அன்பு தருவது ஆன்மிகம் ,
பண்பு தருவது ஆன்மிகம்
பரோபகாரம் தான தர்மம்
புலன் அடக்கம் ,
மன ஒருமைப்பாடு
உடலாரோக்கியம்
அனைத்தும் தருவது ஆன்மீகம்
உலகியல் பற்றை ஒதுக்க உதவுவது
உயிர் பிரியா உடலைக்காப்பது
ஆன்மீகம் .
வள்ளலார் வேண்டலும் இதுவே .
ஆசைகளடக்க ,சத்தியம் காக்க
அஹிம்சை வளரத் தேவை ஆன்மிகம்.
இல்லறத்தில் நல்லறம் காண
உபவாசம் வ்ரதம் அண்டப் பிரதக்ஷணம்
கிரிவலம் .சூர்ய நமஸ்காரம்
தோப்புக்கரணம் என உடற்பயிற்சிக்கு
ஆதாரம் ஆன்மிகம்
ப்ராணாயாமம் (மூச்சுப்பயிற்சி )
ஆயுள் விருத்திக்கு அவசியம்
ஆலயம் சென்றால் உள் ப்ரகாரம்
வெளிப்ரஹாரம் நவக்ர்ஹம் சுற்று என்றே
ஆரோக்கிய வழிகாட்டி .
துளசி, வில்வம் ,அருகம்புல் என மூலிகை மருத்துவம்
ஆன்மீக ஆற்றல் ஆண்டவன் அன்பிற்கு வழிகாட்டி.
No comments:
Post a Comment