பலர் இறைவனை பார்க்க வரம் பெற விரதம் இருக்கின்றனர்.
பலர் தீரத்தயாத்திரை செல்கின்றனர்.பாதயாத்திரை செல்கின்றனர்.
காவடி எடுக்கின்றனர்.அலகு குத்திக்கொள்கின்றனர்.அன்னதானம்
செய்கின்றனர்.
யாகம் செய்கின்றனர்.ப்ராயச்சித்தம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த பக்தி முறைகளில் ஆனந்தம் ,மனநிறைவு, சாந்தி
கிடைக்கிறது. ஆனால் உண்மையான பக்தன் யார்?
அவனியில் பல வித மான மக்கள் வாழ்கின்றனர். அனைவரும்
கண்களை மூடி இறைவனை வழிபட்டால் வையகம் எப்படி இருக்கும்?
எதுவும் சரியாக நடக்குமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை.
கடமைக்கேற்ற அறிவு. ஆற்றல். ஒருவர் ஆன்மீக குரு. அவருக்கு
சேவை செய்யும் சிஷயன் அவருடனேய இருந்தாலும் அவர்பெற்ற
ஞானம் வருவதில்லை.
ஒரு இசை மேதை. அவர் போல் அவருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவரகள் பாடமுடிவதில்லை.நாதஸ்வர மேதைகள் பின் ஒத்து
ஓதுபவர்கள் அவர்போல் நாதஸ்வர கலையில் புகழ்பெற முடிவதில்லை.
இயற்கையில் ஞானம் வந்துவிடுகிறது.
பல உதாரணங்கள் மடைதிறந்த வெள்ளம் போல்
வேதங்களில்இருந்தும் பல கதைகள் இதிஹாச புராணங்களில்
இருநதும் வருகின்றன. அவருடன் சேவையில் ஈடுபடும் சிஷ்யன் அந்த
ஞானம் பெறமுயன்றாலும் முடிவதில்லை.
கீதையில் கடமையைச்செய் என்கிறார் கிருஷ்ணபரமாத்மா?
கடமையைச் செய்தால் பலன் கிட்டும். ஆனால் எத்தனை பேர்
உண்மையாக கடமைகள் ஆற்றுகின்றோம்.
பலனை மிகவும் எதிர் பார்க்கிறோம்.
ஒரு விவசாயி காலையில் வயலுக்கு செல்கிறான்.
அப்பொழுது ஒருமுறை இறைவனை வழிபடுகிறான்.
மதியம் உணவருநதும் போது ஒரு முறை. மாலையில் ஒருமுறை.
நாரதர் சதா சர்வ காலமும் இறைவனின் நாமத்தை ஜபித்தாலும்
விஷ்ணு பகவான் அந்த விவசாயியைத் தான் மிகச்சிறந்த பக்தன் என்கிறார்.காரணம் லௌகீக பந்தங்களுடன் அவருக்கு பக்தியும் உள்ளது. கடமை உணர்வும் உள்ளது. ஆகையால்கடமையைச் சரியாக ஆற்றுபவனே சிறந்த பக்தன்.
No comments:
Post a Comment