ஒரே உலகம் எத்தனை சொற்கள் ,இவை தோன்றியது எப்படி?
இதில் வேற்றுமொளிகலப்புகள் வேறு ,
ஆடி அந்தமில்லா அந்த கடவுள் இறைவன் பகவான்
பகலவன் பரிதி சூரியன் ஒளி வெளிச்சம்
பகட்டு ஆடம்பரம் மாயை ஆட்டுவிக்கும் எண்ணங்கள்
மலைக்கிறோம் பிரமிக்கிறோம் திகைக்கிறோம்
வார்த்தைகள் விளையாடுகின்றன வையகத்தில்.
அனைத்தும் ஆறறிவு பெற்ற மனிதனை வியக்க வைக்கின்றன.
அனைத்திலும் ஒரு புதுமை.
பூவில் ,மனத்தில் ,பலன்களில் இலைகளில்
அவற்றின் சுவைகளில் அனைத்திலும் பிரமிப்பு.
நீரின் சுவை ,பாலின் சுவை தேனின் சுவை
அவனின் சுவை அறியா மானிடனின் சுவை
அவன் சுவை அறிந்த ஞானியின் செயல்பாடு
உருவமா?அருவமா ?
மதமா ?மாற்றமா ? மனிதநேயமா ?
அனைத்திலும் ஆண்டவனின் அதிசயம் அற்புதம் .
மதங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் அனைத்தும் மீறிய காதல்
நாடு ,இனம் குணம் மீறிய திருமணங்கள்,
எதிலும் எங்கும் அதிசயம்.