Monday, October 12, 2020

இறை இன்பம்

 ஆண்டவன் அருள் அனைவருக்குமே உண்டு.

இயற்கையின் படைப்பில் அம்ருதமும் உண்டு 

நஞ்சும் உண்டு.

நறுமணமும் உண்டு ;துர்மணமும் உண்டு.

இனிப்பில் எறும்புகளின் கூட்டம்,

ஈக்களின் கூட்டம் வெறுப்பு அளிக்கும்.

கொசுக்களின் கூட்டம் நோய் பரப்பும்.

காகங்கள் சுத்தப்படுத்தும், அவைகளே நம் முன்னோர்கள்.

காகத்தை உணவிட்டு அழைக்கிறோம்.

காரணம் அது செத்த எலியைத் தூக்கிச்செல்லும்

வளர்ப்பு மிருகங்கள் ,காட்டு மிருகங்கள் 

அறிவுரை கூற விலங்குகள் கதைகள்.

ஒற்றுமைக்கு  மாடும் சிங்கமும் 

கிட்டாதாயின் வெட்டன மற.

சீ!சீ!இந்தப்பழம் புளிக்கும் நரியின் கதை.

யானையும் தையல்காரனும்  பிறருக்கு இன்னலின் பலன் 

இத்தனையும் அறிந்த மனிதனுக்கு துன்பம் ஏன்?

இத்தனையும் படைத்து ஆறறிவும் கொடுத்த 

ஆண்டவனை மறந்து ,அவனளிக்கும் கடமையை 

லௌகீக சுகத்திற்கு நேர்மை மறந்து 

கோப்புகளை நகர்த்த கையூட்டு.

மின் இணைப்பு ஒளிகாட்டும் கடமை பெற்ற 

பொறியாளர்,தாகம் தீர்க்கும் கடமை பெற்ற பொறியாளர் 

ஊழியர்கள் கையூட்டு பெற்றே இணைப்பு என்ற நிலை.

நாடாளும் அதிகாரம் பெற்றும் ஊழலில் உழலும் அரசியல்,

ஆன்மீக அருள் பெற்றும் அவ்வருளால் பலாத்காரம்,

ஆசிரியர் கடமை தேர்வுத்தாள் திருத்தல் என ஊழலில் 

பொருளின்பம் காணும்  ஆ சிரியர்கள் 

ஆண்டவன் நீதி மறந்து தான் தான் அனைத்தும் என்று 

பொருளீட்டும்  அதிகாரிகள் அமைச்சர்கள்.மருத்துவர்கள்.

இதிலும் நீதிமான்கள் இருப்பதால் தான் ஊழல்கள் 

வெளிவருகின்ற நிலை.

பணம் இருந்தால் பழி  வராது ;நீதிமன்றம் தண்டனை தராது 

என்ற ஒரு மமதை.

ஆனால் லக்ஷம் கோடி ஊழல் 

வெளிவந்த பின்னணி .இதில் நேர்மையின் வெளிச்சம்.

 மாயை தப்பித்தாலும் மயக்கம் தெளிந்தால் 

இறைவனின் தண்டனை,

அதுவே  அறம்

.அதுவே ஆண்டவன் 

அதை அறிந்தால் இன்பம்.

இல்லையேல் துன்பம்.

No comments: