Thursday, March 10, 2016

இறைவா! காட்டு

முருகா ! மக்களைக் காக்கும்
மஹேஸவர குமாரா!
நிறைகுணமுள்ளோர்
நேர்வழி செல்வோர்
சுயநலமற்றோர்
வாய்மை வழி நடப்போர்
நல்லிதயம் உள்ளோர்
நலமே விரும்புவோர்
என்றென்றும் துணை இருப்போர நட்பு வேண்டும்.
நொடி.நிமிடம் நாள் மூன்றெட்டு மணிநேரம்
முருகா உன்அருள் உடனிருந்து வெற்றியே அருளவேண்டும்.
உன் துணைவேண்டும்.
செயல் சொல் அனைத்திலும்
அன்பினைப் பொழியவேண்டும்.
முருகா! முத்துக்குமரா!
முன்னேற்றமே  வேண்டும்.
முருகா! திருமால் மருகா!
கலியுகவரதா!  கந்தா!

No comments: