Friday, October 2, 2015

மக்கள் பாடு !மகேசன் பாடு !

அங்கிங்கு எனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை 

ஆகம விதிப்படி அனைவரும் வியக்கத்தக்க அளவில் 

புண்ணியஸ்தலங்களில்  மிக ஆசார அனுஷ்டானங்களுடன் 

கல் கொண்டு   பிரமிப்பூட்டும் வகையில் ஆலயம் .

நுழைந்தவுடன் தெய்வீக அலைகள் உணரலாம்.

ராஜகோபுரக்காற்று  பழங்காலக் கோயில்களில் ஒரு தெய்வீகம்.

இன்று எங்கும் ஆலயங்கள் .

அனைத்திற்கும் தனிதனி நிர்வாகக் குழு.

ஒரு குழுமம் . வருமானம் பெருக்க திட்டமிடுகிறது.

ஜனத்துகை பெருக்கம். வேலைப்பளு .

அருகிலேயே குருவாயூர் ,திருப்பதி ,கேதார்  நாத் ,காசி

ஆனால்  ஆழ்ந்து சிந்தித்தால் இது ஒரு வாணிகம் போல்
திட்டமிட்டு பணம் குவியும் மையங்களாக

ஆலயப்பணி நடக்கும்  போதே வணிகவளாகம்

ஆலயங்களை மறைத்து மண்டபங்கள்  தெப்பக்குளங்கள் ஆலய நிலபுலன் அனைத்தும்  கொள்ளை போகின்றன.

அதை கேட்க ஒன்று கூடுவதில்லை.

ஆலயங்களில்  நுழையும் முன் வணிகர்களால்

பக்தி  வாணிக மயமாக வியாபார ஸ்தலமாக மாறி இருக்கும் காட்சி.
ஆலயம் சுற்றி  உள்ள  மரங்களும் வெட்டப்படுகின்றன.
பிச்சைக்காரர்கள் கூட்டம் ,வியாபாரிகள் வாயில் வந்தவிலை பக்தர்கள் கேட்கும் விலை  கோபதாபங்கள்
ஆலய கர்பக்ரஹம்  அருகில் சென்றால் வேறுபாடு
சிலர் நிறுத்தல் சிலர் தள்ளல்

இவை புனிதஸ்தலங்களா ?!!வாணிக வளாகமா /!!

இன்னும்  திருப்பதிபோன்று  ஆந்திரா ,குஜராத்  சண்டிகர்

என்று பெருகும்

ஆலயங்கள்   புனித ஸ்தலங்களாக மாறுமா ?
வணிகஸ்தலமாகவா !!?

புனித யாத்திரை ,தேசீய ஒருமைப்பாடு  ,வாடா தென்னிந்திய ஆன்மீகத் தொடர்பு
எதிர்காலத்தில் பெருகுமா ?குறுகுமா /?
இறைவா !பூலோகத்தில்
உன் லீலைகள் ஸ்வர்கமாக்கவா ?
பல அநீதிகள் வளர்த்து நரகமாக்கவா /
நீயே கதி. எழுதத் தூண்டினாய்  எழுதிவிட்டேன்.

மக்கள் பாடு !மகேசன் பாடு !
/

No comments: