ஆண்டவன் மனதில் இருக்கின்றானா ?இல்லையா ?
என்ற வினா விற்கு இருக்கிறான் என்றே சொல்லவேண்டும் .
இல்லை என்போருக்கும் ஒரு உணர்வு வரும்.
அதை மறுப்போர் மன சாட்சி இல்லாதவர்.
முயற்சியில் மேன்மை என்போர் எத்தனை பேரோ
முன்னேறியவர் பலர் கூறும் கூற்று
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
முயற்சி கடின உழைப்பு எல்லோருமே தான்.
அதில் முன்னேறியவர்கள் எத்தனை பேர் என்ற நிலை.
முன்னேற்றம் பலருக்கு தன்னிலை அறியாமலே.
எப்படி இருந்தோம் ,நமக்குஇந்த வாய்ப்பு எப்படி கிட்டியது?
என்பதிலே ஒரு விடை. அதற்கு நம் முன்னேற்றம்.
மூவர் தொடங்கும் வாணிகத்தில் ஒருவருக்கு ஏற்றம்.
அந்தக்கடையில் அன்பு அனுசரணை ,
அவன் தம்பி கடைக்குப் போகப் பிடிக்கவில்லை
அண்ணன் தம்பி பெற்றோர் ஒருவரே
ஆனால் குணம் வேறு .
பண்பு வேறு
அணுகுமுறை வேறு.
ஆற்றல் வேறு .
அங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.
No comments:
Post a Comment