Wednesday, March 2, 2016

சிவ சரணம்

சிவ சிவ என்றிட சிக்கல்  சீர்படும்
சிந்தனை மேம்படும்
சித்தம் தெளிந்தடும்
பற்று பரந்திடும்.
பாரினல்  பார்வதிமணாளன்
பார்கும் இடமெல்லாம் ..தன்
ஓங்கார ஔிக்கதிர் வீசுகின்றான்.
ஒப்பில்லா தேவன்
மாதா கோயில் அமைப்பிலும்  மசூதி அமைப்பிலும் உள்ளான்
இயற்கை வனப்பிலும் உள்ளான் .
திருவண்ணாமலையில்
திருமகள் மணாளனும்
கலைமகள் மணாளனும்
அடிமுதல் நுணிவரை தேட
ஜ்யோதியாய் ஔிர்கிறான்..உண்மை
பாரதி சொன்னதுபோல் வெறும் புகழ்ச்சியில்லை
வேற்று நாட்டு அறிவியல் வல்லுனரும் கண்டறிந்த உண்மை.
ரஷ்ய தெய்வப்பற்று இல்லா நாட்டினர்
கண்ட புதுமை.
தென்நாடுடைய சிவனே போற்றி
எந்நாட்வருக்கும் இறைவாபோற்றி.
உமை ஒருபாகா போற்றி
சுவாமிநாதா போற்றி
கணநாதா போற்றி.
காசினி உய்ய காசியில் வாழும் தேவா போற்றி
சுடலை பொடிபூசி வையகம் இதுதான் என்று தெளிவித்த
காசி விஸ்வநாதா போற்றி
சிவனே போற்றி!
சிவ பார்வதியே போற்றி!
தேவார நாயகா போற்றி.
நாளும் உன்னை வேண்டுகிறேன்.
நலம்தருவாய் போற்றி
ஓம் நமச்சிவாய! ௐ!
ௐ சிவாய நமஹ.
ஹர ஹர மஹாதேவா!
சரணம் .! சரணம்!
உலகநாதா சரணம்.!

No comments: