Monday, October 12, 2015

பிரார்த்தனை


    1. *************************************************************************************************************************************************************************************************


      நவராத்திரி பிரார்த்தனை 
      அகிலத்தை ஆட்டிப்படைக்கும்
      முப்பெருந்தேவிகள் மூவருக்கும்
      நவராத்திரித் திருவிழா.
      லக்ஷிமியின் கருணை
      பார்வதிதேவியின் ஆரோக்கியசக்தி 
      சரஸ்வதி தேவியின் ஞானம் மூன்றும்
      அகிலத்திற்கு அவசியம் தேவை.
      மூன்றிற்கும் மனிதன் முயன்றாலும்
      முப்பெருந்தேவியரின் கருணை இன்றி
      மூன்றும் பெறுவது மூவுலகத்திலும் அரிது.
      முக்கண்ணனின் பாதி உடல் சக்திஸ்வரூபம்.
      விஷ்ணுவின் இருசக்திகள்
      பிரம்மாவின் சக்தி
      படைக்கும் கடவுள் மனிதனை ஞானத்துடன் படிக்கவேண்டும்.
      வையகத்தில் வாழ பொருள் வேண்டும்
      பொருளை கையாண்டு ஆனந்தம் அடைய சக்தி லக்ஷ்மி
      மூவரும் சக்தியுடன் இணைந்தே
      வையகத்தை படைத்தல் காத்தல் அழித்தல்
      என்று வைபவங்கள் நிறைந்ததாக
      காக்கின்றனர் .
      அவர்களை இந்த நாள் முதல்
      பக்தி சிரத்தையுடன் வணங்கி
      க்ருபா கடாக்ஷம் பெற்று
      ஆனந்தமாக வாழ்வோம் .
      அலைமகளே அனுக்ரஹம் வேண்டும் .
      கலைமகளே கல்வி வேண்டும் .
      மலைமகளே சக்திவேண்டும்.
      நவராத்திரிகள் மகிமைமையால்
      நவ நிதிகள் வேண்டும் .
      அஷ்ட லக்ஷிமிகள் அனுக்ரஹம் வேண்டும்.
      அஷ்டமாசித்திவேண்டும்.
      பிரார்த்திப்போம் ;அருள் பெறுவோம்.
      அகிலத்தைக்காக்க வேண்டும் தேவிகளே.

    No comments: