Wednesday, December 7, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -- 6

                       பாலகாண்டம் -6-ராமசரிதமானஸ்

       நதிகள்  குளங்கள்  போன்று
 மனிதர்களும்
        எண்ணிக்கையில் அதிகம்.
         வெள்ளம் பெற்று குளங்கள் மகிழ்கின்றன.
        மனிதனும் தன்  முன்னேற்றத்தால்
        மகிழ்ச்சி அடைகின்றான்.

       சமுத்திரமானது   முழு  நிலவைக்கண்டு
        பொங்குகிறது. அப்படி  சமுத்திரம் போன்று
       மனிதர்கள்  எண்ணிக்கையில் குறைவு.
   
        என்னுடைய  பாக்கியம்  சிறிது, ஆனால்  விருப்பம்  மிகப் பெரிது,
        என் ராமனின் புகழ்  கேட்டு  நல்லவர்கள் சுகம் பெறுவார்கள்.
        துஷ்டர்கள்  பரிகசித்து  சிரிப்பார்கள்.

       துஷ்டர்கள்  சிரிப்பதால்  எனக்கு  நன்மையே  உண்டாகும்.
   
        இனிமையான  குரல் கொண்ட

        குயிலுக்கு காகத்தின்  குரல்  
      கர்ண கொடூரமாகத்தான்  இருக்கும்.
        கொக்கு அன்னப்பறவையையும் 
      தவளை  வானம் பாடி யையும் 
      பார்த்து சிரிக்கும்.
     அவ்வாறே இழிமனம்  படைத்தவர்கள்
     நல்லதைக்கேட்டு சிரிக்கிறார்கள்.

    கவிதைகளை  ரசிக்கத் தெரியாதவர்களுக்கும் ,
   ஸ்ரீ  ராமச்சந்திரன்  மேல்  அன்பு  இல்லாதவர்களுக்கும்
    இந்த  ராம கதை பரிகசிக்கத்தக்கதாக  இருக்கும்.
   இந்த  ராமகாதை மக்கள்  மொழியில் எழுதப்படுகிறது
   என்னுடைய  அறிவு ஒன்றும்  அறியாதது.
  இதனால் இது சிரிக்கத்  தகுதியானதுதான்.
   சிரிப்பதால் இதில் எதுவும்  தவறில்லை.
    இவர்களுக்கு இறைவனின்  திருவடிகளில் அன்பில்லை.
    நல்ல புத்தியும்  இல்லை.
   சிவனின்  -விஷ்ணுவின் மேல் பக்தி  உள்ளவர்களுக்கு
  இருவரிடத்திலும்  வேற்றுமை  காணாதவர்களுக்கு
  இந்த  ரகுநாதரின்  கதை இனிமையாக ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

  நல்லவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரன் மீதுள்ள  பக்தியால் ,
  அலங்கரிக்கப்பட்டதை  அறிந்து அழகான
   வார்த்தைகளால் புகழ்வதைக்   கேட்பார்கள்.
  நான்  கவிஞனுமில்லை.
  நல்ல இலக்கியப் படைப்பில்
    தேர்ந்தவனுமில்லை.
  எனக்கு  எல்லா கலைகளும் தெரியாது.
  கல்வியும் அதிகமாகக் கற்றதில்லை .
  பலவித  எழுத்துக்கள், சொற்கள், பொருள்கள்,
 அணிகள், சந்தங்கள், பாவங்கள், ரசங்கள் , அதன் வேறுபாடுகள்,
  கவிதைகளின்  வித விதமான குணங்கள் -குற்றங்கள்  உள்ளன.
 இவைகளில் கவிதை சம்பந்தமான ஒரு விஷயத்திலும் ஞானம் கிடையாது.

நான்  சத்தியமாக வெள்ளைக் காகிதத்தில்  கைவைத்து சொல்கிறேன்.
என்னுடைய படைப்பு எல்லா குணங்களும் இல்லாமல் இல்லை.
இதில் உலகப் புகழ் பெற்ற ஒரு குணம் இருக்கிறது.
அதை  எண்ணி நல்ல அறிவு  உள்ளவர்கள்,
  தூய ஞானம் உள்ளவர்கள்,  இந்தக் கதையைக் கேட்பார்கள்.

  இதில் ரகுநாதருடைய  உயர்ந்த பெயர் உள்ளது.
   அது மிகவும்  பவித்திரமானது.
   அதில்  வேதம் வேதங்கள் புராணங்களின் சாரம் உள்ளது.
   நல்லது செய்யும் பவனம் உள்ளது,
   அமங்கலங்களை  போக்கக்கூடியது,

   பார்வதியுடன் சேர்ந்து எப்பொழுதும்
    சிவனும் ஜபித்துக் கொண்டிருக்கும்   ராமநாமம் .
   நல்ல கவிஞர்கள் மூலம்  எழதப்பட்ட  அபூர்வமான
  கவிதைகளும்  ராமநாமமின்றி  சோபிக்காது.
  நிலவுபோன்ற முகமுடைய  அழகான பெண்ணும் ஆடையின்றி
   சோபிக்க மாட்டாள்.

  இதற்கு விபரீதமாக  தீய கவிஞர்கள்
 இயற்றிய கவிதைகளும் ராமநாமமும் ,ராமர்
  புகழும்  சேர்ந்தால்   அறிவுள்ளவர்களும்
  மரியாதையுடன்  பாடவும் கேட்கவும் செய்கிறார்கள்.

 நல்லவர்கள்  வண்டுகள் போல் நல்லவற்றை மட்டுமே ஏற்கிறார்கள்.
என்னுடைய இந்த படைப்பில் கவிதைகளின் எந்த ரசமும்  இல்லை.
ஆனால் இதில் ஸ்ரீ ராமருடைய பிரதாபம் உள்ளது.
 என் மனதில் இந்த நம்பிக்கைத் திடமாக உள்ளது. .
நல்லவர்களுடன்   சேர்ந்தால் நல்லதே நடக்கும்.
இதில் சிறப்பு ஏற்படும்.
  ஊதுபத்திப்  புகை மனம் பரப்பி
புகையின் எரிச்சலான குணத்தை  விட்டுவிடுகிறது.
அவ்வாறே என்னுடைய கவிதை  நிச்சயமாக அழகற்றது.
ஆனால் இதில் உலகத்திற்கு நல்லது செய்யும் ராமகதை
கருவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்தது.

இந்த ரகுநாதரின்  கதை நல்லது செய்து
  பாவங்களைப் போக்கக் கூடியது.
என்னுடைய  இந்த அழகற்ற கவிதை
கங்கை நதி போன்று  வளைந்து செல்கிறது.
ஸ்ரீ ராமச்சந்திரனின் பெயருடன் புகழ் பாடுவதால்
நல்லவர்களால் விரும்பப்படும்.
சுடுகாட்டின்  சாம்பல் மகாதேவனின்
உடலில் பூசுவதால் புனிதமாகிறது.
நினைத்தாலே புனிதத்தை உண்டாக்கக் கூடியது.
ராமரின்   புகழ்  பாடுவதால் எல்லோருக்கும்
மிகப்பிரியமான  நூலாகும். மலயபர்வதக் காற்றின் சேர்க்கையால்
சந்தன மரத்தில்   நறுமணம்  வீசுகிறது.
நறுமணம்  இருப்பதால்  அதை   கட்டை என்று யாரும் நினைப்பதில்லை.

 கருப்பான   பசு மாடு  வெண்மையான
 ருசியான  பால் தருவதுபோல்    நான்

கிராமிய மொழியில் ராம   நாமத்தின் புகழையே பாடுவதால் அதுவும்    அனைவருக்கும்  பிடிக்கும். பால்  போல்  நலமளிக்கும்.
பாமரர்கள்  மொழியில் எழுதிய ராமாயணமும் வித்வான்களாலும்
அறிவாளிகளாலும்  விருப்பமாக பாடப்படுகிறது.













     
       

பாலகாண்டம் --௫. 5 இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

பாலகாண்டம் --௫. 5  இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

      இறைவனால் படைக்கப்பட்ட
    தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், நாகங்கள்,
    பிரேதங்கள்,         முன்னோர்கள், கந்தர்வர்கள், கின்னர்கள்,
     மாயாவிகள்  அனைவரையும்  வணங்கு கிறேன்.
    இப்பொழுது  அனைவருமே என்மேல்  கிருபை காட்டுங்கள்.

   எண்பத்திநான்கு  லக்ஷம் யோனிகளில்
    தோன்றும் ஜீவராசிகள்
   வியர்வையிலிருந்தும், காற்றிலிருந்தும்,
    ஆகாயத்திலிருந்தும், தண்ணீரிலிருந்தும்  
    படைத்த அனைத்தும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால்.
   மனிதனிடம் தோன்றுபவை,
   முட்டையில் இருந்து  தோன்றுபவை,
    தானே  தோன்றுபவை அனைத்தும்
    இறைவனால் படைக்கப்பட்டதால்  வணங்குகிறேன்.

   ஸ்ரீ ராமச்சந்திரரின்   குணங்களை
   வர்ணனை செய்ய விரும்புகிறேன்.
  எனது அறிவு மிகவும்  சிறிது.
   பகவானின் குணமே அதிக  ஆழமானது.
   எனது  மனம்  ஏழை ஆனால் மனோரதம் ராஜா .
   எனக்கு எவ்வழியும் தோன்றவில்லை.

    எனது அறிவு  மிகவும் மட்டமானது.
   எனது  விருப்பம்  மிகவும்  உயர்ந்தது.
   அமிருதம் பெரும்  விருப்பம் .
  உலகுடன்  இணைந்த மோர் கூட இல்லை.
  நல்லவர்களே! என் அதிகப்பிரசங்கித்தனத்தை
  மன்னித்துவிடுங்கள்.
 என்னுடைய  மழலை வர்ணனையை  கேளுங்கள்.

   மழலைச் சொற்களை பெற்றோர்கள்
   மிகவும் ரசிப்பார்கள்.
 ஆனால்  கேட்ட எண்ணமுள்ளவர்கள்,கொடியவர்கள்,
  வஞ்சனைகள் செய்வோர்   மற்றவர்களின்  தவறுகளை
 தங்கள் நகைகளாக அணிவர்.    சிரிப்பார்கள்.

   ரசமோ /ரசமற்றதோ  தன்   கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கும்.
மற்றவர்களின்  படைப்புகளைக்கேட்டு படித்து  ரசிப்பவர்கள்
 உத்தமமானவர்கள்  வையகத்தில் குறைவே.


.









.

       

         

Monday, December 5, 2016

 பாலகாண்டம் -.4

    துஷ்டர்கள்  மிகவும்  இரக்கமற்றவர்கள்.
   அவர்களுக்கு நன்மை செய்தவர்களுக்கும்
    தயங்காமல்  தீமை  செய்வார்கள்.
    அவர்கள் மற்றவர்களுக்கு   தீங்கு
    விளைவிப்பதையே   லாபமாகக்  கருதுபவர்கள்.
    பகவான்  விஷ்ணு ,  பகவான்  சங்கரர் இருவரின்
     புகழுக்கு    இடையூறு  உண்டுபண்ணுபவர்கள்.

    மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவிப்பதில்
    சஹாஸ்ரபாஹுவுக்கு  சமமானவர்கள்.
    மற்றவர்களின் தவறுகளை  ஆயிரம் கண்
      கொண்டு பார்ப்பவர்கள்.
      மற்றவர்களுக்கு  தீங்கு விளைவிக்க
     நெய்யில்  விழும்  ஈ  போன்றவர்கள்.
      மற்றவர்களை  எரிக்கின்ற  நெருப்பு போன்றவர்கள்.
     கோபத்தில்  எமனைப் போன்றவர்கள்.
      பாவம் மற்றும் தீய குணங்களின் செல்வந்தர்கள் .
      குபேரர்கள். இவர்களின்  வளர்ச்சி  மற்றவர்களின்
    நன்மையில் தீங்கு விளைவிக்கும்
    வால்   நக்ஷத்திரம்      போன்றவர்கள்.
  இவர்கள்  கும்பகர்ணன்  போன்று
   தூங்குவதில் தான்   நன்மை   இருக்கிறது.

   பனிமழை   வயலையும்  நஷ்டப்படுத்தி
    தானும் உருகிவிடுவதுபோல்
   தீயவர்கள்  மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவித்துத்
  தன்னையும்   மாய்த்துக் கொள்வார்கள்.
  நான்  துஷ்டர்களை  ஆதிசேஷன்  போன்று  வணங்குகிறேன்.

  இறைவனின் புகழைக்  கேட்க  ஆயிரம்  காதுகள்  கேட்ட

ராஜா ப்ருத்து  போன்று  அவர்களை  நினைத்து வணங்குகிறேன் .

அவர்களை  சுராபானம்  விரும்பும்
இந்திரன் போன்று  நினைத்து    வணங்குகிறேன்.

  துஷ்டர்கள்  தனது  நண்பர்களோ  விரோதியோ  நலமாக  இருந்தால்

பொறாமைப் படுவார்கள்.  இதை அறிந்தும்
 இவர்களை நான்  வணங்குகிறேன்.

இந்த  துஷ்டர்கள் தங்கள் தீய  குணத்தை  விடமாட்டார்கள்.

காகத்தை அன்புடன்  வளர்த்தாலும்  மாமிசம்  சாப்பிடுவதை  விடாது.

       நான்  சாதுக்கள் மற்றும்  சாதுக்கலல்லாத
     துஷ்டர்களையும்  வணங்குகிறேன்.
     இருவருமே  இன்னல்  அளிப்பவர்கள்.
     இந்த  இன்னலில்  வேறுபாடு  உள்ளது.
      சாதுக்களின்  பிரிவு  உயிர்  எடுப்பதுபோல் இருக்கும்.
      பிரிவுத் துன்பம்  உண்டாகும்.
      அசாதுக்கள் துஷ்டர்களின்  சேர்க்கை  சந்திப்பு  இன்னல் அளிக்கும்.

       நல்லவர்கள்  துஷ்டர்கள்  ஒரே  மாதிரிதான்  பிறக்கிறார்கள்.
       ஆனால் அவர்களின்  குணங்களில்   பெருத்த  வேறுபாடு காணப்படும்.

       நல்லவர்களின்  குணம்   தாமரை  மலர்  போன்றது.
       ஆனால்  தீயவர்கள் அட்டை  போன்றவர்கள்.
       உடலின்  ஸ்பர்ஷம்  பட்டதுமே  இரத்தத்தை  உறிஞ்சிவிடுவார்கள்.
      சாதுக்கள்  நல்லவர்கள்  அமிர்தம்  போன்றவர்கள்.
      மோகம் , அறியாமை , கொண்ட  மதுபோன்றவர்கள்.
     
     இருவருமே  உலகில்  பிறந்தாலும் குணத்தால்  வேறுபட்டவர்கள்.

     நல்லவர்கள்   கெட்டவர்கள்  இருவருமே
      தங்கள்  கர்மத்தின்  படி
     புகழையும்  இகழ்ச்சியும்  பெறுகிறார்கள்.
     அமிர்தம் ,நிலவு, கங்கை  போன்றவர்கள்   சாதுக்கள்.

     விஷம் ,நெருப்பு, கலியுகத்தின்  பாப  நதிகள்  போன்றவர்கள்   துஷ்டர்கள்.

   கர்மங்களை  நாசம்  செய்யும் கழுகு  போன்றவர்கள்  கெட்டவர்கள். .
 
   எதை  யார் விரும்புகிறார்களோ
   அது  அவர்களுக்கு மிகவும்  பிடித்தமானது.

  நல்லவன்  நல்லதையே  ஏற்றுக்கொள்கிறான்.

 தாழ்ந்தவன்   தாழ்ந்ததையே    விரும்புகிறான்.

அமிர்தம் புகழ்ந்து  அமரராக்குகிறது.

விஷம்  கொல்கிறது.

துஷ்டர்கள்  பாவச்செயளுக்கும் , தீய  குணங்களுக்கும்

புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள்  புண்ணியாத்மாக்கள் .
 அவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள் ,தீயவர்கள்  இருவரையுமே  ஆண்டவன் படைக்கிறான் .
வேதங்கள், வரலாறுகள், புராணங்கள்  அனைத்துமே
 ஆண்டவன்  படைப்பில்  நற்குணம் -துற்குணம்  இரண்டுமே உள்ளன.

 பிரம்மாவின்  படைப்பில்  அனைத்துமே  இரட்டைப் பிறவிகள்.

 சுகம் -துன்பம், பாவம் -புண்ணியம், இரவு-பகல்,
 தேவர்கள் -அரக்கர்கள் ,
அமிர்த, -விஷம், மாயை-பிரம்மம், ஜீவன் -கடவுள்,
செல்வம் -தரித்திரம் ,
ஏழை -அரசன், காசி -மகதம்,
கங்கா-கர்ம்நாசா,மார்வாட்-மாளவ ,
அந்தணன் -கசாப்புக்கடைக்காரன்,
 சுவர்க்கம் -நரகம் ,இல்லறம் -துறவறம்.

வேத சாஸ்த்திரங்கள் அதன்
 நன்மை -தீமைகளைப் பிரித்துக்காட்டுகின்றன.

  இறவன்  இவ்வுலகத்தில் அசையும் பொருள் -அசையாப்பொருள்

 குணமுள்ளவை-குணமற்றவை  அனைத்தையும் படைத்துள்ளான்.

படைக்கிறான் .படைப்பான்.
 ஆனால்  நல்லவர்கள் -சாதுக்கள் நல்லதை ஏற்று
 அல்லதை  அன்னப்பறவைபோல்  விட்டுவிடுவார்கள்.
அன்னப்பறவை  பாலும் தண்ணீரும் கலந்த  கலவையில்
தண்ணீரைப் பிரித்து விட்டு  பாலை  மட்டும் அருந்தும்.
மகான்களும்  அப்படியே , நல்லதை  ஏற்று ,
தீயதை  விட்டுவிடுவார்கள்.
 கடவுள்  இவ்வாறு  பிரித்து  அறியும்
அறிவைக் கொடுத்துள்ளார்.

இருப்பினும்  காலம் ,சூழல், நட்பின்  வயப்பட்டு

நல்லவர்களும்  மாயையில் சிக்கி கட்டுண்டு
நல்லது செய்வதிலிருந்து  நழுவி  விடுவார்கள்.

இறையன்பர்கள் அந்த தவறுகளை உணர்ந்து அறிந்து  தெளிந்து

தங்களைத்  திருத்திக் கொள்கிறார்கள்.
துன்பம் -தவறுகள் போக்கி களங்கமற்ற
 புகழைத் தருகிறார்கள்.
துஷ்டர்களும் எப்பொழுதாவது
 நல்லவர்களின் சேர்க்கையால்
நல்லது செய்யத் துவங்குகின்றனர்.
ஆனாலும்   மாயையின் வசத்தால்
களங்கப்பட்டு தீயவை செய்வதை விடுவதில்லை.

 வேஷம் போட்டு ஏமாற்றும் மோசக்காரர்களைப் பார்த்து
  அவர்களின் கபடப் பேச்சில்  மயங்கி
  அவர்களை பூஜிக்கின்றனர்.
ஆனால்  ஒருநாள்  அவர்களின்  வேடமும்  கலைகிறது.

எடுத்துக்காட்டனவர்கள் -காலநேமி, ராவணன் , ராஹு போன்றவர்கள்.

 கெட்டவர்கள் வேஷம் போட்ட  ஹனுமான் ,ஜாம்பவானுக்கும்
   மரியாதையும் கவுரவமும்  கொடுக்கிறார்கள்.
 கெட்டவர்கள்  சேர்க்கையால்  தீமையும் ,
 நல்லவர்கள்  சேர்க்கையால்  நன்மையையும் உண்டாகின்றன.

  காற்றின் சேர்க்கையால் தூசியும் விண்ணைத் தொடுகின்றன.
    அதே தூசி தண்ணீருடன் சேர்ந்து சகதியுடன்  கலந்துவிடுகின்றன.

   சாதுக்களின் வீட்டிலுள்ள கிளியும் மைனாவும்
  ராமா , ராம  என்கின்றன.
தீயவர்கள் வீட்டில்  வளரும் கிளியும் மைனாவும்
திட்டும் மோசமான வார்த்தைகள்  பேசுகின்றன.

 கெட்டவற்றின்   சேர்க்கையால்  புகை கருப்பாகின்றது.
அதே புகையின்  கருப்பு புராணங்கள் எழுதப்  பயன்படுகிறது.
 அதே  புகை  தண்ணீர் ,நெருப்பு,காற்றுடன்
சேர்ந்து மேகமாகி உலகத்திற்கு
வாழ்க்கை அளிப்பதாக மாறுகிறது .

 கிரகங்கள், மருந்துகள், தண்ணீர் ,காற்று வஸ்த்திரங்கள் -
 இவை எல்லாமே, நல்லவைகள் -
கெட்டவைகளுடன்
 சேர்ந்து  உலகில்
நன்மை தீமைகளைச்
செய்கின்றன.
சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் கெட்டிக்காரர்களும் இந்த  விஷயத்தைத் தெரிந்து புரிந்து தெளிந்து
நடந்து கொள்கின்றனர்.

 பாதத்தின் இரண்டு பதினைந்து நாட்களிலும்
 இருட்டும்  வெளிச்சமும் சமமாகவே உண்டாகின்றன.
ஒன்றின் பெயர் சுக்லபக்ஷம். மற்றொன்றின் பெயர் கிருஷ்ண பக்ஷம்.
ஒன்று நிலவை பெரிதாக்குகிறது. மற்றொன்று குறைக்கிறது. ஒன்றிற்கு புகழும் மற்றதற்கு இகழ்வும் ஏற்படுகிறது.

 உலகில் இருக்கும் அனைத்து அசையா அசையும் படைப்புகளை
நல்லவை தீயவைகளை  இறைவனின் படைப்பு எனவே கருதி
வணங்குகிறேன்.









.





   

Sunday, December 4, 2016

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3

  ஸ்ரீ  ராமசரித மானஸ்--பாலகாண்டம்  --3
 
   கேட்டதுமே  ஆனந்தம்  தரக்கூடிய
   பாவங்கள்  அனைத்தையும்  போக்கக் கூடிய
  சூரியனின்  மகள்  யமுனை, பகவான்  விஷ்ணு ,பகவான் சங்கரரின்      கதைகள்  திரிவேணி சங்கம  வடிவில்
  மிக அழகளித்து இருக்கின்றன.
  அவைகளில்  இவைகளைச்செய்  ,
    இவைகளைச்  செய்யாதே என
    வழிகாட்டல்கள் உள்ளன.


    சாதுக்கள் பக்தர்கள்
    பக்தி  வடிவமான பிரயாகையில்
     தன்  அறச்  சிந்தனையில்,
    திடமான  குறையாத  நம்பிக்கை ,
    நல்ல கர்மங்களே செய்ய வேண்டும்  என்ற
   நோக்கத்தில்  மனமுவந்து  ஈடுபடுகின்றனர்.
   அந்த  பிரயாகையில்  எல்லாநேரங்களிலும்
   எல்லோருக்கும்  எளிதில்  இறைவனருள் கிட்டும்.
   அங்குள்ள  இறைவன் மரியாதையுடன்  வழிபட்டால்
   அனைத்து  மனக் கிலேஷங்களையும் போக்கக் கூடியவன்.

    அந்த   தீர்தஸ்தலங்களின்  அரசனாக
  விளங்கும் பிரயாகை அலௌகீகமானது  .
   வர்ணிக்க  இயலாதது. உடனடி
  பலன்  தரக்கூடியது.
  அதனுடைய  சக்தி பிரத்யக்ஷமானது.(வெளிப்படையானது )
 
 இந்த  புனித பிரயாகையின் மகிமையை  சக்தியை
 மகிழ்ச்சியான  மனதுடன்     கேட்ட புரிந்தஉடனேயே
இதில்  அனைவரும் மூழ்கி   இந்த மனித உடலிலேயே
அறம்  . பொருள் , இன்பம் , மோக்ஷம்  என்ற
நான்கையும்  பெறுகின்றனர்.

இந்த  தீர்த்த ஸ்தல மகிமை
 பெரும் வியப்பை அளிக்கக் கூடியது.
இந்த  நதியில் குளித்ததுமே  காகம்  குயிலாகிறது
கொக்கு  அன்னமாகிறது.
காரணம்  இங்கு சத்சங்கம்  கிடைக்கிறது.
அதை   மறைக்க  முடியாது.

வால்மீகி . நாரதர்,அகஸ்தியர்  ஆகிய  அனைவரும்
 தன் தன்  வாழ்க்கைக் கதைகளை சொல்லிஉள்ளனர்.
 நீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன, பறந்து வாழ்வன
போன்ற  இவ்வுலகில்  வாழும்  அனைத்து  ஜீவராசிகளும்
சத்சங்கத்தால் ஞானம் ,புகழ், நற்கதி ,ஐஸ்வரியங்கள்
நன்மைகள்  பெற்றுள்ளனர்.
நல்லவர்களின் சேர்க்கை
 ஆனந்தமும் நல்லவையும்  அளிப்பவை.
நல்லவர்களின்  சேர்க்கைதன  வேராக  பலன் அளிப்பவை.
எல்லா சாதனைகளும்  பூக்களாகும்.

    துஷ்டர்களும்  நல்லவர்களின் சேர்க்கையால்
    மிக  நல்லவர்களாகின்றனர் .
   பாரச  மணியின்  சேர்க்கையால் இரும்பு  தங்கமாகிறது. அதுபோன்றே
 
    துஷ்டர்களும்  நல்லவர்களின் சேர்க்கையால்
    மிக  நல்லவர்களாகின்றனர் .
   சந்தர்ப்ப  வசத்தால்  நல்லவர்கள்
   கெட்டவர்களுடன் சேர்ந்தாலும்
   தங்களின்   உயர்ந்த நற்குணங்களை
   நாகமணிபோல்  விடுவதில்லை.
  நாகமணி பாம்புடன்  இருந்தாலும்  விஷத்தை ஏற்காமல்
   தன்  ஒளியை மாற்றாமல் வீசுகிறது. அதுபோல் தான்

 நல்லவர்களும்.
    துளசிதாசர்  சொல்கிறார் :--
         நான்  நல்லவர்களை  வணங்குகிறேன்.
         நல்லவர்களுக்கு நண்பர்களும் இல்லை ,
         விரோதிகளும் (பகைவர்களும் ) இல்லை.
        பூவைப் பறித்த
        கரங்களில்  மணம்   வீசும். அவ்வாறே சாதுக்கள்
       நல்லவையையே  செய்வார்கள்.
       நல்லவர்கள்,  தீயவர்கள் இருவரையும் சமமாகக் கருதுவர்.

       சாதுக்கள்  எளிய இதயம் கொண்டவர்கள்.
      உலகத்திற்கு நன்மை விளைவிப்பவர்கள்.
      அவர்களின் குணம்  அன்பை அறிந்து  அவர்களிடம்
     பணிவாக  வேண்டுகிறேன்.
      எனக்கு ராமரின் அன்பு கிட்ட உதவுங்கள்.





 
   





.
 

 



 

       
       

துளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2

துளசிதாசர் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம்--2

   ௧௧.    சித்தர்கள் இறைவனை  கண்களுக்குள் வைத்து,
               சாதகர்களையும், சித்தர்களையும்,
               உயிரோட்டமுள்ள  மலைகளில்,வனங்களில்,பூமிக்குள்
              ஆர்வமாக குதுகூலத்துடன்
            அதிக  சுரங்கங்களைக்  காண்கின்றனர்.

௧௨.     ஸ்ரீ  குரு  சரணங்களின் துகள்கள்
                                                              கண்மைபோல்                
               கண்ணுக்கு  அழகளிப்பவை.  கண்
                தோஷங்களைப் போக்குபவை. அந்த
                குருவின்  பாத தூசியின் கண் மையால்
               கண்கள்  கலந்கமற்றதாகி  -உலகப்
               பற்றுக்களைப்  போக்கும் ஸ்ரீ  ராமரின்
               புகழைப் போற்றுகிறேன்.

௧௩.  அறியாமையால் ஏற்படும்
          அனைத்து ஐயங்களையும் போக்கும்
          பூமிகளின்  தேவர்களான   அந்தணர்களின்
          பாதங்களை   வணங்குகிறேன். -பிறகு
           அனைத்து நற்குணங்களின் சுரங்கமாகத்  திகழும்
           சாதுக்கள் -புனிதர்களை அன்புடன்  அழகிய
           சொற்களால்  வணங்குகிறேன்.
         

௧௪.   சாதுக்களின்   குணங்கள்
         பருத்திப்  பஞ்சு  போன்று ,
           சுபமானது, குணம்  நிறைந்தது.
           அதன்  பழம்  நீரசமானது.  அவ்வாறே
           சாதுக்கள் இதயம்  விஷயப் பற்றில்லாதது.
          பருத்தி போன்று  வெண்மையானது.
          பருத்தி  போன்றே  குணம்  நிறைந்தது.
         பருத்தி  ஊசியால் குத்தப்பட்டாலும்
      .  நூற்று பின்னப்பட்டாலும்
        இன்னல்  சகித்து நன்மை  அளிக்கிறது.
        அவ்வாறே  சாதுக்கள்  துன்பங்கள்  பொறுத்து
        நன்மைகள்  செய்து  உலகில்  வணங்கத்தக்க      
        புகழ்  பெறுகின்றனர்.
        சாதுக்கள்  சமுதாயம்
        ஆனந்தமானது . நன்மை  அளிப்பது.
       அவர்கள்  நடமாடும்  தீர்த்த
       ஸ்தலங்கள் போன்றவர்கள்.
       அங்கு  ராம பக்தி  என்ற  கங்கை நதி  ஒட்டுகிறது.
       இறைவனின் எண்ணங்களின் பிரசாரம்
       அந்த  பக்தி கங்கையில்  ஓடுகிறது.

துளசிதாசர் ராமசரிதமானஸ் பாலகாண்டம் --1.

துளசிதாசர்   ராமசரிதமானஸ்   பாலகாண்டம்
 

        ஷ்லோக்

       1.   எழுத்து, சொற்கள் , ரசங்கள் ,  சந்தங்கள் , மங்கலங்கள்
            அனைத்து ஞானங்களும்  தரும்
            சரஸ்வதியையும்  ஸ்ரீ கணேஷரையும்
            நான்  துதிக்கிறேன்.

         2.  அகத்தில்  இருக்கும் ஆண்டவனை
             சித்தர்கள்  தரிசிக்க  அனுக்ரகிக்கும்
             ஸ்ரீ பார்வதியையும் , ஸ்ரீ  சங்கரையும்   
               துதிக்கிறேன்.
              அவர்களின்  கருணை  இன்றி
              பகவானை பார்க்கமுடியாது.

         ௩. ஞானம்  நிறைந்த,சங்கரன் வடிவமான

                 குருவை  வணங்குகிறேன் ,

                 அவர்களின்  அடைக்கலத்தில்  இருப்பதால்
                 வளைந்த  சந்திரனும் எல்லா இடங்களிலும்
                  துதிக்கப்  படுகிறான்


           ௪.   ஸ்ரீ  சீதாரமரின் குணங்கள்  நிறைந்த
                   அடர்ந்த  வனத்தில்   சஞ்சரிக்கின்ற
                    தூய மெய்ஞான  பூரணத்துவம் பெற்ற
                   கவிஞரின்  அரசர்  வால்மீகியையும் ,
                   வானரங்களின்  அரசர்
                 ஸ்ரீ ஹனுமானையும்   துதிக்கிறேன்.
             ௫. படைத்தல், வளர்த்தல் , அழித்தல்,இன்னல் போக்குதல் 
                   அனைத்து  நன்மைகளையும் செய்கின்ற
                  ஸ்ரீ  ராமச்சந்திரரின்  அன்பு இல்லாள்
                ஸ்ரீ  சீதாதேவியை  நமஸ்கரிக்கிறேன்.

              ௬. ராமர்  என்று  சொல்லப்படும்  ஹரியை,
                    வையகக்  கடலை  கடக்க  உதவும்
                    ஆசைக்கு
                    படகாக  இருக்கின்ற ஹரியை ,
                    வையகத்தை  மாயைகளால் வசத்தில்
                  . வைத்துள்ள  ஹரியை ,
                    கயிற்றை  அரவம் என்ற பிரம்மையை
                    தன்னாட்சியில் உண்மை என தோன்றச்செய்யும்
                   ஹரியை  துதிக்கிறேன்.
       
             ௭.  அநேக புராணங்கள், வேதங்கள் , சாஸ்த்திரங்கள்
                     ராமாயணம்  மற்றும்  மற்ற ராம கதைகள் வர்ணிக்கும்
                    ரகுநாதரை ,  துளசிதாசர்  தன் அக சுகத்திற்காக ,
                    அதிக அழகான  மொழி நடையில் வர்ணிக்கிறார்.


             ௮. குணங்களின்  கடவுள் ,
                   யானை முகத்தோன் --அவரை
                    துதிப்பதால்  தானே  
                   எல்லா  செயல்களிலும்
                    சித்தி கிடைக்கும் . .
                     அவர்தானே அறிவுநிதி ,
                     நல்ல குணங்களின்   இருப்பிடம் .
                   அந்த  கணேசர்  எனக்கு
                   அருள் தரட்டும் . 

               ௯.  அவரின்  அருளால் , ஊமை
                       அழகாக பேசமுடியும்.
                       நொண்டி கடின மான மலை மீது  ஏறமுடியும்.

                      கலியுகத்தின் எல்லா வித
                  பாபங்களையும் எரிக்க முடியும்.
                     அந்த  இறைவன்  என்  மீது  தயை புரியட்டும்.

                 ௧௦ . நீலத் தாமரை போன்ற கருநீல வண்ணன் ,
                         செந்தாமரைக்கண்ணன் ,
                      பாற்கடலில் சயனிப்பவன்
                         அந்த  நாராயணன் ,
                       என் இதயத்தில் வாசம்  செய்யட்டும்.

                 ௧௧.   வெண்நிறத்தோன்  மல்லிகை மலர் போன்று ,
                              வெண் நிறத்தோன்  மதி போன்று ,
                             பார்வதி மணாளன் ,
                           மன்மதனை அடக்கியவன் ,
                              தயையின்  இருப்பிடம்,
                             ஏழையின் அன்பன்  சங்கரன்
                         என்  மேல் கிருபை காட்டட்டும் .
                       
               ௧௨.   ,  தன் ஞானச் சொற்களால்  ,
                             பெரும் மோகம் என்ற இருள்  நீக்கி ,
                             சூரியக் கதிர்கள் போல் விளங்கும் ,
                             மனித வடிவில் நடமாடும் ஹரியான  -என்
                             குருவின் பாதகமலங்களைத்  துதிக்கிறேன்.

                    ௧௩. நற்சுவை , நறுமணம் ,அன்புரசம் நிறைந்த ,
                             வையகப்  பிணிகளைப்  போக்கும்
                              சஞ்சீவினி மூலிகை  வேர் போல்
                              விளங்கும் குரு  சரணங்களைப் போற்றி -அவரின்
                               பாத தூசியைத் தொட்டு வணங்குகிறேன்.

                      ௧௪,  அதிக நன்மைதரும் , அதி  ஆனந்தம் தரும் .
                                  புனித  விபூதி பூசி  அருளும்
                                 அழகு மேனியான் சிவபக்தனின்,
                                  மன அழுக்கைப் போற்றும்  சிவ விபூதி,
                                  திலகம் நெற்றியில் இடுவதால் ,
                                  நற்பயன்கள் வயப்படும்.

                         ௧௫. குருவின்  பாத நகங்களின்  ஒளி,
                                    மணிகளின் ஒளி  போன்று ,
                                     தியானித்ததுமே  மனதில்
                                    தெய்வீக ஒளி  தரும்.
                                                         அவ்வொளி
                                      அறியாமை இருளகற்றும்.
                                     அந்த ஞானஒளி  பெற்றவன் ஒரு  பாக்யவான்.

                              ௧௬. அந்த  ஞான ஒளி  இதயத்தில்  வந்ததுமே ,
                                        இதயத்தின்   தூய கண்கள் திறந்துவிடும்.
                                         இருண்ட உலகின் குறைகள்-துன்பங்கள் நீங்கிவிடும்.
                                        ஸ்ரீ  ராமச்சந்திரமூர்த்தி என்ற மாணிக்க மணிகள்,
                                         எந்த சுரங்கத்தில் அதலபாதாளத்தில்
                                        மறைந்திருந்தாலும் வெளிப்பட்டு தர்சனமளிக்கும்.

                                
     
 



                 
   
       

        .

                           

                    


           







                 
           

 





   

Friday, December 2, 2016

சரணடைந்தால் சகலமும் கிட்டும்.

 சரணடைந்தால்
 சகலமும்  கிட்டும்.
  சங்கடஹர விநாயகனை
  சரவணனை
 சிவனை
விஷ்ணுவை
துர்காவை
லக்ஷ்மியை
அல்லாவை
இயேசுவை
விரும்பும்  இறைவனை
நேர்மையுடன்
மனிதநேயத்துடன்
அறத்துடன்  அடைக்கலம் அடைத்தால்
அனைத்தும் கிட்டும்.
ஆனந்தம் பேரானந்தம்  கிட்டும்.


   
காலை வணக்கம். 
கடவுளைத்தொழு .
காண்பதெல்லாம் இன்பமே.
கிட்டாதது கிட்டு.
கீர்த்தி வரும்.
குதூகூலம் பிறக்கும்.
கூடு பலம் பெரும்.
கெட்டவை அகலும்.
கேட்டவை கிடைக்கும்.
கொள்கை திட்டமாகும்
கோரிக்கை நிறைவேறும்.
கௌ மாறி துணை வருவாள் .
சிக்கனப் பிடி.
சிரித்து அருள்தருவார் .
LikeShow More Reactions
Commen