அமர்ந்து அமர்ந்து நாம ஜபம் செய்தால்
அகம் குளிர ஆண்டவனின் கருணையாலே
ஜகத்தினில் ஜயமுண்டு ;தோல்வி இல்லை.
இறையின்பம் வேறு ;அவனியின் ஆடம்பரம் வேறு ;
மன அ மைதி காண மகேசன் அருள் வேண்டும் .
மன ஈடுபாட்டுடன் பக்திவேண்டும். ஆனால்
அலைபாயும் மனது,அவனிடத்தில் லயிப்பது கடினம்.
தியானம் யோகா என்றே அறிவுரை வழங்கினாலும்
ஜபம் நாம ஜபம் என்றே ஆர்ப்பரித்தாலும்
அவனது கருணையே ஆனந்தம் பயக்கும்.
அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.
அவனது கருணையே ஆனந்தம் பயக்கும்.
அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.
No comments:
Post a Comment