Tuesday, October 20, 2015

விஜயதசமி பிரார்த்தனை

    விஜய தசமி பிரார்த்தனை.
பட்டம் பெற்றவர்கள் ,

நடுத்தர வர்கத்தினர் 

குறைந்த கட்டணத்தில்

 மழலைகள் பள்ளிகள்
 திறந்து கல்விப்பணி ஆற்றிவந்தனர்.

 இதை ஒரு வரன் முறைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற 

அரசு சில நடைமுறைகளைக் கொண்டுவந்தது.

அதன் பலன் கல்விச்சாலைகள் பணம் கொண்டோர்களால்
 மிக முதலீடுடன் துவக்கப்பட்டு
 
அரசியல்வாதிகளால் முதலீடு செய்யப்பட்டு

 கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டு 

பட்டதாரிகள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்

 நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக முதலீடு ,வசதிகள் என்றால் 
அதற்குத்தக்க பணம் . 

சில அரசியல்வாதிகளின் பின்னணியில் நடத்தப்படும் 

பள்ளிகளில் பிரிகேஜிக்கே ஐம்பதாயிரம் நன்கொடை.

 கல்வி என்பது தியாகத்தையும் ,

தேசபக்தியையும் 

ஒழுக்கத்தையும் வளர்க்கவேண்டும்.

அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள்

 மாலை நேர தனி வகுப்பு ஊதியமே ஊதியம் என்ற நிலைக்கு

 கல்வித்தரம்  தாழ்ந்துள்ளது.

ஏழைகள் தங்கள் வசதிக்கேற்ற பள்ளிகள் நடத்தமுடியாத நிலை. 

அங்கு குறைந்த கட்டணத்தில் படிக்கமுடியாத நிலை. 

ஒரு தேநீர் கடையில் தேநீர் பத்துரூபாய். 

அங்கு ஏழைகள் செல்கின்றனர். 

அவ்வாறே வசதிக்கேற்ற கட்டணம் செலுத்தி 

கல்வி பயில அரசு அனுமதிக்கவேண்டும்.

அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன என்றால் அரசு ஏன்? என்ற வினா

எழுப்பி காரணங்கள் அறிந்தாலும் மௌனம் . ஏன்?

ஒருபள்ளியில் ஐந்து ஆசிரியர் என்றால் குறைந்த பக்ஷம் 

பதினைந்தாயிரம் என்றால் எழுபத்தைந்தாயிரம் மாதம் சிலவு.

 இரண்டாயிரம் பள்ளிகள் மூடப்பட்டால் அரசுக்கு


2000X75000= 15000000 அரசுக்கு ஒரு மாதத்திற்கு மீதம்.


ஆகவே அரசு பள்ளி அங்கீகர விசயத்தில் சற்று 

பணக்காரர்களே பலகோடி முதலீட்டார்களே பள்ளிகள் நடத்தமுடியும்

 என்ற நிலை தவிர்த்து நடுத்தர மக்களும் 

ஏழைகளுக்கேற்ற குறைந்த கட்டணத்துடன்

 நடத்த அனுமதி அளிக்கவேண்டும்

. ரசீதில்லா நன்கொடைகள் 

வாங்கப்படுவது சத்தியம். 

அர்த்ரத்திரியில் விண்ணப்ப படிவம் வாங்க பெற்றோர்கள் 

வரிசையில் நிற்கும் அநியாயம். 


மன சாட்சியுடன் சிந்தியுங்கள் .

 ஐம்பதாயிரம் எல்கேஜிக்கே நன்கொடை என்றால் 

அதுவும் சில பள்ளிகளில் அதிகம். 

எழு லக்ஷம் ஒருபள்ளியில் நன்கொடை பெற்றதாக செய்திவந்தது. 


கல்வியில் ஒழுக்கம் ஒதுங்கிவருகிறது. 

அரசும் பொதுமக்களும் சிந்திக்கவேண்டும்.

கல்வி மக்களுக்கு எளிதாக கிடைக்காததால்

 தான் விடுதலையாகியும் நாடு முன்னேறாமல் இருக்கிறது. 


ஆண்டவன் சாட்சியாக மனசாட்சியாக

 கல்வி அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

மரணம் நிச்சயம் நாடு இருக்கும்.

 நாம் எதையும் எடுத்துச் செல்வதில்லை என்று 

அரசியல் வாதிகளும் கல்வியின் பெயரால்

 ஏமாற்றி கட்டணம் வாங்குவோரும் சிந்திக்கவேண்டும். 
இதுவே இன்று விஜயதசமி பிரார்த்தனை யாகக் கொள்ளவேண்டும்.   

No comments: