Sunday, February 15, 2015

உடன் அளிப்பான் என்பதில் ஐயம் உண்டா ?

இறைவன்  நம்  மதத்தில்  ,

அசுரர்களுக்கு  அரிய சக்தி அளித்து ,

அஞ்சும் அளவிற்கு அவனியல் ஆட்சி செய்யும் 

ஆற்றல் அளித்து ,தேவர்களை அஞ்சி ஓடும் நிலைக்குத்  தள்ளி  இறுதியில் வதம் செய்யும் கதைகள் அதிகம்.

  தேவர்கள் ஆண்டவனை மறந்த நிலையில் 

அசுரர்கள்  தவம் கடும் தவம் செய்து வரம் 

பெறுவதும் ,அசுரர்கள் கொடுமைக்குப்பின் 

தேவர்கள்  இறைவனை மண்டி இட்டு வேண்டுவதும் ,இறைவன் காப்பதும் 

நமக்கு இறைவனை சதசர்வ காலமும் 

பிரார்த்தனை செய்தால்  அசுர சக்தியின் ஆற்றல் 

நம்மை எதுவும் செய்யாது என்பதே தத்துவம்.

நம்மில் எத்தனைபேர் நேர்மையுடன் தினந்தோறும் 

இறைவனை  வழிபடுகிறோம் ?

என்று ஒரு நொடி சிந்த்தித்தால் அசுரர்களுக்கே 

வரம் அளிப்பவன் உண்மை பக்தர்களுக்கு 

உடன் அளிப்பான் என்பதில்  ஐயம் உண்டா ?




Saturday, February 14, 2015

முகவர் தேவையா ?ஒரு பொறி போதுமே .

எங்கும் நிறைந்துள்ள இறைவனைக்கண்டவர்களின்
வரலாற்றை மிக பக்தி சிரத்தை உடன் படித்தால்
இறைவனுக்கும் இறைவனுடன் பேட்டிகண்ட அருளாளனுக்கும்
இடையில் எந்த முகவரும் இருந்ததில்லை.
ஆதிசங்கரர் ,புத்தர்,முஹம்மது நபி ,ஏசுநாதர் இவர்களுக்கு
இறைவன் அளித்த ஞானம் நேரடியானது.
ஞானம் பெற்றோருக்கு அடியார்கள் கூட்டம் பெருகியது.
பின்னர் ஏற்பட்டதே குரு பரம்பரை.
ராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் சரி ,
ராமநாமஹரிஷியின் வரலாற்றிலும் சரி
பக்த தியாகராஜர் வாழ்க்கையிலும் சரி
இறைவன் நேரடி அருளே.
கபீர் ,துளசி தாசர் ,ரைதாஸ் ,நந்தனார் ,கண்ணப்பர் வள்ளலார்,பாம்பன் சுவாமிகள்,எத்தனையோ மகான்கள்
இறைவனின் அருளை ஒரு சிறிய உந்துதலால் தன் சுய ஈடுபாட்டால் உணர்ந்தவர்களே.
ஒரு சிறு அனல் அல்லது பாரதி சொன்னதுபோல் ஒரு அக்னிக்குஞ்சு பக்தர்மனத்தில் பதிந்தால் மனம் சிதறாமல்
ஒரு மன நிலை ஆழ் மன தியானம் ஏற்படும் .
துருவனுக்கும் அப்படியே ,பிரஹலாதனுக்கும் அப்படியே.
இந்நிலையில் இறைவனை அடைய சிறு தூண்டுதல் போதும்.
முகவர்கள் வேண்டியதில்லை.
மந்திரங்கள் வேண்டியதில்லை.
தந்திரங்கள் வேண்டாம்.
இறைவனின் முழு பாதுகாப்பும் கிடைக்கும்.
மனச்சஞ்சலம் ஓடிவிடும் .

Monday, February 2, 2015

ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.

தைப்  பூசத்  திருவிழா ,

தையல் நாயகியின்  அருமைப் புதல்வல்வன் 

கார்த்திகைப்  பெண்களின்   கரங்களில் தவழ்ந்தவன்,

கந்தன்  கலியுகவரதன்  அபிஷேகப் பிரியன் ,

காவடிகள் எடுத்துவரும் பக்தர்களின் 

கவலைகள் போக்குபவன் ,அருளாளன் .

அருணகிரிக்கும் பாம்பன் சாமிகளுக்கும் 

பொய்யாமொழி  புலவருக்கும் ,

திருமுர்காற்றுப்படை எழுதிய நக்கீரனுக்கும் 

எத்தனையோ கோடி பக்தர்களுக்கும் 

எண்ணற்ற வரமும்  அளித்து ,

ஏற்றமிகு வாழ்வளித்தவன்  .

அறுபடை வாசன் ,

அவன் அருள் பெறவே இன்று போற்றிடுங்கள் .


முருகா முருகா முருகா என்றாலே 

முக்தி கிடைத்திடும் .

வேலா,வேலா என்றாலே வல்வினை தீர்ந்து 

வெற்றிகளும் குவிழ்ந்திடும்.

கந்தா ,கந்தா ,கந்தா என்றாலே 

கண்ட வினைகள் தீர்ந்து விடும்.

கலியுக  பாவிகளின் பாதிப்பு வராது.

கந்தா ,கடம்பா ,கதிர்வேலா ,முருகா என்ற நாமங்கள் 

கனிவுதரும் ,கஷ்டங்கள் தீர்க்கும் ,முக்தி ஞானம் பிறக்கும் .

தைப்பூச நாளில் தையல்நாயகி ,

மலைமகள் ,பெரியநாயகி ,உமையாள் 

என்ற உன்னத நாமமமுடையாளின் 

உத்தம புதல்வனை ,தந்தைக்கு உபதேசித்த ஞானவேலனை 

போற்றுவோம் , ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.





Saturday, January 31, 2015

மனிதப்பிறவி தப்புவது எப்படி.?

பாவங்களுக்கு  பகவானின்  மன்னிப்பு ,

பகவானிடம் பிராயச்சித்தம்.

இறைவனிடம்  பிரார்த்தனை ,

யாகங்கள் பிராயச்சித்தங்கள்.

தசரதரும் யாகம் செய்தார் ,

ராமரும்  அஸ்வமேத யாகம் செய்தார்.

ராவணனும் தவம் செய்தான் . ஆனால்

யாருக்கும்  பகவான் நிம்மதி தரவில்லை.

புத்திரசோகம் செய்த பாவம் விடவில்லை தசரதருக்கு.

ராமன்  வாழ்வில் நிம்மதியில்லை ,
மனைவியிருந்தும் இல்லை,
ராவணனுக்கு  தவவலிமை

 இருந்தும் இல்லை நிம்மதி.

கிருஷ்ணனே உடனிருந்தும்

இறுதிவரை துன்பமே .


தங்கக் குடமளித்தாலும்
தங்க யானை அளித்தாலும்

செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டே

கண்ணனும் அடைந்தான் ராமனும் அடைந்தான்

தெய்வப்பிறவி என்போருக்கே  பாரினில் துன்பம் என்றால் ,

மனிதப்பிறவி  தப்புவது எப்படி.?





Saturday, January 24, 2015

.வைய வாழ்வில் என்றும் இன்பமே.

  இன்பமுடன்  இருக்க ,

இறைவனை  வழிபடுவோம் .

இறைவன்    இருக்கிறானா இல்லையா ?

என்ற எண்ணமே வேண்டாம் .

எண்ணங்கள் மனஓட்டங்கள் ,

சமுதாய ஏற்றங்கள் தாழ்வுகள் 

நியாயங்கள் -அநியாயங்கள் 

இவை எல்லாமே மாயத் தோற்றங்கள் .

இவைகளுக்கு மேல் ஒரு ஆற்றல் 

ஆட்டிப்படைக்கும் இன்ப-துன்பங்கள்.

அகிலத்திலும் நடக்கும் ஆச்சரியங்கள் .

அதுவே வெல்ல முடியா ,
அறிய முடியா ,
தெளிய முடியா 
புரிய முடியா  
புவி இயல் மாற்றங்கள்.
அதுவே இயற்கையின் இறைவனின் அற்புதம்.

ஆற்றல் மிகு மனிதனின் மூப்பு இறப்பே 

இறை சக்திக்கு ஒரு சான்று .

அதை வெல்ல இல்லை இல்லவே இல்லை 
மற்று ஓர்  ஆற்றல்.

மரண நேரத்தில் அவனை நினைக்காமல் 

சதா சர்வகாலமும் அவன் சக்தி அறிந்து 

வழிபட்டால்  

வையக வாழ்வில் என்றும் இன்பமே .




 ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் ;--



insaaniyat -manushyata -इंसानियत -मनुष्यता - மனிதத் தன்மை (உர்து-ஹிந்தி )

majhab --mat -- मज़हब -मत  மதம் உர்து-ஹிந்தி 

naheen  sikhatae ekta. --नहीं सिखाते  एकता -ஒற்றுமை கற்றுத் தருவதில்லை 

toophan -aandhee sunaami sikhate manushy kee ekta .तूफान -आंधी -सुनामी सिखाते  मनुष्य की एकता  புயல் -சூறாவளி மனித ஒற்றுமை கற்றுத்தருகின்றன.

havaayee jahaj kee durghatna ya jahaj ka doobna sikhata -manav ekta.
हवाई जहाज की दुर्घटना  या जहाज़ का डूबना सिखाता -मानव एकता.
விமான விபத்து அல்லது கப்பல் மூழ்குதல் கற்றுத்தருகிறது 
மனித ஒற்றுமை.

badh-dhoop -sardee sab ke barabar.बाढ़ -सर्दी -धूप सब के बराबर.
வெள்ளம் -வெயில் -குளிர் எல்லோருக்கும் சமம்.

shaareerik bandhan -bachche  yutpaadan -antar dharm ke sambhog men bhee barabar.sukh

शारीरिक बंधन -बच्चे उत्पादन -अंतर धर्म के संभोग  में भी बराबर सुख.
உடல் கட்டு -குழந்தை உற்பத்தி -வேற்றுமத உடல் உறவு இன்பம்  சமமே 


swarth sikhata /ahankar sikhaata manushy -manushy men bhed 
स्वार्थ सिखाता-अहंकार सिखाता मनुष्य -मनुष्य में भेद.
சுயநலம் கற்றுத்தருகிறது -ஆணவம் கற்றுத்தருகிறது -மனிதர்களுக்குள் வேற்றுமை.

maaro -kaato apna mazhab badhaao 
मारो -काटो अपना मज़हब बढाओ
அடி-கொல்லு  தன் மதத்தை வளர் 

dhan do to do mandir -masjid 
धन दो तोड़ो मंदिर -मस्जिद 
பணம் கொடு கோயிலை இடி -மசூதி இடி.

aise dharm-vishvaasee ko khuda ya eeshvar  naheenchaahta
ऐसे धर्म विश्वासी को खुदा-ईश्वर नहीं चाहता..
இப்படிப்பட்ட தர்மத்தை கடவுள் விரும்புவதில்லை.
khuda--கடவுள் -ஈஸ்வர் -கடவுள் 


khuda ya eeshvar ke bhakt ho to taaleem yaa shiksha  lo .
खुदा या ईश्वर के भक्त  हो  तो तालीम या शिक्षा लो 
கடவுளின் பக்தன் ஆனால்  கல்வி பேரு 

manush manushy prem -ekta-manavata /insaaniyat ka.
मनुष्य -मनुष्य प्रेम -एकता -मानवता /इंसानियत का 
மனிதருக்குள் அன்பு -ஒற்றுமை -மனிதத்தன்மை 

n to khuda maaph naheen karega ya eeshvar kshama naheen karega.
न तो खुदा माफ न करेगा . ईश्वर क्षमा न करेगा 
இல்லை என்றால் குதா  மன்னிக்கமாட்டார் . கடவுள் மன்னிக்கமாட்டார்.




Saturday, January 17, 2015

கரி முகத்தான் பாதம் பணிவோம்.

அருகம்புல்  போதுமே ,அரிய பக்திரசம்  காட்ட,
கரி முகத் தோனே ,  கருணை  வடிவோனே,
கலக்கம் தீர்ப்போனே ,கரைகளில் அமர்வோனே .
கணங்களின் நாயகனே,கணநாதா,காப்பாற்ற வருவாயே.

கற்பகவிநாயகா,கற்பனைவளம் தர  வருவாய்;
கல்லாத கவி  ஒவ்வாததை எழுதும் என் ,
கவித்தவற்றை மன்னிப்பாயாக்,

சக்திவிநாயகா!சங்கடங்கள் தீப்பாயாக.
சித்திவிநாயக சித்திதாருமையா.
வர சித்தி விநாயக வரம் தாருமைய.
ஔவையாரின் அகமகிழ்வோனே!
ஔடதமாய் வருவாய் அப்பா.

எழில் நாயகன்!எங்கும் வியாபித்து இருப்போன்!

அரமரத்தடி அமர்ந்த பெருமான்!

ஆனந்த விநாயகன் ,கலியுக தெய்வம்!

கரிமுகத் தோன்  பாதம் பணிவோம்.







Wednesday, January 14, 2015

ஓங்குக இறைவனின் அருளாட்சி.

            இறைவன்  இயற்கையில் 

             நமக்கு  நலமது அருளுவதே 

             அதி மன நிறைவு ;அதி மகிழ்ச்சி;

              நம் முன்னோர்கள் இயற்கைக்கு  

              அதி முக்கியத்துவம் அளித்த  தாலே 

             இன்று நாம் கொண்டாடும் பொங்கல் .

              சூரியனை இறைவனாக்கி ,அவனால் 

             நாம் பெரும் மகிழ்வுக்கு  நன்றி காட்டும் 

            இன்றைய  இனிய நாள்;
             
              இயற்கை  அளித்த உணவுவகைகள் ,

            அதை  உழைத்து  வளர்த்த உழவன் 

             அவனுக்கு உதவும் காளைகள் , என

            அனைவருக்கும் மன மகிழ்வு ,

            மன நிறைவு நாள்.
            இந்த புனிதநாளில்  அனைவரும் 

             அனைத்து நலம் பெற்றிட ,

             ஆதித்ய பகாவானை  
                 அகத்தில் வைத்து  போற்றுவோம்.
            பாரில்   பாரதம் பரிதிபோல் ஒளிவீச

            பகலவனை  போற்றுவோம்.

            என்பில் அதனை வெயில்போல் காயுமே 

             அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.

         அன்புடன் அனைவரும்  சேர்ந்து 

          அன்பருக்கு அருளும் 
              ஆண்டவனைப்  
                  போற்றுவோம்.

பொங்கல் திருநாளில் பொங்குக மகிழ்ச்சி;
ஓங்குக  இறைவனின்  அருளாட்சி.