அருள் வேண்டும் என்பர்
கருணை நிதி வேண்டும் என்பர்
நோயற்ற வாழ்வில் வாழவேண்டும்
மதி வேண்டும் என்பர்.
அவர்களே இறையன்பர்.
அசுரர் கேட்ட வரம் ஆசைகள் நிறைவேற
ஆணவம் தலைக்கேர
ஆண்டவனையே அடிமையாக்க
அகிலத்தில் அழிந்த பின்னும்
அழியாப்பழி ஏற்று நின்றார்.
புகழ் பாடி அருளும் கருணையும்
வேண்டி எளிமையில் வாழ்ந்த
அடியார் அழியாப் புகழுடன்
என்றென்றும் வாழும அமரர் ஆனார்.
எது நிலைத்த புகழ் ?
அது அவன் அருளே.
No comments:
Post a Comment