Saturday, March 5, 2016

உள்ளம் உயர்வாகட்டும் .

உள்ளம் உள்ளத்தில் நல்ல உள்ளம்,
உலகியல் சூழலில் உரிய வகையில்
உடனடியாக உடன்இருப்பது அவசியம்.
இந்தஅரிய தலைப்பு குழு அமைத்தவர்களுக்கு நன்றி.
உள்ளம் என்பது உள்ளதுவெளிப்படுத்தும்.
உடையது விளம்புதல் கூடாது உடையதுவிளம்பேல் என்றாலும் அகமதுமுகத்தில்தெரிந்துவிடும்.
எதிரில் நிற்போர் பேசுவது இயக்கியா செயற்கையா என்பது
ஒலியில் தெரிந்துவிடும். கண் ஒளியில் பிரதிபலிக்கும்.
நடிப்புஎன்பது இயல்பானபேச்சில் அரிது.
உள்ளத்தால்இணைந்தால் நாம்என்றார்அறிஞர்.
ஆனால் உதடு சேர்ந்தால்நாம்என்றார் அண்ணா.
அவரவர்கள் குணம் தெளிய சொற்கள்.
உதாரணமாக உதட்டில் இருந்து இயல்பாக வரும்.
உயர்ந்தவர்களின் உள்ளத்திலும் உயர்கருத்துக்கள் வரும்.
அவர்களை அனைத்திலும் புரிவதுஅரிது.
ராமரைப்பற்றியஉயர்வான எண்ணங்கள்
கிருஷ்ணரைப்பற்றியஉயர்வானஎண்ணங்கள்
அவர்களின்செயலின்ஆழ்மன ஆழ்ந்தகருத்துக்கள்
அறிந்துதெளிந்துபுரிந்துஏற்பவர்கள்பலர்.
அவர்கள் விளக்கத்தால்ஈர்க்கப்பட்டு
ராமகிருஷ்ணாபக்தர்களானோர் பலர்.
ராமாசாமிஈரோடுபோன்று எதிர்மாறானகருத்துவெளியிடும்நாத்திகர்கள் சிலர்.
மண்டனமிஷ்ரர் ஆஷ்ரமகிளிகள் வேதம் ஓதும்.
திருடன்வீட்டுக்கிளிகள் வசை பாடும்.

இன்றையகாலத்தில் இரண்டாம்வகைகிளிகள் அதிகம்.
கண்டபடிதிரியச்சொள்ளும்.
கள்ளுக்கடைக்குஇட்டுச்செல்லும்.
கல்லாப்பணம்திருடச் சொல்லும்.
கள்ளப்பணம் சேர்க்கச்சொல்லும்.
உள்ளத்தில்நல்லஉள்ளம் திருந்தச்சொள்ளும்.
நாம் உள்ளத்தில்உயர்ந்துவாழ்வோம். வழிகாட்டுவோம்.

No comments: