தைப் பூசத் திருவிழா ,
தையல் நாயகியின் அருமைப் புதல்வல்வன்
கார்த்திகைப் பெண்களின் கரங்களில் தவழ்ந்தவன்,
கந்தன் கலியுகவரதன் அபிஷேகப் பிரியன் ,
காவடிகள் எடுத்துவரும் பக்தர்களின்
கவலைகள் போக்குபவன் ,அருளாளன் .
அருணகிரிக்கும் பாம்பன் சாமிகளுக்கும்
பொய்யாமொழி புலவருக்கும் ,
திருமுர்காற்றுப்படை எழுதிய நக்கீரனுக்கும்
எத்தனையோ கோடி பக்தர்களுக்கும்
எண்ணற்ற வரமும் அளித்து ,
ஏற்றமிகு வாழ்வளித்தவன் .
அறுபடை வாசன் ,
அவன் அருள் பெறவே இன்று போற்றிடுங்கள் .
முருகா முருகா முருகா என்றாலே
முக்தி கிடைத்திடும் .
வேலா,வேலா என்றாலே வல்வினை தீர்ந்து
வெற்றிகளும் குவிழ்ந்திடும்.
கந்தா ,கந்தா ,கந்தா என்றாலே
கண்ட வினைகள் தீர்ந்து விடும்.
கலியுக பாவிகளின் பாதிப்பு வராது.
கந்தா ,கடம்பா ,கதிர்வேலா ,முருகா என்ற நாமங்கள்
கனிவுதரும் ,கஷ்டங்கள் தீர்க்கும் ,முக்தி ஞானம் பிறக்கும் .
தைப்பூச நாளில் தையல்நாயகி ,
மலைமகள் ,பெரியநாயகி ,உமையாள்
என்ற உன்னத நாமமமுடையாளின்
உத்தம புதல்வனை ,தந்தைக்கு உபதேசித்த ஞானவேலனை
போற்றுவோம் , ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.
No comments:
Post a Comment