Monday, December 23, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

2 comments:

sury siva said...

எல்லாம் தடை மாயம்.//

தடை அல்ல சாமி.

எல்லாமே தண்டனை.

சில கசப்பது போல இருந்து பின் தித்திக்கின்றன.
பல தித்திப்பது போல தோன்றி , பின் கசக்கின்றன.

மல்லிகை பூ விற்பவளும் கருவாடு விற்பவளும்
ஒருவரை ஒருவர் குறை சொன்ன கதை தானே
வாழ்வு.

சுப்பு தாத்தா.

இத்தனைக்கும் மத்தியிலே
ஹாப்பி ந்யூ இயர் .

இராய செல்லப்பா said...

உண்மை தான்! இறைவனை அடைய இவ்வளவு தடைகள் இருப்பதால் தான் சுலபமான வழியாக 'இறைவனே இல்லை' என்று சிலர் ஆரம்பித்தார்களோ?