இறைவனின் அருள்
தியானம்
பஜனை
ஸ்லோகம்
ஹோமம் யாகம்
இவைகள் எப்படி இறைவனின் அருள் தரும் ?
மனம் ஒருமைப்பாடு தியானம்.
இதற்கே இறைவன் அருளவேண்டும்.
துருவனுக்கும் வால்மீகிக்கும்
அருணகிரிக்கும் துளசிதாசருக்கும்
அவர்கள் வாழ்வின் தாக்கம் இறை அருள் பெறச்செய்தது.
சங்கரர் ,ராமானுஜர் ,பக்த தியாகராஜர் ,ரமணர் ,
இவர்கள் பிறவியிலேயே இறை அருள் பெற்றவர்கள்.
நாம் நம் கடமையில் நேர்மையாக இருந்தால் இறை அருள் பெறலாம்.
ரைதாஸ் தன கடமையால் இறை அருள் பெற்றவர்.
ஒவ்வொரு தெய்வீக மஹா புருஷர்களின்
வாழ்க்கை இறைவன் அருளியவிதம்
நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் அருளிய விதம்
கேட்டவர்களுக்கும் அருளியவிதம்
இனிய குரல் ,இணையற்ற எழுத்தாற்றல் ,செல்வநிலை
பதவி அனைத்தும் மனித முயற்சியால் கிடைக்கிறது என்பதை விட
அந்த முயற்சிக்கேற்ற ஆற்றல் இறைவனின் அருள்.
No comments:
Post a Comment