Friday, October 30, 2015

அங்கே தான்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாஷமாக
இருக்கும் ஆண்டவன்
உள்ளத்தில் இருக்கிறான்
ஆலயத்தில்  இருக்கிறான்
தூணிலும் இருக்கிறான்.
துரும்பிலும் இருக்கிறான்.
இல்லாத இடம் இல்லை.
குருநானக் மெக்கா சென்றபோது
மசூதி நோக்கி கால் நீட்டி படுத்தார்.
அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கால்களை
மசூதி இல்லா பக்கம் வையுங்கள் என்றாராம்  .அப்போது
கால்கள் திருப்பும் பக்கமெல்லாம்
மசூதியும் சுற்றி வந்த நிகழ்ச்சி
கடவுள் எங்கும் இருக்கிறான்
எல்லாதிசைகளிலும் இருக்கிறான்
என்பதற்குச் சான்றாகிறது.
கபீர் சொல்கிறார்
பூவில் மணம் இருப்பது போல்

கஸ்தூரிமானின் நாபியில்
கஸ்தூரி    உள்ளது போல்
இறைவன் உனக்குள்ளே
இருக்கிறான்.
உள்ளத்துத் தூய்மையால்
ஆண்டவனை நாம் இருக்கும்
இடத்தில் காணலாம்.
மக்கா த்வாரகா பூரி ஜகன்னாத்
மதுரா புனித யாத்திரையால்
பயனில்லை.மனத்தூய்மையும் ஆழ்மன த்யானமும் இறைவனை
உள்ளத்தில் குடிபெயரச்செய்யும்
என் கடவுளைத்தேடிச் சென்றால்
எங்கு பார்த்தாலும் என் கடவுள்
கடவுளைத்தேடிச் சென்றால்
நானே கடவுள் ஆனேன் என்கிறார்
ஸ்ரீ சங்கராசாரியார் ஆதி சங்கரர்
அஹம் ப்ரம்மாஸ்மி
நானே கடவுள் என்கிறார்
திருமூலரும் இதையே உறுதிப் படுத்துகிறார்.
எங்கே இறைவன் உள்ளத்தில் இறைவன்  .உடல் ஆலயம்


No comments: