Sunday, October 25, 2020

பகவான்/கடவுள்/இறைவன்

 காலை  வணக்கம். 


பகவான் பாரினைக் காக்கிறார்.

பார்! பார்! பாரினைப்பார்!

பாரினை   இணைப்பார்.

சனாதன தர்மம் பாரதம்.

வையகம் முழுவதும் வியாபித்த தர்மம். 

விவேகானந்தர்   மூலம் பாரில்

உள்ளோர்  உள்ளன்புடன் 

சகோதர சகோதர பாசத்துடன் இணைத்தார். 

இஸ்லாம்   என்றே  இறைவனால் இணைந்ததுபார். 

ஏசுவால் இணைந்த  அவனி. 

பகவான் பாரினை இணைப்பார்    பார்காண்.


ரைட்    சகோதரர்கள்   மூலம் சரியாக இணையவைத்தார். 

பாரினில்    கலகங்கள்  மதங்களால்,

பாரின் சுமை குறைக்க வெடிமருந்துகள். 

வெடித்தால்   வெடித்து சிதறுவன


                 ஆலயங்கள் .


சுனாமிவந்தால் மூழ்கிஅழிபவர்கள்


        மக்கள். 


தொற்றுநூய்   வந்தால் ஒரு குறிப்பிட்ட


  மதங்களைமட்டுமா  

தாக்குகின்றன. 


கப்பல்/ விமானம்/ தொடர்வண்டி/பேருந்து


விபத்துக்கள். 

அங்கே   கூடும் கூட்டம்

உற்றார்.உறவினர்,   நண்பர்என்று தேடும் கூட்டம்

ஒரே     மதத்தையோ, மொழியையோ, இணைத்தையோ


சார்ந்ததல்ல. 

அதில் வையகத்தின் அனைத்துஇனமும்


பாதிக்கப்படுகின்றன. 


 இயற்கை சீற்றங்கள்/விபத்துக்கள்/நோய்கள்


ஒருகுறிப்பிட்ட  மத/இன/ஜாதிகளைத்  தாக்கவில்லை. 


இனிப்பு அனைவருக்கும்ஒன்றே.  

கசப்பும் அனைவருக்கும் ஒன்றே. 

மிளகாய்த்தூள் முகமதியனுக்கு இனிப்பல்ல.

இந்துக்கு  இனிப்பல்ல.

கிறிஸ்தவனுக்கு இனிப்பல்ல.

அனைவர்  கண்களில் பட்டாலும்

ஒரே எரிச்சல் தான். 

 பாரினை இணைக்கும் சனாதன தர்மம்

வையகம்   வாழ்கஎன்றது. 

வையகம் ஒரு குடும்பம் என்றது. 

கடவுளை  உருவமற்றவன் என்றது. 

கடவுளை உருவமுள்ளது என்றது. 

ஜனன மார்க்கம் ஒன்றே. 

இளமை. முதுமை, நரைஅனைத்தும் ஒன்றே. 


பாரினை இணைக்கும்தொலை தொடர்பு,

பாரினை   துண்டிக்கும்  தொலைதொடர்பு

 உலகை அளிக்கும் வெடி குண்டுகள்.

உலகைக் காக்கும்  வெடிகுண்டுகள். 

உயிரெடுக்கும்   கத்த்திகள், 

உயிர்காக்கும்   கத்திகள். 

காப்பவன் அகிலத்தை இணைப்பான். 

எடுப்பவன்  நிம்மதிஇன்றி தவிப்பான். 


வையகம்    வாழ்க!  ஜய  ஜகத்.!

No comments: