Saturday, September 19, 2015

அதுதான் ஆண்டவன் .


இந்த உலகில் தோன்றி தவறு செய்யாமல் 

வாழ்ந்தவர் என்பது இல்லை .

ராமாவதாரத்திலும் சரி ,

க்ரிஷ்ணவதாரத்திலும் 


சித்தார்த்தர் புத்தராவதிலும் சரி 

இந்த அவதாரபுருஷர்கள் எல்லாம் 

இந்த உலக மாயையில் 

சிக்கி உலகம் பொய்யானது 

நிலையற்றது 

அனைத்தும் அழியக்கூடியது .

மாற்றம் பெறக்கூடியது 
ஆசைகளைத் தூண்டக்   கூ டியது 
என்றெல்லாம் அனுபவ ரீதியாக
கூறி சென்றுள்ளனர் .

புதியன புகுதல் பழையன  கழிதல் 

என்பதற்கே ஆறு பருவகாலங்கள்.
இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் வருகின்றன.
பருவகாலங்களுக்கேற்ற பழங்கள் .பூக்கள் 
பூக்கள் காலையில் மலர்ந்து மாலையில் வாடுகின்றன.

ஈசலுக்கு அன்றே மரணம்.
புதிய வெள்ளம் 
புதுமை விரும்பும் மனிதர்கள்.
பக்தியிலும் புதுமை ;
இறைவன் கோயில்கள் சிமென்ட்டில் சுதை சிற்பங்கள்,
மனமாற்றங்கள் 
இதெற்கெல்லாம்  அழியாத ஒன்று உண்டு 
மாறாத ஒன்று உண்டு 
தெரியாமல் காணாமல் உணரும் பொருள் பொதிந்த உண்மை உண்டு.

அதுதான்  ஆண்டவன் . 


    

No comments: