இறைவன் வழிபாடு என்பது மிக அவசியம் என்பதற்கு
வள்ளுவர் குரல் அவர் தம் குறளில்
ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.
'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார். "
மனிதப் பிறவியில் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது.
கடல் அலைபோல் அவனது வாழ்க்கை அலை மடித்துக்கொண்டே உள்ளது.
தேவைகள் அதிகமாகிறது
ஆசைகள் அதிகமாகிறது .
ஆடம்பரங்கள் அதிகமாகின்றன.
இன்றைய புதுமை நாளைய பழமை ஆகிறது.
இதில் நாம் முன்னேற போட்டித்தேர்வுகள் ,போட்டிகள், சிபாரிசுகள்
லஞ்சங்கள் ஊழல் கள் ,வாய்ப்புகள் இழப்புகள்
கோபதாபங்கள் ,.
அதில் சில திமிங்கிலங்கள் ,சுறாக்கள்,சிப்பிகள்,
ஆழங்கள் ,
இவைகளையும் மீறி இந்த பிறவிப்பெருங்கடலில்
நமக்கு ஒரு ஆன்மபலம் வேண்டும் .
ஒரு முன்னேற்றம் வேண்டும்.
நமதுவட்டத்திலேனும் மரியாதை வேண்டும்
ஆரோக்யமான சூழல் ,உடல் ,மனம் வேண்டும் .
மன நிறைவு வேண்டும்.
மனசஞ்சலம் இன்றி ஒருமை வேண்டும் .
இதற்கு இறைவனின் அருள் வேண்டும்.
அவன் கருணை நிதிவேண்டும்
கபீர் சொல்கிறார் --
உன் கடவுளைத்தேடி அங்குமிங்கும் அலையாதே .
உன் கடவுள் உனக்குள் இருக்கிறார்.
பூவில் மணம் இருப்பதுபோல் .
கஸ்தூரி மானில் கஸ்தூரி இருப்பதுபோல்.
கையில் ஜபமாலை சுற்றுகிறது.
மனம் அலைபாய்கிறது.
இறைவனிடம் மனம் ஐக்கியப்படவில்லை .
பல காலங்கள் கழிந்துவிட்டன.
இறைவன் தரிசனம் இல்லை.
ஜபமாலையைப் போட்டுவிடு.
மனம் என்ற மாலைசுற்றுவதை நிறுத்தி
மனதை முழுவதும் அவனிடம் செலுத்து .
இறைவனைக் காணலாம்.
No comments:
Post a Comment