முகநூல் அனுப்பிய தெய்வங்கள் .
ஊழல் இல்லா ஆட்சி.
கள்ளப்பணமளித்து ஓட்டுபெறுவோர்
இூத வேடிக்கை பார்க்கும்அதிகாரிகள்
கள்ள ஓட்டுப்போடுவோர்
நேற்றைய ஊழல் இன்றைய யோக்கியன் என கூட்டணி
வைக்கும் தலைவர்கள்
விஜய் மல்லையா போன்றோர்
இத்தனை ஆண்டவர்கள் இருந்தும்
படுகொலைகள் கற்பழிப்பு லஞ்சம்
மதவெறி ஜாதிவெறி
லஞ்சம்
இத்தனை ஆண்டவன் ஒருவருக்கும் இவர்கள்மேல்
கோபம் இல்லை
ஆத்திரம் இல்லை
உண்மை அலறுகிறது.
நேர்மை கதறுகிறது.
வேடிக்கை பார்க்கும்
தெய்வங்களுக்கு சொத்து உண்டியல் காணிக்கை கூடுகிறது.
ஓட்டுக்காக குடிசைகள் அதிகரிக்கின்றன.
மாளிகைகள் ஓட்டளிப்பதில்லை.
ஆண்டவன் லீலை என்றே சகிக்கும் மக்கள்
ஆலயங்கள் அதிகரிக்கின்றன.
நீதிபதிக்கு கணக்கு தவறாகிறது.
ஆலயங்களில் ஆஸ்தி உள்ளவர்களுக்கு முதல் மரியாதை.
வாழ்க ஆன்மீகம் .வாழ்க ஜனநாயகம்.
பக்தர்கள் பரதேசிகள்.
ஊழல்வாதிகள் ஆட்சியாளர்கள்
வாழ்க தெய்வீகம்.
தெய்வங்களே!
உங்கள் லீலை அபூர்வம்
அத்புதம்
ப்ரார்த்தனைகள்
No comments:
Post a Comment