Sunday, October 11, 2015

அதுவே ஆனந்தம் .

அன்பை வளர்ப்பது பக்தி
ஆற்றல் தருவதும் பக்தி

இனியவை தருவது பக்தி

இன்னல் களைவது பக்தி

ஈகை வளர்ப்பதும் பக்தி

உள்ள அமைதிக்கும் பக்தி
ஊர் உலகம் செழிப்பிற்கும் பக்தி
எள்ளிநகையாடுவோர்,ஏளனம் செய்வோர்
ஐங்கரனைத்  தொழுதால்
ஒழிந்தே போவர் ஓடிப்போவர்
அஹ்தே  ஆன்றோர் காட்டும் அன்பு வழி
கணபதியைத்தொழுதே  காரியங்கள் ஆரம்பம்
சங்கடங்கள் தீர்க்க சங்கடஹர சதுர்த்தி
ஞானாம்பிகையின் ஞானகுமாரன்
டமருபிரியனின் கஜமுகத்தொன்
கணநாயகன் கார்ய சித்திக்கு .
தான்தோன்றிப் பிள்ளையார்
நன்மை செய்யும் பிள்ளையார்
நாடிவந்தோருக்கு  நலம் தரும் பிள்ளையார்
பக்தியுடன் பணிவோருக்கு முக்தி தரும் பிள்ளையார்
மனக்கிலேஷம் தீர்க்கும் மணக்குள பிள்ளையார் .

அன்பிற்கும் பண்பிற்கும் சேவைக்கும் பக்தி
பக்தியே ஒழுக்கம்,
ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
அதுவே ஆனந்தம் .




No comments: