுகிறாய்.

மனதில் மகிழ்ச்சி-துன்பம் எதுவும் உணர்வதில்லை.

எல்லோரையும் மோசம் செய்து  அச்சமின்றி உலாவுகிறாய்.
அதனால் எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிறாய்.
நல்ல-கெட்ட செயல்கள் உனக்கு இடையூறாக இல்லை.
இன்றுவரை உன்னை யாரும் சரி படுத்தவில்லை.

என்போன்றவர்களைத் தூண்டிவிட்டு அவமானப்படுத்துகிராய்.
இதன் கேடு பலன் உனக்கு கட்டாயம் கிட்டும்.
 எந்த உடலை  எடுத்து என்னை வஞ்சித்தாயோ ,
உனக்கு அதே உடல்  உண்டாகட்டும். இதுதான் என்னுடைய சாபம்.

 நீ குரங்காக என்னுடைய உருவத்தை ஆக்கினாய்.
அதே குரங்குகள் உனக்கு உதவியாளர்களாக  ஆவார்கள்.
நான் விரும்பிய பெண்ணை  பிரித்து எனக்கு மிகவும் பெரிய துரோகம்
செய்துவிட்டாய்.  நீயும் மனைவியைப் பிரிந்து துன்புறுவாய்.

 முனிவரின் சாபத்தை சிரமேற்கொண்டு ,
மனதில் மகிழ்ச்சி பொங்க,
நாரதரிடம் மிகவும் பணிவுடன் நடந்து  தனது மாயையின்
சக்தியை போக்கிவிட்டார்.

 ஹரி தன்  மாயையை விலக்கியதுமே, அங்கே லக்ஷ்மியும் இல்லை.
ராஜகுமாரியும் இல்லை.  அப்பொழுது நாரதர் மிகவும் அஞ்சி ,
ஹரியின் பாதகமலங்களைப் பிடித்துக்கொண்டு
"சரணாகதி அடைந்தவர்களின் இன்னல் போக்குபவரே!
என்னை காப்பாற்றுங்கள்."
 கிருபை  உள்ளவரே! என் சாபம் பொய்க்கட்டும்.
 அப்பொழுது  தீன பந்துவான  ஹரி ,"இதெல்லாம் என் விருப்பமே "என்றார்.
 நாரதர் ,"நான் உங்கள் மீது பல பழி சுமத்தியுள்ளேன்.
நான் செய்த இந்த பாவங்கள் எப்படி போகும்?
 இறைவன் சொன்னார் --" ஷங்கரின்  சதநாமத்தை ஜபிக்கவும்.
இதனால் உடனே மனம்  சாந்தி அடையும்."
" சிவபகவானைப்போன்று வேறு யாரும்
எனக்கு பிரியமானவர்கள் இல்லை. "
இந்த நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்."

 முனிவரே! சிவனின் அருள் பெறாதவர்கள், எனக்கு பக்தர்கள் அல்ல.
இப்படி மனதில் உறுதி எடுத்துக்கொண்டு பூமியில் சஞ்சரிக்கவும்.
இப்பொழுது என் மாயை உன்னருகில் வராது.

பலவிதத்திலும் முனிவருக்கு அறிவுரை கூறி  ஹரி மறைந்துவிட்டார்.
முனிவர் ராமரைப் புகழ்ந்துகொண்டே
 பிராமலோகத்திற்குச் சென்றார்.

சிவகணங்கள்  முனிவரை மோகம் இன்றி
மகிழ்ச்சியுடன் வருவதைக்கண்டு
பயந்து அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டனர்.

அவரிடம் உண்மை நிலை கூறி வேண்டினர் :-
"நாங்கள் அந்தணர்கள் இல்லை. சிவா கணங்கள்.
நாங்கள் பெரும் அபராதங்கள் செய்துவிட்டோம்.
நீங்கள் கிருபை  உள்ளவர். எங்கள்  சாபத்தைப் போக்குங்கள்.
தீன பந்துவான நாரதர் சொன்னார் --
நீங்கள் இருவரும் ராக்ஷர்களாக மாறிவிடுங்கள்.
உங்களுக்கு ஐஸ்வர்யங்கள், சக்தி, கூறிய அறிவு கிடைக்கட்டும்.
நீங்கள் புஜ வலிமையால் உலகத்தையே வெல்லும் போது
விஷ்ணு மனித அவதாரம் எடுப்பார்.

 போரில் ஹரியுடன் போரிடும் பொது உங்கள் உயிர் பிரியும்.
உங்களுக்கு முக்தி கிடைக்கும். பிறகு உலகில் பிறவி எடுக்க மாட்டீர்கள்.
அவர்கள் இருவரும் முனிவரை வணங்கி சென்றுவிட்டனர்.
காலம் கூடிய போது அரக்கர்களாக பிறந்தனர்.

 தேவர்களை மகிழ்விக்கும் ,நல்லவர்களுக்கு சுகம் அளிக்கும் ,
பூமியின் சுமைகளைப் போக்கும்  பகவான் இந்த காரணத்தால் மனித அவதாரம்  எடுத்தார்  என்று வேதங்கள் கூறுகின்றன.

रामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்தி நான்கு

  ராமசரித மானஸ்--பாலகாண்டம் -௪௪ .நாற்பத்திநான்கு

      கலகப்பிரியரும்  விளையாட்டு முனிவருமான
   நாரதர் அந்த நகருக்கு வந்தார்.
 அங்கு அனைவரிடத்திலும்
எல்லா நிலையையும்  கேட்டார்,
 எல்லா செய்திகளும் கேட்டுவிட்டு
அரண்மனைக்கு  வந்தார்.
அரசர் அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தினார்.

பின்னர் தன மகளை அழைத்துவந்து நாரதரிடம் காட்டி

மகளின் குணநலன்கள் பற்றி கேட்டார்.

  அவளின் அழகைக்கண்டதும்
நாரதர் தன வைராக்கியத்தை மறந்து
அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவளுடைய சாமுத்ரிகா லக்ஷணம் கண்டு
 முனிவர் தன் நிலை மறந்தார். மனதில் மிக மகிழ்ந்தார்.
வெளிப்படையாக அவள் லக்ஷணங்களைக் கூறவில்லை.

அவர் மனதிலேயே நினைத்தார் ,
இவளை மணப்பவன் ,
மரணமடைய மாட்டான்.
போர்க்களத்தில்  அவனை யாரும் வெல்லமுடியாது.
ஷீல்நிதியை மணப்பவனுக்கு
 அனைவரும் சேவை செய்வர்.
எல்லா லக்ஷணங்களையும் சிந்தித்து
அறிந்து முனிவர் அவைகளை தன்
மனதிலேயே வைத்துக்கொண்டார்.
 சில லக்ஷணங்களை கற்பனையால்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மனதில் இதையே நினைத்தார் --
எப்படியாவது இவளை நானே மணந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஜபதவத்தால் எதுவும் நடக்காது.
ஆண்டவா!இந்தப்பெண் எனக்கு எப்படி கிடைப்பாள்.

இப்பொழுது எனக்கு அதிக அழகும் ,
உயரமும் கம்பீரமும் வேண்டும்.
ராஜகுமாரி என்னை விரும்பி மாலையிட வேண்டும்.

 நாரதர்  இறைவனிடம் அழகான தோற்றம்
 கேட்டுப் பெற விரும்பினார்.
ஆனால் பகவான் வெகு தொலைவில் உள்ளார்.
ஆனால் ஹரியைப்போன்று
எனக்கு நன்மை அளிப்பவர் யாரும்  இல்லை.
 ஆகையால் இப்பொழுது
அவர்தான் எனக்கு  உதவியாளர்.

    அந்தசமயம் அவர் பகவானை மிகவும் வேண்டினார்,
அப்பொழுது மாயைகளும் லீலைகளும் செய்யும்
 ஆண்டவன் தோன்றினார்.

பகவான் ஹரியைக் கண்டதும்
  நாரதர் மிகவும்  மகிழ்ந்தார்.
தனது விருப்பம் நிறைவேறும் என்று நினைத்தார்.
அவர் கண்கள் குளிர்ந்தன.

       நாரதர் மிகவும்  வருத்தத்துடன் அனைத்து
கதையையும் சொன்னார்.
தனக்கு உதவும்படி வேண்டினார்.
 பிரபு! எனக்கு உங்கள் அழகைத்  தாருங்கள்.
நான் எப்படியாவது அந்த ராஜகுமாரியை
அடையவேண்டும் என்றார்.

எனக்கு பயன் அளிக்க சீக்கிரம் உதவுங்கள்,
 நான் உங்களின் தாசன்.
 தன் மாயையின் மிகப்பெரிய பலத்தை நினைத்து
ஹரி பகவான் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
 நாரதரே !  உங்களுக்கு அதிக நன்மை
 ஏற்படும்  படியே செய்வேன்.
 வேறு எதுவும் செய்யமாட்டேன்.

என்வாக்கு பொய்யாகாது.
  முனிவரே! யோகியே! நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ,
பத்தியத்தை முறிக்க மருந்து  கேட்டாள், மருத்துவர் தரமாட்டார்.
இவ்வாறே உனக்கு நன்மை செய்ய  நிச்சயித்து விட்டேன்.
இவ்வாறு கூறி  இறைவன் மறைந்துவிட்டார்.

மாயையின் வயப்பட்ட  முனிவர், முட்டாளாகிவிட்டார்.

இறைவனின் தெளிவான சொல்லையும் புரிந்துகொள்ளவில்லை.

   ரிஷிராஜ் நாரதர் சுயவரம் நடந்த மண்டபத்திற்குச் சென்றார்.

அரசர்கள் தங்களை மிகவும் அலங்கரித்துக்கொண்டு ,
தங்கள் பரிவாரங்களோடு   தங்கள்
தங்கள்  ஆசனத்தில்
அமர்ந்திருந்தனர். .
நாரதர் தன்னை மிகப் பெரிய அழகன் என்றும் ,
ராஜகுமாரி தனக்குத்தான் மாலை இடுவாள் என்றும்  நம்பி
மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்.

 ஆனால்   பகவான்  மிகவும்  கருணையுடன்  முனிவரின்
நலனுக்காக   அவர்  தோற்றத்தை மிகவும் அசிங்கமாக்கிவிட்டார்.
அந்த  அழகற்ற தோற்றத்தை யாரும் வர்ணிக்க முடியாது.
எல்லோரும் அவரை நாரதர் என்றே வணங்கினர்.

   அங்கே இரண்டு சிவ -கணங்கள் நாரதரை கண்காணித்துவந்தனர்.

அவர்கள் எல்லா ரஹசியத்தையும் அறிந்திருந்தனர்.
 அவர்கள் அந்தணர் வேடத்தில் வந்திருந்தனர்.
 அவர்கள் மிகவும் நகைச்சுவையாக இருந்தனர்.
நாரதர் மிகவும் கர்வத்துடனும்  நம்பிக்கையுடனும்
  எங்கு உட்கார்ந்தாரோ ,
அங்கே இந்த இரண்டு சிவகணங்களும் அமர்ந்தனர்.

அந்தணர் வேடத்தில் இருந்ததால்
அவர்களின் நாடகம் யாருக்கும்
புரியவில்லை.

   அவர்கள் நாரதர் காதில் படும்படியாக
   பரிகாசமாகப் பேசினார்கள்.
  கடவுள் இவருக்கு நல்ல அழகாய் கொடுத்திருக்கிறார் .
 இவர் அழகைக்கண்டு  ராஜகுமாரி காதல்கொள்வாள்.
 இவரை வானரர் !(ஹரி ) என்றறிந்து தேர்ந்தேடுத்துவிடுவாள்.
 நாரதர் மாயையில் வசத்தில் கட்டுண்டுடதால்
 சிவகணங்களின் கேலியை தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை.
அறிவு மயங்கிய மோகநிலையில்  இருந்தார். அவர்கள் இவரைப்
 புகழ்வதாகவே  நினைத்தார்.

   அரசகுமாரி மட்டுமே அந்த நாரத
உருவத்தைப் பார்த்தார்.
அவருடைய முகம்  குரங்குமுகமாக இருந்தது.
 உடல் பயங்கரமாக இருந்தது.
கன்னியின் இதயத்தில் கோபம் உண்டாகியது.

   கையில் வைரமாலை எடுத்துக்கொண்டு
  தோழிகளுடன்
அன்னப்பறவைபோல் நடந்து
 அரச குமாரர்களை கண்கள் நோட்டமிட்டன.
நாரதர் அழகின் கர்வத்தால் துடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ராஜகுமாரி திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவரின் நிலைகண்டு சிவகணங்கள் சிரித்தன.
 பகவானும் அரச வேடத்தில் அங்கு வந்தார்.
 ராஜகுமாரி மகிழ்ந்து
அவருக்கு வரமாலை அணிவித்தாள்.
லக்ஷ்மி நிவாசன் ராஜகுமாரியை அழைத்துச் சென்றார்.
அரசர்கள் கூட்டம் நிராசை அடைந்தது.
மோகத்தின் காரணமாக முனிவரின் அறிவு மழுங்கிவிட்டது.
அரசகுமாரி சென்றதும் அவர் மிகவும் வருந்தினார்.
அப்பொழுது சிவகணங்கள் அவரிடம் ,
 நீங்கள் சென்று கண்ணாடியில்
 உங்கள்  முகம் பாருங்கள் என்றனர்.

  இப்படி சொல்லிவிட்டு  அவர்கள் பயந்து ஓடினார்கள்.

முனிவர் தண்ணீரில் எட்டி தன் முகத்தைப் பார்த்தார்.
தன் உருவத்தை பார்த்ததும் முனிவரின் கோபம் அதிகரித்தது.
அவர் சிவகணங்களுக்கு கடுமையான சாபம் இட்டார்.
நீங்கள் இருவரும் கபடமானவர்கள் . பாவிகள்.
நீங்கள் ராக்ஷசர்களாகக் கடவீர்.
நீங்கள் என்னை கேலி செய்தீர்கள். அதன் பலனை அனுபவியுங்கள்.
உடனே அவர் கோபத்துடன் லக்ஷ்மிபதியை சந்திக்கச் சென்றார்.

நான் அங்குபோய் சாபம் கொடுப்பேன் அல்லது இறந்துவிடுவேன் என்று
நாரதர் நினைத்தார்.
அவர் உலகத்தில் என்னை கேலிக்கு ஆளாக்கியுள்ளார்.
அரக்கர்களுக்கு எதிரியாகிய விஷ்ணு வழியிலேயே நாரதரை சந்தித்தார்.

உடன் லக்ஷ்மியும் அதே ராஜகுமாரியும் இருந்தனர். .
தேவர்களின் ஸ்வாமியான ஹரி
மிகவும் இனிமையாக கேட்டார்--

முனிவரே!கவலையுடன் எங்கே செல்கிறீர்கள்?
 இந்த சொல்லைக்
கேட்டதுமே நாரதருக்கு மிகக் கோபம் வந்துவிட்டது.

    மாயையில் கட்டுண்டதால்
 மனத்தில் அறிவு வேலை செய்யவில்லை.
முனிவர் சொன்னார்-
 "உங்களுக்கு மற்றவர்களின் சுகத்தை பார்க்கமுடியாது.
   நீங்கள் பொறாமை கொண்டவர். கபடவேடதாரி."

கடல் கடையும் போது நீங்கள்
 சிவனை பைத்தியம் ஆக்கினீர்கள்.
தேவர்களைத்தூண்டி விட்டு
அவரை விஷம் குடிக்கத்தூண்டிவிட்டீர்கள்.







 



   



   

Saturday, January 14, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று

     மலை, நதி, காட்டின் அழகான காட்சிகள் கண்டு
நாரத முனிவருக்கு
லக்ஷ்மிகாந்தனின் பகவானின்
காலடிகளில் அன்பு உண்டாகியது.
பகவானின் ஸ்மரணையில் தக்ஷ பிரஜாபதி கொடுத்த
சாபத்தின் வேகமும் பலமும்  குறைந்துவிட்டது.
மனம் இயற்கையிலேயே பவித்திரமானதால்
அவர் சமாதி நிலையில்   அமர்ந்தார்.

    நாரதரின் இந்த சமாதி நிலைகண்டு
   தேவராஜ் இந்திரன் பயந்துவிட்டான்.
  அவர் நாரதரின் சமாதி நிலை களைய ,
காமதேவனை அழைத்து மரியாதைகள் செய்து ,
எனக்காக  நீ உன் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு
நாரதர் முனி சமாதி நிலையில் இருக்கும்  இடத்திற்கு செல்.
அவரின் தவத்தைக் கலைத்து விடு.

  இதைக்கேட்டு மீனக்கொடியோன் காமதேவன் மிக மகிழ்ந்தான்.

இந்திரனுக்கு  நாரதர் இந்திரபவிக்காக ,
தவம் செய்கிறாரோ  என்ற பயம் வந்துவிட்டது.
உலகில் ஆசைகள் உள்ளவர்களும் பேராசக்காரர்களும்
கபட கொடிய எண்ணம் கொண்டோரும்
காக்கைகள் போன்று அனைவரிடத்திலும் பயப்படுவார்கள்.

முட்டாள் நாய் எலும்புத்துண்டை எடுத்துக்கொண்டு ,
சிங்கம்  அதை பிடுங்கிவிடுமோ என்று பயந்து ஓடுவதுபோல்
இந்திரன் தன்  ராஜ்யத்த்தை   நாரதர் எடுத்துக்கொள்வாரோ
என்று   நினைக்க வெட்கப்படவில்லை.

   காமதேவன் நாரதர் தவம் இருந்த ஆஷ்ரமம் சென்றதுமே,
அங்கு வசந்தகாலத்தை தோற்றுவித்தான்.
வித விதமான மரங்களில் வண்ண வண்ண பூக்கள்
மலர்ந்தன. குயில்கள் கூவின. வண்டுகள் ரீங்காரமிட்டன.
காமத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் குளிர்ந்த , மந்தமான சுகந்தக்காற்று  வீசியது.
ரம்பா போன்ற நவயுவதிகள் எல்லோருமே காமக்கலையில் நிபுணர்கள்.
அவர்கள் பலவித இனிய அலைகளுடன் பாடத்தொடங்கினார்.
கையில் பந்து எடுத்துக்கொண்டு பலவித விளையாட்டுக்கள்
விளையாடத் தொடங்கினர்.
காமதேவன் தன் இந்த உதவியாலர்களைக்கண்டு மிகவும்
மகிழ்ந்தான்.
பிறகு பல வித மாயா ஜாலங்கள் செய்தான்.
ஆனால் காமனின் எந்தக்  கலை யும்  நாரதரை எதுவும் செய்ய முடியவில்லை.   அப்பொழுது அவனுக்கு பயம் வந்துவிட்டது.
லக்ஷ்மிபதியின் பாதுகாப்பும் அருளும் பெற்றவனை
யார்  என்ன செய்ய  முடியும் ?
அவர்களுடைய மரியாதையைக் கெடுக்க முடியுமா ?

 அஞ்சிய காமன் தன உதவியாளர்களுடன் சென்று ,
முனிவரின்   சரணங்களில் தஞ்சம் அடைந்தான்.
அவர்தம் பணித்து வேண்டினான்.
நாரதருக்கு  அவன் மேல் எள்ளளவும்
கோபம் உண்டாகவில்லை.
அவர் அன்பான   சொற்களால்
 காமதேவனை சமாதானம் செய்தார் .

காமன் முனிவரின் சரணங்களை வணங்கி
அவருடைய அனுமதியும் ஆணையையும் பெற்று
தன்  உதவியாளர்களுடன் திரும்பிவிட்டான்.
காமன் இந்திர சபைக்குச் சென்று  அந்த முனிவரின்
நல்லொழுக்கம் பற்றியும் தன செயல்களின் விளைவுகள்
பற்றியும் சொன்னான்.
 அதைக்கேட்டு இந்திரன் ஆச்சரியம் அடைந்தான்.
அவன் முனிவரைப் புகழ்ந்து  ஸ்ரீ ஹரியை வணங்கினான்.

 நாரதர் மனதில் காமதேவனை வென்ற
அகங்காரம் குடிகொண்டுவிட்டது.
அந்த அகங்காரத்துடன்  நாரதர் சிவபெருமானிடம் சென்று
நடந்த விவரங்களைக் கூறினான்.
காமதேவனின் நன்னடைத்தை பற்றியும் சிவனிடம் கூறினான்.
நாரதரை தன்  பிரியமானவர் என்று நினைத்து
உபதேசம் அளித்தார் -- "முனிவரே!இந்த காமனுக்கும் உங்களுக்கும்
நடந்த நிகழ்வை ஸ்ரீ  ஹரியிடம்  சொல்லவேண்டாம்.

இதைப்பற்றிய  சர்ச்சை வந்தாலும்  வேண்டாம்.  மறைத்துவிடவும். "

    சிவன் அளித்த இந்த ஹிதோபதேசம் (பயன் அளிக்கும் அறிவுரை )
நாரதருக்குப் பிடிக்கவில்லை.  அப்பொழுது அவர் அங்கிருந்து
பிரம்மா லோகத்திற்குச்  சென்றார்.
  ஒருமுறை பாடல் கலையில் வல்லுனரான நாரதர்,
 கையில் அழகான வீணை  எடுத்துக்கொண்டு
லக்ஷ்மிநிவாசன்    பகவான் நாராயணன் இருப்பிடமான
பாற்கடலுக்குச்  சென்றார்.
 ரமாநிவசனான  பகவான்  எழுந்து
 மிக மகிழ்ச்சியுடன் முனிவரின் அருகில்
ஆசனத்தில் அமர்ந்தார்.

சிரித்து , முனிவரே!நீண்ட நாட்களுக்குப் பிறகு
தயை புரிந்துள்ளீர்கள்  என்றார்.
 சிவனின் அறிவுரை கேட்டும்   எச்சரித்தும்  மீறி
நாரதர்  காமதேவனுக்கும்
தனக்கும் நடந்த நிகழ்வு மற்றும் காமனின் நடத்தை
 பற்றியும்  சொன்னார்.

ரகுநாதனின் மாயை மிகவும் பலமுள்ளது.
அவனால்   கவரப்படாத ஜீவ ராசிகள் வையகத்தில் பிறக்கவில்லை.

பகவானின் முகம் மாறியது. அனால் மென்மையாக ,
"முனிவரே!மற்றவர்களின்  மோகம் , காமம் , ஆணவம் . கர்வம்
எல்லாமே உங்களை நினைத்தாலே போய்விடும்.
முனிவரே! ஞானம் -வைராக்கியம் இல்லாதவர்களுக்குத்தான்
மனதில் மோகமும் காமமும் ஏற்படும்.
நீங்கள் பிரம்மச்சர்ய விரதத்தில் ஈடுபட்டவர்.மிகவும் தீரர் . ஞானமிக்கவர்.
உங்களை எப்படி காமதேவர் கவர முடியும். துன்புறுத்த முடியும்.
நாரதர் மிகவும் ஆணவத்துடன் ,"இதெல்லால் உங்கள் கிருபையே "என்றார் .

 நாரதர் மனதில் கர்வம் ஆணவம் என்ற  மகா விருக்ஷத்தின்
விதை முளைவிட ஆரம்பித்திருக்கிறது என்பதை
பகவான் புரிந்து கொண்டார்.
  நாரதர் பகவானின் கமலா பாதங்களை வணங்கிவிட்டுச் சென்றார்.

அப்பொழுது லக்ஷ்மிபதி தன மாயையை செயல் படுத்தினார்.
அவர் நானூறு  மைல்  தொலைவில்  ஒரு நகரத்தை அமைத்தார்.
அந்த  நகரம் லக்ஷ்மிபதி நாராயணின் நகரத்தைவிட  மிக
(வைகுண்டத்தை விட ) மிக மிக அழகாக அமைக்கப்பட்டது.
அந்த நகரத்தில்  மிக  அழகான ஆண்களும் பெண்களும்
காமதேவனும் ரதியும்சி மானுடர்களாக  மாறியது  போல்
வாழ்ந்து வந்தனர்.
அந்த நகரத்து அரசன் ஷீல்நிதி .
அவனிடத்தில் குதிரைப்படை , யானைப் படை
மற்றும்  சேனைகள் இருந்தன.
அவனுடைய  வைபவங்களும் ஆடம்பரங்களும் ,
கேளிக்கை விளையாட்டுகளும்  நூறு இந்திரர்களுக்கு
சமமாக இருந்தன.

   அது  அழகிலும் , உருவத்திலும் , ஞானத்திலும் ,
வலிமையிலும் நீதியிலும் இணையற்ற  நகரமாக விளங்கியது.
அவருக்கு விஸ்வமோகினி என்ற ஒரு அழகான மகள் இருந்தாள்.
அவள் அழகு  லக்ஷிமி தேவியே மோகித்துக்கொள்ளும்
அளவிற்கு இருந்தது. அவள் பகவானின் மாயை.
அனைத்து குணங்களின் சுரங்கம்.
அவளின் அழகை வர்ணிப்பது மிகக் கடினம்.
அந்த ராஜகுமாரி  சுய வரத்திற்கு எண்ணிக்கையில்
அடங்கா  ராஜகுமாரர்கள் வந்திருந்தனர்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்திரண்டு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்திரண்டு

  வேதங்களின் ஒரு அங்கத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை;-

தேவர்கள் ஜலந்தர் என்ற அரக்கனுடன் போராடி  போரில் தோற்ற பிறகு,

மிகவும் துன்பப்படுவதைப் பார்த்து சிவபகவான் ஜலந்தரனுடன் போரிட்டார்.
ஆனால் அந்த மகாபலி அரக்கனை வதம் செய்ய முடியவில்லை.

  அந்த அரக்கனின் மனைவி பதிவிரதை. இதன் காரணமாக திரிபரசூரன் போன்ற வெல்ல முடியாத அரக்ககர்களை வதம்  செய்த சிவனால்,
மகாபலியை வெல்லமுடியவில்லை.

  ஹரிபகவான்  அந்த பெண்ணின் விரதத்தை தகர்த்து ,
அந்த அசுரனை  கொன்றார். அவன் மனைவி கோபம் கொண்டு தெய்வத்தையே  சபித்தாள்.
  லீலைகளின் கருவூலமாக  விளங்கிய ஹரி  அவளின் சாபத்தை ஏற்றார்.
அதே ஜலந்தர் ராவணன் ஆகப்  பிறந்தான்.
 அவனை ராமாவதாரத்தில் வதம் செய்து முக்தி அளித்தான்.
இந்த காரணத்தால்  தான் விஷ்ணு  மனிதநாக ராமராக அவதரித்தார்.

  யாக்ய வல்க்கியர் சொன்னார் -- பாரத்வாஜ் முனிவரே !கேளுங்கள், ஹரியின் ஒவ்வொரு அவதாரக் கதையையும்  கவிஞர்கள்  பலவிதமாக வர்ணித்திருக்கிறார்கள்.

  மேலும் சிவன்  சொன்னார் ,  " பார்வதி! கேள். ஒருமுறை நாரதரே விஷ்ணுவுக்கு சாபம் அளித்தார். "

இதைக்கேட்டு கிரிஜா மிக ஆச்சரியப்பட்டார். நாரதர் மிகப் பெரிய ஞானி.
விஷ்ணுவும் பக்தர்.
 இந்த ஆச்சரியமான கதையைக்  கேட்க  பார்வதி மிக ஆவலுற்றார்.
அப்பொழுது மகாதேவன் சொன்னார் . ஞானியோ முட்டாளோ ,
ரகுநாதர் விருப்பப்படி , உடனே அப்படியே நடப்பார்கள்.
யாக்யவல்கியர் பாரத்வாஜ முனிவரிடம் , நான்  ராமரின்
குணா திசயங்களைப்பற்றிக் கூறுகிறேன்.
துளசிதாசர் சொல்கிறார் --கௌரவம் மற்றும் ஆணவத்தை விடுத்து பிறவி அறுக்கும்  ராமரை பஜனை செய்.

இமயமலையில் ஒரு  பவித்திரமான குகை உள்ளது. அதன் அருகிலேயே  புனித கங்கை ஓடுகிறது. நாரதருக்கு அந்த இடம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக  இருந்தது.

   

Friday, January 13, 2017

रामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்தொன்று -துளசிதாஸ்

रामचरित मानस  ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -
                                நாற்பத்தொன்று -துளசிதாஸ்

    பார்வதி!ஸ்ரீ ஹரியின் குணம், பண்பு, பெயர் , நன்னடத்தைகள் பற்றி

அதிகமான   கதைகள் ,எல்லையற்ற வர்ணனைகள் , எண்ணிக்கையில் அடங்கா  புகழ் பாடல்கள்  இருக்கின்றன. இருப்பினும் என்னுடைய அறிவுத்திறனுக்கு ஏற்ப கதைகள் சொல்கிறேன் கேள்.

வேதங்களில் ஸ்ரீ ஹரியின் அழகான விஸ்தாரமான,களங்கமற்ற புகழ்க் கதைகள்  உள்ளன.
ஸ்ரீ ஹரியின் அவதார நோக்கங்கள்  இவைதான் , இதுதான்  என்று
சொல்லமுடியாது. பலகாரணங்கள் இருக்கலாம். அவைகளை யாரும் அறிய முடியாது.
அறிவு,மனம்,சொற்களால் ,ஸ்ரீ ராமரின் அவதாரம் பற்றி
விவாதம் செய்ய முடியாது.
இருந்தாலும் சாதுக்கள், முனிவர்கள்,வேதங்கள்,புராணங்கள் தன்  -தன்
ஞானத்திகேற்ப  ஏதோ சிறிதளவு சொல்கிறார்கள்.

  எனக்கு  புரிந்த மட்டும்  தர்மம் அழியும் போது,வீழ்ச்சி அடையும்போது ,
மட்டமான கர்வமுள்ள ராக்ஷசர்கள் அதிகரிக்கும்போது,
வர்ணிக்க முடியாத அளவிற்கு அநியாயங்கள் அதிகரிக்கும்போது,
அந்தணர்கள், பசுக்கள், தேவர்கள் ,பூமி   அனைவரும்மிகவும்   துன்புறும்போது    கிருபையின் இருப்பிடமாக ,
கருணைக்கடலான    பிரபு  வித விதமான  அவதாரத்தில் தோன்றி ,
சத் ஜனங்களின்  துன்பங்களைப் போக்குகிறார்.

அவர் அசுரர்களைக் கொன்று தேவர்களை ஸ்தாபிக்கிறார்.
தன் வேதங்களின்  மரியாதையைக் காப்பாற்றுகிறார்.
அவனியில் அவரின் பரிசுத்தமான புகழைப் பரப்புகிறார்.
ஸ்ரீ ராமரின் அவதார காரணம் இதுதான்.

அவனின் புகழ் பாடி , பக்தர்கள், வையகக் கடலைக் கடக்கிறார்கள்.
கிருபைக்கடலான  இறைவன் பக்தர்களின் நன்மைக்காக,
அவதரிக்கிறார்.
ராமாவதாரத்திற்கு அநேக காரணங்கள். ஒன்றைவிட ஒன்று விசித்திரமானது.
அழகும் அறிவும் கொண்ட பவானியே!அவரின் ஓரிரண்டு பிறவிகளின் காரணத்தை  விரிவாகக் கூறுகிறேன் .  கவனமாகக்கேள்.

 ஸ்ரீ ஹரிக்கு ஜய,விஜய் என்ற  இரு துவாரபாலகர்கள். அவரை அனைவரும் அறிவார்கள்.
அந்த இருவரும் சனகர் போன்ற அந்தணர்களின் சாபத்தால் ,
தாமச குண அசுரர்களாக  புவியில் பிறந்தனர்.
அவர்களில் ஒருவன் ஹிரண்ய கஷ்யப். மற்றவன் ஹிரண்யாக்ஷன்.
இவர்கள் தேவராஜனின் கர்வத்தைபோக்கினார்கள்  என்பதை
வையகம் அறியும். அதனால் அவர்கள் புகழ் பெற்றனர்.

  அவர்கள் போரில் வெல்லும் புகழ் பெற்ற வீரர்களாகத் திகழ்ந்தனர்.
இதில் ஒருவனான  ஹிரன்யாக்ஷணனை ஸ்ரீ ஹரி வராஹ் அவதாரம் எடுத்து
வதம் செய்தார். மற்ற ஹிரன்யகஷ்யபுவை நரசிம்மாவதாரம்  எடுத்து
வதம் செய்தார். தன் பக்தன் பிரஹ்லாதனின் புகழை
அவனியில் பரப்பினார்.
 அவர்கள் இருவருமே  தேவர்களை வெல்கின்ற,பெரும் இணையற்ற வீரர்கள்.
அவர்கள் தான்  பலசாலியான,மகாவீரர்களான  ராக்ஷசர்கள் என்பதை
அவனி அறியும்.

ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரன்யகஷ்யப் இருவரும் வதம் செய்யப்பட்ட
போதும் அந்தணர்கள் சாபத்தின் பிரபாவம் மூன்று ஜென்மத்திற்கு இருக்கும்.  ஆகையால் ஸ்ரீ ஹரி  மீண்டும் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரத்தில் ,
கஷ்யப், அதிதி அவர்களுக்கு பெற்றோரானார்கள்.
அவர்கள்  தசரதர்கௌசல்யா   என்ற பெயரில் புகழ்பெற்றனர்.
ஒரு யுகத்தில் இவ்வாறு அவதரித்து உலகத்தில் புனித லீலைகளைச் செய்தார்.

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .

     பார்வதி!  ராம் மந்திரத்தின்  சக்தியைக் கொடுத்து ,
காசியில் இறக்கின்ற பிராணிகளுக்கு  முக்தி கொடுக்கிறேன்.
     என் பிரபு  ரகுகுலத்தில் மேன்மை பொருந்திய
 தசரத குமாரன்
பக்தர்களுக்கு நன்மை அளிப்பவன் ,
அயோத்திய அரசன் ராமன் தான் .

விருப்பமின்றி அவருடைய பெயரைச் சொன்னாலும் ,
மனிதனின் பல ஜன்ம பாபங்கள் எரிந்துவிடுகின்றன.
    பக்தன்மரியாதையுடன் சொன்னால்
உலகம் என்ற பெருங்கடலை
பசுமாட்டின் கால் குளம்பு பள்ளம் கடப்பது  போல்
 மிக எளிதாக கடந்துவிடுவான்.
.
ஹே பார்வதி!அதே பரமாத்மா ஸ்ரீ ராமச்சந்திரர்.
அவரிடத்தில் ஒரு பிரமை பார்க்கக் கிடைக்கிறது .
நேஈ இப்படி கூறுவது மிகவும் சரி யல்ல.
இவ்வாறு சந்தேகம் வந்தாலே மனிதனுடைய ஞானம் , வைராக்கியம்
போன்ற நல்ல குணங்கள் போய்விடுகின்றன.

 சிவனின் பிரமையைப் போக்கும் சொற்களைக்  கேட்டு
பார்வதியின் மனதில் எழுந்த தவறான தர்க்கங்கள் போய்விட்டன.
ஸ்ரீ ராமர் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகரித்தது.
பொய்யான கற்பனை  அசம்பாவித கற்பனை போய்விட்டது.
மீண்டும் மீண்டும் சிவபகவானின் காலில் விழுந்து தாமரை போன்ற மென்மையான கரங்களால் வணங்கி , அன்பு ரசம் பொங்க,
அழகான சொற்களால் பேசினாள்:--
       நாதா!  உங்கள் கிருபையால் என் துன்பம் போய் விட்டது.
உங்கள் சரணங்களின்  அனுக்ரகத்தால்  சுகமாக இருக்கிறேன்.
உங்களுடைய நிலவின் கதிர்கள் போன்ற குளிர்ந்த சொற்களால் ,
என்னுடைய அறியாமை என்ற சரத்ருதுவின் வெயிலின் வெப்பம் போய்விட்டது.
நீங்கள் என் சந்தேகத்தைப் போக்கிவிட்டீர்கள். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
யதார்த்த ஸ்வரூபம் அறிதுகொண்டேன். அது உங்கள் கிருபையே.
நான் பெண்ணாக இருப்பதால் என் குணமே முட்டாள்தனமானது.
அக்ன்ஞானமானது. இருந்தாலும் நீங்கள் என்னை உங்களது தாசியாக ஏற்று
நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள். ராமர் பிரம்மா . ஞானஸ்வரூபர். அவினாசி, எல்லோரிடத்திலும் இல்லாமல் எல்லோரின் ஹிருதயம் என்ற நகரித்தில் வாழ்கிறார்.

 நாதா !அவர் மனிதனாக ஏன்  அவதரித்தார்?
தர்மத்தின் கொடி  பிடித்திருக்கும்  பிரபுவே!
எனக்கு ராமரின் கதையை சொல்லுங்கள்.

பார்வதியின் மிகவும் பணிவான வேண்டுதலையும் ,
ராமர் மீது தேவியின்  பவித்திர அன்பையும் கண்டு
காமதேவனின் எதிரி, இயற்கையிலேயே நல்லவரான
கிருபையின் இருப்பிடமான சிவன் மிகவும் மகிழ்ந்தார்.
பிறகு பலவிதமாக பார்வதியின் பெருமையைக்கூறி
சொன்னார் :--பார்வதி! ஸ்ரீ ராமச்சந்திரரின்
 மங்களம் நிறைந்த கதையைக் கேள்.
இதை  காகபுசுண்டி விரிவாகக் கூறினார்.
பறவைகளின் ராஜா கருடர் கேட்டார்.
அந்த உயர்ந்த உரையாடல் எப்படி நடந்தது என்பதையும் சொல்கிறேன்.
ராமரின் அவதாரம் மிகவும் அழகானது .
பவித்திரமானது. பாவங்களைப் போக்கக் கூடியது. 

Wednesday, January 11, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் -முப்பத்தொன்பது.

 ராமசரித மானஸ்-பாலகாண்டம் -முப்பத்தொன்பது.

இறைவன்  காலின்றி நடக்கிறான்.
காது  இன்றி  கேட்கிறான்.
கை இன்றி பலவித  வேலைகள் செய்கிறான்.
நாக்கு இன்றி அறுசுவைகளின்
 ஆனந்தத்தை அடைகிறான்.
பேசும் திறனின்றி பெரும் பேச்சாளன் ஆகிறான்.

உடலின்றியே  தீண்டுகிறான்.
கண்ணின்றி பார்க்கிறான்.
மூக்கின்ரி முகர்ந்து பார்க்கிறான்.
அந்த பிரம்மாவின் செயல்
அனைத்தும் அலௌகீகமானது.
அவரின் மகிமையை வர்ணிக்க முடியாது.
வேதங்களும் பண்டிதர்களும் வர்ணிக்கிற
தியானம் செய்கின்ற  இறைவன்தான்
தசரத குமாரர், பக்தர்களுக்கு நன்மை அளிப்பவர்,
அயோத்தியாவின் அரசர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி.