Sunday, October 4, 2020

 ஆன்மீகம் அமைதியானது.

அமைதி தருவது.
ஆனந்தம் தருவது.
இன்பம் தருவது
இன்னல் போக்குவது
மன நிறைவு தருவது.
மனக்கவலை போக்குவது.
ஒரு வணிகத்தில் நஷ்டம்
ஒரு பொருள் திருட்டு
ஏமாறுதல்
இவைகளில் மன வேதனை போக்க
நாம் எந்த ஜன்மத்தில் செய்த பாவமோ
எல்லாம் என் ஆண்டவன் சோதனை.
ஆண்டவா என்னைக் காப்பாற்று.
இப்படி மனதில் ஒரு தை ரியத்தைத் தருவது ஆன்மீகம்.
கடன்தொகை திரும்பி
வரவில்லை என்றால்
அவன் போன ஜன்மத்தில் கொடுத்த கடன் இந்த ஜென்மத்தில் வாங்கிக்கொண்டார் என்று
மன சாந்தி தருவது ஆன்மீகம்.
மனிதன் தவறு செய்யவிடாமல்
பொய் பேசவிடாமல் காப்பது ஆன்மீகம்.
ஆனால் இன்று கடவுள் என்ற பெயர் சொல்பவர்கள் எல்லாமே வியாபாரிகள்.
ஐந்து ரூபாய் உத்திராட்சம் ஐநூறு ரூபாய்
பூஜையில் வைத்தது என்பது ஆன்மீக வியாபாரம்.
அப்படியே ஒருவித மாவில் செய்த உத்திரட்சம்.
இப்படி ஏமாற்ற ஆலயம் சுற்றி கூட்டம் கடைகள்.
பக்தி வெளி ஆடம்பரம் கூடாது.
சிந்திப்பீர்.

No comments: