Wednesday, September 30, 2015

எதிலும் எங்கும் அதிசயம்.

அவனியில் பாரினில் உலகில்    வையகத்தில் ஜகத்தினில்

ஒரே உலகம் எத்தனை சொற்கள் ,இவை தோன்றியது எப்படி?

இதில் வேற்றுமொளிகலப்புகள் வேறு ,

ஆடி அந்தமில்லா அந்த கடவுள் இறைவன் பகவான்

பகலவன் பரிதி சூரியன் ஒளி  வெளிச்சம்
பகட்டு ஆடம்பரம்  மாயை ஆட்டுவிக்கும் எண்ணங்கள்

மலைக்கிறோம் பிரமிக்கிறோம் திகைக்கிறோம்

வார்த்தைகள் விளையாடுகின்றன வையகத்தில்.
அனைத்தும் ஆறறிவு  பெற்ற மனிதனை வியக்க வைக்கின்றன.
அனைத்திலும் ஒரு புதுமை.
பூவில் ,மனத்தில் ,பலன்களில் இலைகளில்
அவற்றின் சுவைகளில் அனைத்திலும் பிரமிப்பு.
நீரின் சுவை ,பாலின் சுவை தேனின் சுவை

அவனின் சுவை அறியா மானிடனின் சுவை

அவன் சுவை அறிந்த ஞானியின் செயல்பாடு
உருவமா?அருவமா ?
மதமா ?மாற்றமா ? மனிதநேயமா ?
அனைத்திலும் ஆண்டவனின் அதிசயம் அற்புதம் .
மதங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் அனைத்தும் மீறிய காதல்

நாடு ,இனம் குணம் மீறிய திருமணங்கள்,

எதிலும் எங்கும் அதிசயம்.

valaippathivar santhippu --2015- அருள் புரிய பிரார்த்தனைகள்.

இறைவன்  அவனியில் பல லீலைகள் செய்கிறான் .
அதில் ஒன்று  பொழுதுபோக்கு .

மற்றொன்று அறிவுக்குவழி  காட்டி.

அனைத்திற்கும் இணைப்பு நட்பு.

நட்பு என்பது சந்திக்காமாலேயே .

அவர்களை சந்திக்க ஒரு ஏற்பாடு .

பல எண்ணங்கள் ,வேறுபட்ட சிந்தனைகள், 

சமுதாய நிலை வெளிப்படுத்தி ஒரு வி ழிப்புணர்வு 

அதற்கு வலைப்பூ இடுகைகள்.வலைப்பதிவாளர் சந்திப்பு .

11-10-2015

புதிய    ந ட்புகள். மூத்தகுடிமக்கள்  இது தன்  விருப்பத்தால் கூடும் கூட்டம்.
அன்புக் கூட்டம். .இந்த  ஏற்பாட்டு எண்ணம் ஏற்பட 

காரணகர்த்தா இறைவன். 
இந்த வலைப்பூ சமுதாயத்தில் ஒரு சிரிப்பு ,சிந்தனை 
கல்வி ,கணினி ,அரசியல் ,மொழி என்ற விழிப்புணர்வு 

இந்த உணர்வை ஏற்படுத்திய இறைவன் 
விழா சிறக்க அருள் புரிய பிரார்த்தனைகள்.

Tuesday, September 29, 2015

அங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.

ஆண்டவன்  மனதில் இருக்கின்றானா ?இல்லையா ?

என்ற வினா விற்கு இருக்கிறான் என்றே  சொல்லவேண்டும் .

இல்லை என்போருக்கும் ஒரு உணர்வு வரும்.

அதை மறுப்போர் மன சாட்சி இல்லாதவர்.

முயற்சியில் மேன்மை என்போர்  எத்தனை பேரோ 

முன்னேறியவர் பலர் கூறும் கூற்று 

எல்லாப்புகழும்  இறைவனுக்கே.

முயற்சி கடின உழைப்பு எல்லோருமே தான்.

அதில் முன்னேறியவர்கள் எத்தனை பேர் என்ற நிலை.

முன்னேற்றம் பலருக்கு தன்னிலை அறியாமலே.

எப்படி இருந்தோம் ,நமக்குஇந்த வாய்ப்பு எப்படி கிட்டியது?

என்பதிலே ஒரு விடை. அதற்கு நம் முன்னேற்றம்.

மூவர் தொடங்கும் வாணிகத்தில் ஒருவருக்கு ஏற்றம்.

அந்தக்கடையில் அன்பு அனுசரணை ,

அவன் தம்பி கடைக்குப் போகப் பிடிக்கவில்லை 

அண்ணன் தம்பி பெற்றோர் ஒருவரே 
ஆனால் குணம் வேறு .

பண்பு வேறு 
அணுகுமுறை வேறு.
ஆற்றல் வேறு .
அங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.






Sunday, September 27, 2015

வையகத்தில் வளம் வருகிறது. வலம் வருகிறது,

மனிதர்  உயர்ந்தவர்  அல்லது  தாழ்ந்தவர்  என்ற நிலை 
 
 
அறிவு,திறமை ,ஆற்றல் ,செயலாற்றல் ,பேச்சாற்றல் பாடல் ஆடல் இசை 
 
 
என்ற அளவீட்டில் இருந்தால் நலம்.
 
 
ஆனால்  மதம் ,ஜாதி,  என்ற அடிப்படையில் உயர்வு தாழ்வு என்று ஒதுக்கி வைப்பதால் தான் ஹிந்துமதம்  ஒற்றுமை இன்றி 
 
ஒரே குரலோசை இன்றி பின்னடைந்தும் உயர்ந்தே காணப்படுகிறது.
 
 
அகில உலகில் வியாபித்திருந்த
ஹிந்து மதம் அதாவது சனாதன தர்மம் 
 
இந்தியா நேபாளம் என்று குறுகினாலும் 
 
மீண்டும் வையகத்தில் ஒளிர்கிறது என்றால் 
 
அது எந்த மதத்தையும் தூஷிக்கவில்லை.
 
இறைவனை உருவமும் அருவமாகக் கருதுகிறது.
 
 
அஹம் ப்ரஹ்மாஷ்மி 
ஆத்மா பரமாத்மா ஒன்று 
 
அத்வைத்துவம் 
 
ஆத்மா பரமாத்மா வேறு த்வைத்துவம் 
என அனைத்து நிலையிலும் இணங்கி
இணைந்து செல்லும் இந்துமதத்திற்கு 
இணையான  மதம் 
இல்லை என்பதால் தான் 
சூபி சம்பிரதாயத்தில்  அன்பே ஆண்டவன் என்று
 
 ஹிந்துக்கதைகளை கையாண்டனர்.
 
அனைத்துமதங்களும் ஆசை காட்டியோ 
 
மிரட்டியோ   மதமாற்றம் செய்தனர்.
 
எத்தகைய சூழலிலும் 
 
அஹிம்சை சத்தியம் அன்பு என்ற நிலையில் 
 
சனாதன தர்மம் தனித்து நிற்கிறது.
 
கொலைவெறி தீவிரவாதம் குறைந்து 
வளரும்  மதம் அன்பே ஆண்டவனாகிறது.
 
யோகா நாள் இதற்கு ஒரு முன்னோடி யாக
வையகத்தில் வளம் வருகிறது.
வலம்  வருகிறது,
 
 
 
 
 
 


அந்த முயற்சிக்கேற்ற ஆற்றல்

இறைவனின்  அருள் 
 
 
 
தியானம்
 
 
பஜனை
 
 
 
ஸ்லோகம்
 
 
 
ஹோமம் யாகம் 
 
 
 
இவைகள்  எப்படி இறைவனின் அருள் தரும் ?
 
 
மனம் ஒருமைப்பாடு தியானம்.
 
 
இதற்கே இறைவன் அருளவேண்டும்.
 
 
துருவனுக்கும் வால்மீகிக்கும் 
 
அருணகிரிக்கும்  துளசிதாசருக்கும் 
 
 
அவர்கள்  வாழ்வின் தாக்கம்  இறை அருள் பெறச்செய்தது.
 
 
சங்கரர் ,ராமானுஜர் ,பக்த  தியாகராஜர் ,ரமணர் ,
 
 
இவர்கள் பிறவியிலேயே  இறை அருள் பெற்றவர்கள்.
 
 
நாம் நம் கடமையில் நேர்மையாக இருந்தால் இறை அருள் பெறலாம்.
 
ரைதாஸ்  தன கடமையால் இறை அருள் பெற்றவர்.
 
ஒவ்வொரு தெய்வீக  மஹா புருஷர்களின் 
 
வாழ்க்கை இறைவன் அருளியவிதம் 
 
நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும்  அருளிய விதம் 
 
கேட்டவர்களுக்கும் அருளியவிதம் 
 
இனிய குரல் ,இணையற்ற எழுத்தாற்றல் ,செல்வநிலை 
 
பதவி  அனைத்தும் மனித முயற்சியால் கிடைக்கிறது என்பதை விட 
 
அந்த முயற்சிக்கேற்ற ஆற்றல் இறைவனின் அருள்.
 
 


Friday, September 25, 2015

மும்மூர்த்திகள் அருள் பெற :--

அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில்  பல பாடல்கள்

மனித குலத்திற்கு நன்மை தருவன,

அதை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ ,படித்தாலோ எண்ணமெல்லாம்

நிறைவேறும்  என்று அபிராமி அந்தாதி  மூலமும் உறையும் என்ற சிறு நூலில்

திரு  N .சிவராமன்  என்ற வழக்கறிஞர் எழுதி உள்ளார்.

1. மும்மூர்த்திகள் அருள் பெற :--



       "ஏந்தும்  அடியவர் ஈரே

      ழுலகினும்  படைத்தும்


       காத்தும் அழித்தும் திரிபவ


    ராம் கமழ் பூங்கடம்பு

  சாத்தும் குழல் அணங்கே மணம்

நானும் நின் தாள்  இணைக்கு என்

நாத்தங்கு புண் மொழி ஏறிய

வாறு நகை யுடை த்தே.


 

உயரவும் வீழவும்

இன்று பிரதோஷம் ,

முகநூலில்  பல விஷயங்கள்.

நான் அறியாதது .

எனக்குப் புரியாதது .

இறைவன்  ஒய்வு பெற்ற எனக்குப்

பொழுதுபோக்க ,இறை ஞானம் பெறவே இந்த

முகநூல் ,இடுகை ,கணினி ,யூ ட்யுப்  போன்றவற்றை த்

தரும்  அறிவியல் மென் பொருள் மேதைகளைப் படைத்தார் போலும்.
இருப்பினும் இந்த மாயை மனிதர்களுக்கு வேண்டிய பல

நற்குணங்களைக் குறைக்கிறது.

பலருக்கு மலச்சிக்கல்.
பலருக்கு மனச்சிக்கல்.
செவிப்பசி
ஞானப்பசி
அகராதி
பல நல்லவிஷயங்கள் இருந்தும்
கால நேர சந்தர்பம் இல்லாமல்
இதில் மூழ்குவது

பிறர் சொல்வது கேட்பதில்லை.
ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் கை பேசி .
ஒலிஒளி விளையாட்டுக்கள்
பெற்றோருக்குத்தேரியாமல் பல விஷயங்கள்

இது அறிவுக்கு அவசியம் .

அறிவுகெட்டு ஞான சூனியத்திற்கும் .

மின்சாரம் இன்றி  எப்பயனும் இல்லை.
ஆனால் தவறாக கையாண்டால் உயிர் போகும் அபாயம்.

அவ்வாறே கணினி கைபேசி உயரவும் வீழவும் காரணமாகிறது.