ஆன்மீகம் அமைதி தரும்
தனம்தரும்
கல்விதரும்
ஆரோக்கியம் தரும்
அமைதிதரும் .
ஆஸ்திதரும்
மன சஞ்சலம் தீர்க்கும்.
ஞானோதயம் தரும்
ஆயுள் விருத்திதரும் .ஆனால்
நடைமுறையில் அனைவரும்
ஆன்மீகவழியில் செல்வதில்லை.
அவனியின் அனைத்து துறைகள் போல் ஆன்மீகமும் வருமானம்
ஈட்டும் தொழிலாக மாறுகிறது.
உடனடி பலனுக்காக ஊரை ஏமாற்றும் சாமியார்களிடம்
கூட்டம் கூடுகிறது.
இறைவனையே சரணடையும் கூட்டம் சரணா கதித்துவம்
குறைந்து வருகிறது.
வருமானம் வரும் மானம்
வறுமையில் மிகவும் கடினம்.
ஆகவே தான் கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்று
இறைவன் செய்திவருகிறது.
வையக சுக துக்கங்களை ஒரு பொருட்டாக கருதாதவர்கள்
துறவிகளாக மாறுகின்றனர்.
அவர்கள் பண ஆசை இல்லாதவர்கள் .
பணம் ஆஸ்தி ஆஸ்ரம் என்று இருப்பவர்கள் நேர்மையான பக்தியில் இருப்பதரிது.
கடமையைச் செய்வோருக்கு
வசதிகள் பெருகும்
அவர்களால் தான் மகிழ்ச்சியாக இறைவழிபாடு செய்ய இயலும்.
எல்லோருமே துறவிளானால் வையகம் எப்படி இருக்கும்.
தனக்கே தண்ணீருக்குவழி இல்லை என்றால் பால் எப்படி மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியும் ?
ஆலயம்கட்ட அரசன் உதவவேண்டும்.
அவன் படையெடுப்பான் .
எதிரியை அழிப்பான் .
வருமானம் வீரத்தால் வரும்.
அவன் வாரிசில் வீரம் இல்லை என்றால் அனைத்தையும் இழந்து வாழ்வான் .
அரசனும்ஆடம்பராமில்லா ஆட்சி
நடுநிலைமை தவறா ஆட்சி செய்ய வேண்டும்.
நமது நாட்டில் ஓட்டுப்போடாத
அறுபது சதவிகிதம் தன் கடமை முயற்சியால் வளர்கின்றன.
அதற்கு ஆட்சி பற்றி கவலை இல்லை.
கடமை தவறும் அரசியல் நிலையற்றது .
அந்த அரசியல் அவப்பழியுடனேதான் இயங்கும்.
ஊழல் லஞ்சம் ஆட்சியால்
நாட்டின் வளம் குறையும்.
வீண்ஆடம்பரம் மக்கள் மகிழ்ச்சியை பாதிக்கும்.ஆலயங்களில் ஆஷ்ரமங்களில் ஆஸ்தி
நாட்டிற்கு நலம் இல்லை.
இதுவே இந்திய நிலை.
சிலர் மட்டும்சுகபோக வாழ்க்கை .
பலருக்கு இன்னல்.
இதுவம் இறைவனருள் என்பதே
இந்திய ஆன்மீகம் .
No comments:
Post a Comment