Saturday, October 17, 2020

மனிதர்கள் அமைதி பெற

 வணக்கம் .

நவராத்திரி இரண்டாவதுநாள் .
அலைமகள் அலைமகள் கலைமகள் முப்பெருந்தேவி அருள் நமக்கு ஆரோக்கியம் ,செல்வம் ,கல்வி இதிலும் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் முப்பெரும் தேவிகளின் கருணை இன்றி புவியில் மகிழ்ச்சியாக வாழ முடியாது .பிறப்பின் போதும் இறப்பின் போதும் குறிப்பாக முதுமையில் ஒரே நிலை. தனித்து சக்தியுடன் வாழ்வது கடினம்.இடைப்பட்ட காலத்தில் துர்கையின் அருளால் சக்தி இருந்தால் தீயவைகளை செய்யும் கயவர்களை காக்கும் தானம் .செல்வம் பெற்றால் ஏழை எளியோர் மாற்றுத்திறன் நாட்டு நலம் ,குளம் கிணறு தண்ணீர் பிரச்சினைத்தீர்த்தல் போன்ற தானங்கள் செய்யலாம் .ஞானம் பெற்றவர்கள் அறிவுத்தானம் கற்பித்தல் ,உபதேசித்தல் ,ஒழுக்கம் ,சத்தியம் நேர்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இன்னல் இல்லா இன்ப வாழ்க்கை வாழ வழிகாட்டுதல் .ஞானம் பெற்றால் உலகியல் ஆடம்பரங்கள் மேல் ஆசை இருக்காது.ராஜகுமாரன் சித்தார்த்தன் ,ராஜா பார்த்த்ருஹரி ,ராமணமஹர்ஷி ,பட்டினத்தார் ஞானிகள் .
சித்தர்கள் நிலை வேறு .அஷ்டமா சித்திபெற்றவர்கள் .கிட்டத்தட்ட எல்லா முற்றிலும் உலக ஆசை துறந்து இறைவனே என்றும் இவ்வுலகம் அழியும் என்றும் உடனடி பலனுக்காக ஊழல் ,லஞ்சம் என்று வாழும் சுகபோகவாசிகளுக்கும் இன்னல்கள் துன்பங்கள் மனக்கஷ்டங்கள் ஏற்படும் .கிடைத்த செல்வம் வீண் .எல்லோரையும் படைத்து ஆட்டிப்படைக்கும் இறைவனையே முற்றிலும் சரணடைய வேண்டும் என்று ஜனசஞ்சாரமற்ற மலைப்பிரதேசங்களில் காட்டிலும் வாழ் பவர்கள் .சித்தர்கள் அருள் பெற்றால் ஆரோக்கியமாக வாழலாம் . வள்ளுவர் :-- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல .

No comments: